Jul 30, 2011

நீயே சொல் - 08



*

ஒரு 
சொல் யோசிக்க
நீ
ஒதுக்கும்
நொடிப்பொழுதையும்
வீணாடிக்காமல்,

இதழ் மீது
சாய்ந்து
ஓய்வெடுக்கும்
உன்
எழுது கோலாய்
இருந்திருக்கலாம்
என் மீசை.


***


இவ்வுலகை
எழுத
இங்கே
அநேகம் பேர்
அவதரித்திருக்கிறார்கள்

உன்னை
எழுத 
உயிரூட்டப் பட்டவன்
நான்
ஒருவன் மட்டுமே!

வேறெதுவும்
எழுத வராதா
என்பவர்களுக்கு
வேறென்ன
சொல்லட்டும்
 நீயே சொல் ...?

28 comments:

  1. மீசையின் ஆசை நல்லாத்தானிருக்கு

    ---------

    வேறன்ன

    பதில் சொல்வது ஈஸி பாஸ் ...

    ReplyDelete
  2. //வேறன்ன

    பதில் சொல்வது ஈஸி பாஸ் ...//

    அப்படின்னா,

    கேள்வி கேக்குறதுதான் கஷ்டமா மாப்ள?

    ReplyDelete
  3. மீசை நரைச்சாலும் ஆசை நரைக்காது போல

    ReplyDelete
  4. ரொம்ப நல்லாருக்குங்க...

    ReplyDelete
  5. what a imagination boss.congrats.superb

    ReplyDelete
  6. //வேறென்ன
    சொல்லட்டும்
    நீயே சொல் ...?//

    அவங்க என்ன சொல்வாங்க! வெட்கத்துல வார்த்தையே வரல! நன்று

    ReplyDelete
  7. அருமையா இருக்கு!ஆத்துக்காரம்மாட்ட பாடி காமிச்சிட்டீங்களா?!

    ReplyDelete
  8. கவியா...காதலரா...இரண்டுமா...எப்படியாயினும் அருமை...

    ReplyDelete
  9. இதழ் மீது
    சாய்ந்து
    ஓய்வெடுக்கும்
    உன்
    எழுது கோலாய்
    இருந்திருக்கலாம்
    என் மீசை.\\\\\
    இதழில்"பதிக்க" அவ்வளவு ஆசையோ!
    அந்த மீசை{காரரு}க்கு!!முத்தம் கேட்க இப்படியொரு வழியா?

    ReplyDelete
  10. உன்னை
    எழுத
    உயிரூட்டப் பட்டவன்
    நான்
    ஒருவன் மட்டுமே!\\\\
    "அந்த" உயிர் உடனாஆஆஆஆஆஆஆஆஆ!

    ReplyDelete
  11. வேறெதுவும்
    எழுத வராதா
    என்பவர்களுக்கு
    வேறென்ன
    சொல்லட்டும்
    நீயே சொல் ...?\\\\
    வருமே! வராதென்று சொன்னது
    யார்? வரும்,வரும் ....."கவிதை"
    இருந்தால்,,,

    ReplyDelete
  12. மீசைக்காரரருக்கு ஆசையைப் பாரு.கன்னியில்லாத்தீவில சட்டம் போடச் சொல்லணும் யாரும் மீசை வச்சிருக்ககூடாதுன்னு.ஒருத்தருக்கு மட்டும் சட்டம் விதிவிலக்கு...!

    உயிரூட்டப்பட்டவனால் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது காதல்...வேறென்ன...?

    ReplyDelete
  13. me the following hema comment

    2nd one

    //உன்னை
    எழுத
    உயிரூட்டப் பட்டவன்
    நான்
    ஒருவன் மட்டுமே!
    //

    இன்னும் உயிரோட்டமாய் இந்த வார்த்தை மனசுகுள்ள ஒட்டிக்கிச்சி சத்ரியன்....

    ReplyDelete
  14. சின்ன சின்ன சொல்முத்து
    செந்தமிழாம் தேன்குழைத்து
    அன்ன நடை போடுமிந்த பாடல்
    அழகுமயில் ஆடுகின்ற ஆடல்

    அருமை! எளிமை! பெருமை!

    வலைச்சரத்தில் கண்டு
    வந்தேன்! வாருங்களேன் என்
    வலைப் பக்கம்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. இதழ் மீது
    சாய்ந்து
    ஓய்வெடுக்கும்
    உன்
    எழுது கோலாய்
    இருந்திருக்கலாம்
    என் மீசை.


    ....sweet!!!! very nice!!!!! :-)

    ReplyDelete
  16. ரொம்ப நல்லாருக்குண்ணே,

    //உன்னை
    எழுத
    உயிரூட்டப் பட்டவன்
    நான்
    ஒருவன் மட்டுமே!//

    சூப்பர்...

    ReplyDelete
  17. இரண்டு கவிதையும் நல்லாயிருக்கு அண்ணே.. :))

    ReplyDelete
  18. இரண்டு கவிதையும் நல்லாயிருக்கு

    இதழ் மீது
    சாய்ந்து
    ஓய்வெடுக்கும்
    உன்
    எழுது கோலாய்
    இருந்திருக்கலாம்
    என் மீசை.

    this line super satriyan

    ReplyDelete
  19. வினோத ஆசைதான் ...
    சிந்தனை மிகவும் சிறப்பு ...

    ReplyDelete
  20. வணக்கம்ணே,

    'மூன்று விஷயங்கள்' தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள் நன்றி!

    ReplyDelete
  21. கண்ணன் இந்த கவிதை சமாச்சாரமெல்லாம் அப்படியே ஒரு ஓரமாக இருக்கட்டும். மெதுவாக நாம் கவிப்பேரரசு ஆகலாம். இப்போது நீங்க வாழும் சூழ்நிலையில் சந்தித்துக் கொண்டிருக்கும் மனிதர்களை உள்வாங்கி, அந்த சூழ்நிலைகள் போன்றவற்றை சிறிய பத்திகளாகக்கூட எழுதலாமே?

    ReplyDelete
  22. கவிதையும் ஆசையும் (சரியான ஆசைதான்????) ரொம்ப நல்லா இருக்கு. ஆனா அந்தப் புள்ள ஏழுதுகோலை மாத்திடுமே...

    ReplyDelete
  23. //உன்
    எழுது கோலாய்
    இருந்திருக்கலாம்
    என் மீசை.//

    அட்டகாசம்... என் மீசையை

    ”இருத்திருக்கலாம் என ஆசை”ன்னு கூட வச்சுக்கலாம் இல்ல.. :-)

    ReplyDelete
  24. //இவ்வுலகை
    எழுத
    இங்கே
    அநேகம் பேர்
    அவதரித்திருக்கிறார்கள்

    உன்னை
    எழுத
    உயிரூட்டப் பட்டவன்
    நான்
    ஒருவன் மட்டுமே!//

    இப்பல்லாம் எல்லாரும் இதை மட்டும் தான் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்....
    அருமை... அருமை..

    ReplyDelete
  25. பல நாட்கள் தொடர்ந்து முத்தமிட்ட தம்பதியராக கின்னஸ் ரெகார்ட்-ல் இருப்பவரை தோற்கடிக்க நீர் தான் சரியானவர் என நினைக்கிறேன்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.