May 24, 2012

தோற்றவனுக்காகதேர்வில் தோல்விக்கு
உயிர் துறக்க துணியும் மூடா
என்னிடம் உன்
செவியைக் கொஞ்சம் தாடா.

உறைக்குள் உறங்கும் உடைவாளுக்கு
உதிரச்சுவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மதியென்னும் உடைவாளை விதி என்னும்
உறையிட்டே வைத்திருக்கிறாய் நீ.

உருவியெடு உடைவாளை
வெட்டி வீழ்த்து விதிகளை
வெற்றி உன்னை சுற்றிச்சுற்றி
வட்டமிடும் பார்.

உலகத்துக்கானவன் அல்ல நீ
உனக்கானது இவ்வுலகு என்பதை உணர்
வெற்றிச்சிகரத்தைத் தொடாமல்
நெற்றிக்கண்ணை உறங்கவிடுவதில்லை என
உறுதி கொள்
உச்சிதனை முகரும் உறவுகள் பார்.

புரவி ஏறி புழுதி பறக்க விரைந்து
போரிட்டு உலகை வெல்வது கடினம்
காலம் மாறிவிட்டதை கவனி
விரல் அசைவில் நீ வெல்ல முடியும் உலகை
அவ்வித்தை கற்கச் செல்ல வேண்டிய இடம் கல்விச்சாலை

இன்று தோற்றால் தான் என்ன
மீண்டும் பயிலச் செல்
நாளை கனவுகளை வெல்.
18 comments:

 1. தேர்வின் தோல்வி தேர்வுக்கானது மட்டுமே
  வாழ்க்கைக்கானதல்ல மாணவா

  தோல்வியை வெற்றியாக மாற்றிட சந்தர்ப்பம் கிடைக்கும் அல்லது ஏற்படுத்து, வாழ்க்கையை தொலைத்தால் பெற்றிட இயலா ...

  ReplyDelete
 2. //இன்று தோற்றால் தான் என்ன
  மீண்டும் பயிலச் செல்
  நாளை கனவுகளை வெல்.//

  ரெம்ப
  சரியா சொன்னீர்கள் நண்பா
  இந்த மடையர்களை பார்க்கையில் வேதனையா இருக்கு

  ReplyDelete
 3. சரியான நேரத்தில் மிகச் சரியான கவிதை
  பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நல்ல சமயத்தில் நம்பிக்கையூட்டும் கவிதை.நிறைய மாணவர்களிடம் இந்தக் கவிதை போய்ச்சேரவேண்டுமே !

  ReplyDelete
 5. தோல்விதான் வெற்றியின் முதற் படி! இதை மாணவர்கள் உணரவேண்டும்!உணர்வார்களா...?
  காலத்தில் வந்த கவிதை!
  நன்று!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 6. விழுந்தவன் என்றுமே முண்டம் இல்லை.
  விழுந்த பிறகும் எழுந்து நடக்காதவன் தான் முண்டம்.
  இதை முதலில் பெற்றோர் உணர வேண்டுங்க. பிள்ளைக்ளுக்குச் சரியான தன்னம்பிக்கையை ஊட்டாமல் திட்டுகிறார்கள்....
  பாவங்க பிள்ளைகள்.

  ReplyDelete
 7. அருமையான கவிதை.
  தோல்வியின் முடிவு தற்கொலைதானா?

  ReplyDelete
 8. இன்று தோற்றால் தான் என்ன
  மீண்டும் பயிலச் செல்
  நாளை கனவுகளை வெல்.\\\\\\

  எந்தவகையிலாவது..
  தோல்வியைச் சந்திக்காத
  மனிதர்கள
  உலகத்தில் இல்லை
  நாம் எப்படித்தான் எடுத்துரைத்தாலும்...
  நடந்து கொண்டேதான் இருக்கும்
  எதையும் தாங்கும் மனப்பக்குவம்
  வரும்வரை......

  ReplyDelete
 9. உலகத்துக்கானவன் அல்ல நீ
  உனக்கானது இவ்வுலகு என்பதை உணர்

  -மனசில நின்ன வரிகள் தம்பி. இந்தத் தன்னம்பிக்கை இருந்துட்டா, தற்கொலைன்ற எண்ணம் வருமா? கீழ விழாம நடக்கறது எவராலயும் முடியாது. விழுந்தவன் எழணும். அதானே வாழ்க்கை? அதைப் புரிஞ்சுக்காததாலதானே தற்கொலை! விழிப்புணர்ச்சிக்கான அருமையான கவிதை! வாழ்த்துக்கள் பிரதர்!

  ReplyDelete
 10. வணக்கம் சகோதரரே
  நலமா?
  தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள்
  பலர் சிறந்த சாதனையாளர்கள் என
  உருவெடுத்த சம்பவங்கள் ஏராளம்..

  காலம் கருதி
  செவ்வனே வடித்திருக்கும்
  அழகிய சிந்தனைக் கவி..

  ReplyDelete
 11. தேர்வில் தோல்விக்கு
  உயிர் துறக்க துணியும் மூடா
  என்னிடம் உன்
  செவியைக் கொஞ்சம் தாடா.// மிகசிறந்த ஆக்கம் மிகசிறந்த ஆற்றுப் படுத்துத்டல் பாராட்டுகள்

  ReplyDelete
 12. வலைச்சரம் வாங்க
  http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

  ReplyDelete
 13. ''...மதியென்னும் உடைவாளை விதி என்னும்
  உறையிட்டே வைத்திருக்கிறாய் நீ...''

  சுப்பர் சொல்லாடல். மிக நல்ல கவிதை. சிறப்புகள் பெருகட்டும். நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 14. // மதியென்னும் உடைவாளை விதி என்னும்
  உறையிட்டே வைத்திருக்கிறாய் நீ.// உண்மைதான் அதை உரையில் இருந்து எடுக்க பெற்றோர் முன்வரவேண்டும் ........தேவைதான் இன்றைய இளைங்கர்களுக்கு இந்த போதனை .........

  ReplyDelete
 15. காலத்துக்கு ஏற்ற தன்னம்பிக்கையளிக்கும் பதிவு நண்பா.

  ReplyDelete
 16. நான் மட்டும் ஏன் வாழக்கூடாது!!

  என்னும் தங்கள் இடுகையோடு தொடர்புடைய இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன் நண்பா.

  http://www.gunathamizh.com/2011/12/blog-post_2484.html

  ReplyDelete
 17. வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிகவும் அருமை.

  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன் ,
  என்னுடைய வலைப்பூக்கு ஆதரவு தரும் படி வேண்டுகின்றேன்

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.