Apr 8, 2013

காத்திருப்பு


நேரம் கடத்த
சிறு கற்களெடுத்து
குளத்து நீரில் எறிந்துக் கொண்டிருந்தேன்.

எனக்கும்
நிழல் விரித்துக் கொண்டே
பழுத்த இலைகளை
கிள்ளியெறிந்துக் கொண்டிருந்தது மரம்.

என் காத்திருப்பு
அவளின் வருகைக்காக

மரத்தின் காத்திருப்பும்
அவளுக்காகத்தான் இருக்குமோ?

**

6 comments:

  1. ரசித்தேன்...

    அவ்வப்போதாவது தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை...
    ரசித்தேன்....

    ReplyDelete
  3. காமாலை வந்தவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாம்...

    காதலிக்காகக் காத்திருப்பவனுக்கு காண்பதெல்லாமே அவளுக்காய்க் காத்திருப்பதாய்த் தோன்றுகிறதோ?

    ரசனை மிகுந்த காதலர் ஐயா நீவிர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு...
    முதல் தடவையாக உங்கள் வலைத் தளத்துக்கு வந்தேன் நல்ல விருந்து உண்ட சந்தோசம்

    ReplyDelete
  5. ரசனை.

    "மரத்தின் காத்திருப்பும்
    அவளுக்காகத்தான் இருக்குமோ? "

    மரத்தின் மீது கோபம் வரவில்லையா ? :))))

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.