Sep 18, 2014

காற்றானவள்


ரையோரம் இறங்கி
காற்றைத் தொட்டு சிலிர்த்தான்
காற்றை வாரி இறைத்தான்
காற்றினில் இறங்கி நீந்தினான்
கரையேறி துவட்டினான்
காற்றைக் கிள்ளியெடுத்து உண்டான்
காற்றை அள்ளிப் பருகினான்
படிக்கல்மேல் அமர்ந்திருக்கும்
காற்றின் அருகே அமர்ந்தான்
காற்றைத் தோள்சாய்த்து முத்தமிட்டான்
காற்றோடு கை கோத்து நடந்து
காற்றுவெளியில் தூரப்புள்ளியானான்
அவனுக்கு எல்லாமே அவள் தான்
காற்றாகிப் போனவள்

*

4 comments:

  1. காற்றாகிப் போனவள்... அருமை...

    ReplyDelete
  2. இல்லாதவளை இருப்பதற்கு உவமையாக.....
    அருமை.

    ReplyDelete
  3. காற்றில் கலந்தேன்
    காற்றோடு பறந்தேன்...
    இன்கவி கண்டு...

    ReplyDelete
  4. தென்றலாய் .... காற்றானவள்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.