05
' திருமண நிச்சயம் ’
பெரியோர்களால்
நிச்சயிக்கப் பட்டு விட்டது.
` நாள், நட்சத்திரம் ’
குறித்தாகி விட்டது.
` அழைப்பிதழ் '
அதுவும் அச்சாகி விட்டது.
‘ ஊர் உறவுகளை '
அழைத்தாகி விட்டது.
எஞ்சியிருப்பது
இடைப்பட்ட
இரு நாட்கள் மட்டும் தான்.
ஒற்றை அழைப்பிதழைக்
கையில் வைத்து
மணமகள் பெயரை
உற்று உற்று பார்த்தபடி...
திரைப்படங்களில் நிகழும்
திருப்புமுனை காட்சி போல்
அதிசயம் எதுவும் நிகழ்ந்து
` இவள் ' பெயருக்கு பதிலாய்
` உன் பெயர் ' முளைத்திடாதா? ...என
உள்ளுக்குள்
முனகித் தவிக்கும்
மனதை என்ன செய்யலாம்....?
' திருமண நிச்சயம் ’
பெரியோர்களால்
நிச்சயிக்கப் பட்டு விட்டது.
` நாள், நட்சத்திரம் ’
குறித்தாகி விட்டது.
` அழைப்பிதழ் '
அதுவும் அச்சாகி விட்டது.
‘ ஊர் உறவுகளை '
அழைத்தாகி விட்டது.
எஞ்சியிருப்பது
இடைப்பட்ட
இரு நாட்கள் மட்டும் தான்.
ஒற்றை அழைப்பிதழைக்
கையில் வைத்து
மணமகள் பெயரை
உற்று உற்று பார்த்தபடி...
திரைப்படங்களில் நிகழும்
திருப்புமுனை காட்சி போல்
அதிசயம் எதுவும் நிகழ்ந்து
` இவள் ' பெயருக்கு பதிலாய்
` உன் பெயர் ' முளைத்திடாதா? ...என
உள்ளுக்குள்
முனகித் தவிக்கும்
மனதை என்ன செய்யலாம்....?
அதே போன்ற எதிர்ப்பார்ப்புடன் தான் நானும்.
ReplyDelete------------
கவிதை அழகு - டெம்ப்ளேட்டும்
இவள் ' பெயருக்கு பதிலாய்
ReplyDelete` உன் பெயர் ' முளைத்திடாதா? ...என
இந்த நிலையை சந்தித்த எல்லாருக்கும் இருக்கும் மன நிலை....ம்ம்ம்ம்ம்
//` இவள் ' பெயருக்கு பதிலாய்
ReplyDelete` உன் பெயர் ' முளைத்திடாதா? ...என
உள்ளுக்குள்
முனகித் தவிக்கும்
மனதை என்ன செய்யலாம்....? //
Superb......!
Excellent Words.
அப்படி முளைச்சிருந்தா உன் வாழ்க்கை.... இப்படி இருந்திருக்காது....
ReplyDeleteநல்லாயிருந்திருக்குமா...
நீயே சொல்?
இதை அப்படியே என் தங்கச்சி பார்வைக்கு அனுப்பவா?
//அதே போன்ற எதிர்ப்பார்ப்புடன் தான் நானும்.
ReplyDelete------------
கவிதை அழகு - டெம்ப்ளேட்டும்//
வாங்க மாப்ள,
வேணும்யா...எனக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்!
//இவள் ' பெயருக்கு பதிலாய்
ReplyDelete` உன் பெயர் ' முளைத்திடாதா? ...என
இந்த நிலையை சந்தித்த எல்லாருக்கும் இருக்கும் மன நிலை....ம்ம்ம்ம்ம்//
தமிழரசி,
பெரும்பாலானோருக்கு நிகழ்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
நன்றிங்க.
////` இவள் ' பெயருக்கு பதிலாய்
ReplyDelete` உன் பெயர் ' முளைத்திடாதா? ...என
உள்ளுக்குள்
முனகித் தவிக்கும்
மனதை என்ன செய்யலாம்....? //
Superb......!
Excellent Words.//
வாங்க குமார்,
பாராட்டைப் பார்த்தால் பழசையெல்லாம் கிளரிடுச்சி போல... ம்ம்ம்ம்ம்!
//அப்படி முளைச்சிருந்தா உன் வாழ்க்கை.... இப்படி இருந்திருக்காது....
ReplyDeleteநல்லாயிருந்திருக்குமா...
நீயே சொல்?
இதை அப்படியே என் தங்கச்சி பார்வைக்கு அனுப்பவா?//
வாங்க மாமா,
தங்கச்சிய எனக்கு கட்டிக்குடுத்தீங்க சரி.
தங்கச்சி கிட்ட என்னைய காட்டிக் குடுக்க நெனைக்கிறீங்களே இது நல்லாவா இருக்கு?
நீயே சொல்...!
எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி விடமுடியாது என நான் பல நேரங்களில் நினைப்பதுண்டு.
ReplyDeleteஇதைப் போன்றவைக் கண்ணில் தென்படுகின்ற நேரத்தில், ஏனோ நுரையீரல் அதிகக் காற்றை உள்ளிளுக்க/வெளியேற்ற முயற்சிக்கிறது.
விரும்பியது கிடக்காவிட்டாலும் கிடைத்ததையாவது விரும்ப வேண்டும்.
உள்ளுக்குள்
ReplyDeleteமுனகித் தவிக்கும்
மனதை என்ன செய்யலாம்....?
........... nice one.
ஹையோ! சூப்பர்!
ReplyDeleteரொம்ப பிடிச்சிருக்கு மாப்ள!
ReplyDelete//இவள் ' பெயருக்கு பதிலாய்
ReplyDelete` உன் பெயர் ' முளைத்திடாதா? ...என
//
டெக்னிக்கல் கவிஞரய்யா நீர்...
//எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி விடமுடியாது என நான் பல நேரங்களில் நினைப்பதுண்டு.
ReplyDeleteஇதைப் போன்றவைக் கண்ணில் தென்படுகின்ற நேரத்தில், ஏனோ நுரையீரல் அதிகக் காற்றை உள்ளிளுக்க/வெளியேற்ற முயற்சிக்கிறது.
விரும்பியது கிடக்காவிட்டாலும் கிடைத்ததையாவது விரும்ப வேண்டும்.//
வாங்க மச்சான்,
எங்கடா இன்னும் காணமேன்னு பாத்தேன்.
அன்னைக்கி ராத்திரி பூரா பத்திரிக்கைய வெச்சிக்கிட்டு தடவி தடவி பாத்தியே... அத இன்னும் மறக்கல போல இருக்கு...! ஆனா நான் இன்னும் மறக்கல.
//உள்ளுக்குள்
ReplyDeleteமுனகித் தவிக்கும்
மனதை என்ன செய்யலாம்....?
........... nice one.//
நன்றிங்க சித்ரா.
//வாழ்த்துக்கள்...//
ReplyDeleteநன்றிங்க தியா.
//ஹையோ! சூப்பர்!//
ReplyDeleteஅன்புடன் அருணா.
ஆ..........! நிஜம் தானே.?
//ரொம்ப பிடிச்சிருக்கு மாப்ள!//
ReplyDeleteபா.ரா,
மாமா அங்கயும் அப்பிடித்தானா...? அப்ப செரிதான்...!
////இவள் ' பெயருக்கு பதிலாய்
ReplyDelete` உன் பெயர் ' முளைத்திடாதா? ...என
//
டெக்னிக்கல் கவிஞரய்யா நீர்...//
வசந்த்,
டெக்னிக்கல் எல்லாம் ஒன்னும் இல்ல. நம்ம வேளாண்மை கோஷ்டி.
நன்றி புது MP.
உள்ளுக்குள்
ReplyDeleteமுனகித் தவிக்கும்
மனதை என்ன செய்யலாம்....?\\\\\
இப்பவாவது உங்க மனதை ஒத்துகிட்டதற்கு
கோடி நன்றி.
அது ஒன்றுக்காகவா தவிக்கும்!
அப்பப்பா.......................
கருணாகரசு சரியாகச் சொல்லி இருக்கின்றீர்கள்
அரங்கப்பெருமாளின்.....பழைய ஞாபகங்கள்
வந்திரிச்சுபோல....
அதுசரி அதென்ன? எனக்குத் தெரியாமல்
புதுப்பட்டம்{வசந்துக்கு}எம் பி???
நினைத்ததை விட கிடைத்தது பரவாயில்லை என்று தான் பலபேர் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது
ReplyDeleteவாழ்த்துக்கள்
விஜய்
கிடைத்ததே நமக்கு அதிகம் சத்ரியன்... எனவே கிடைக்காததை நினைத்து ஏங்க வேண்டாம்
ReplyDeleteகவிதை அழகு!
ReplyDelete//உள்ளுக்குள்
ReplyDeleteமுனகித் தவிக்கும்
மனதை என்ன செய்யலாம்....?\\\\\
இப்பவாவது உங்க மனதை ஒத்துகிட்டதற்கு
கோடி நன்றி.
அது ஒன்றுக்காகவா தவிக்கும்!
அப்பப்பா.......................//
கலா சொல்றத பாத்தா என்னைய “சத்ரியானந்தா” -ரேஞ்சுக்கு பரப்பிவிடுவாங்க போலிருக்கே....!
//கருணாகரசு சரியாகச் சொல்லி இருக்கின்றீர்கள்//
இவரு.....!
//அரங்கப்பெருமாளின்.....பழைய ஞாபகங்கள் வந்திரிச்சுபோல....//
இருக்காதா பின்னே?
//அதுசரி அதென்ன? எனக்குத் தெரியாமல் புதுப்பட்டம் {வசந்துக்கு}எம் பி???//
புது MP-ன்னா “புது மாப்பிள்ளை”-ன்னு அர்த்தம்....!
பாப்பாக்கு இது கூட தெரியில.
//நினைத்ததை விட கிடைத்தது பரவாயில்லை என்று தான் பலபேர் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது
ReplyDeleteவாழ்த்துக்கள்
விஜய்//
அண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்...!
//கிடைத்ததே நமக்கு அதிகம் சத்ரியன்... எனவே கிடைக்காததை நினைத்து ஏங்க வேண்டாம்..//
ReplyDeleteதேன்,
வாஸ்தவம் தான்..! ( இந்த கவிதையின் ’கரு’விற்கு சொந்தக்காரரிடம் தெரிவிக்கிறேன்)
நன்றி.
//கவிதை அழகு!//
ReplyDeleteப்ரியா,
கையில் பிடித்திருக்கும் அந்த பூ போல...!
நன்றிங்க.
என்னதான் இருந்தாலும் முதல் காதலை மரகமுடியவிலையா
ReplyDeleteஇப்படி எத்தனை காவியங்கள்
வேதனையை கிளப்புகின்றது
//உள்ளுக்குள்
ReplyDeleteமுனகித் தவிக்கும்
மனதை என்ன செய்யலாம்....?//
மனதை ஒன்னும் செய்யவேண்டாம்... வீட்டுக்காரம்மாகிட்ட சொன்னா சரியாப்போயிடும்....
//என்னதான் இருந்தாலும் முதல் காதலை மரகமுடியவிலையா
ReplyDeleteஇப்படி எத்தனை காவியங்கள்
வேதனையை கிளப்புகின்றது//
யாதவா,
சரக்கு வேறொருத்தருடையது. சொற்கள் மட்டும்தான் அடியேனுடையது.
////உள்ளுக்குள்
ReplyDeleteமுனகித் தவிக்கும்
மனதை என்ன செய்யலாம்....?//
மனதை ஒன்னும் செய்யவேண்டாம்... வீட்டுக்காரம்மாகிட்ட சொன்னா சரியாப்போயிடும்....//
பாலாசி,
வாயில வெரல வெச்சிக்கிட்டு இருக்குற குழந்த பேசற பேச்சா இது...?
பெரிய மனுசத்தனமா இல்ல இருக்கு...!