May 25, 2010

நீயே சொல் - 07

07

நாளுக்கு நாள்
ஆழப்பட்டுக்கொண்டே போகும்
நிலத்தடி நீரைப்போல

உன்
காதல் என்னுள்
மீளமுடியா ஆழம் தேடி
மூழ்க முயலும்
மாயம் என்ன...?





35 comments:

  1. படமும், படத்திற்கு ஏற்ற கவிதையும் கலக்கல்....

    ReplyDelete
  2. இது ஆழ்மனத்திலிருந்து வெளிப்பட்ட ஆழ்மனக் காதலோ? நல்ல ஆழம் தான் காதல்!

    ReplyDelete
  3. ரொம்ப ஆழமா போயிட்டீங்கன்னு நினைக்கிறேன்.... நமக்கு அந்த கெணத்தப்பாத்தாலே பயமாயிருக்குங்க...

    சூப்பர்.....

    ReplyDelete
  4. என்ன என்ன என்ன ? கே பி சுந்தராம்பாளைப்போல் ?
    நிஜம்மாவே தெரியாதாங்காட்டியும்?

    ReplyDelete
  5. ஊர்ல எடுத்த படமா மாப்ள?

    ரொம்ப பொருத்தமான கவிதையும்.

    சீக்கிரம் டிக்கட் புக் பண்ணுங்க மாப்ஸ். கவிதை இதைத்தான் உணர்த்துது. சாரல், இதோ, அப்பா on the way! :-)

    ReplyDelete
  6. வாவ்...அன்பின் ஆழம் உங்கள் கவிதையின்
    ஆழத்தில் இருந்து நன்றாகப் புரிகிறது.

    ஆமா காதோடு...மெதுவா,மெதுவா எனக்கு
    மட்டும் “அந்த” இரகசியத்தை சொல்லபடாதா?

    நிசமா நான் கருணாகரசிடமோ,ஹேமாவிடமோ
    தப்பித் தவறிக் கூட மூச்சு விடமாட்டேன்

    நம்பலாமில்ல...

    ReplyDelete
  7. மூழ்க முயலும்
    மாயம் என்ன...?\\\\\\
    ஜய்யய்யோ...யாராவது முழுவதும்
    {இதயம்}
    மூழ்க முதல் நல் வழிப்படுத்தி
    கரைசேர்க்க முடியாதா?
    முயற்சி செய்யுங்கள்
    பாவம் சத்ரியன்
    காதல் சுழற்சியில் மாட்டித்
    தவியாய்த் தவிக்கிறார்!

    ReplyDelete
  8. நல்ல ஆஆஆழமாஆஆஆஆன கவிதை... :-)

    ReplyDelete
  9. சத்ரியா,முதலில் நன்றி சொல்ல
    மறந்து விட்டேன் மிக்க நன்றி

    முகப்புப் படத்தை மாற்றியதற்கு

    ஹேமா நீங்கள் பார்க்கவில்லையா?
    ஆண{கண்} ழகர் திரும்பி வந்ததை!
    ம்ம்ம்ம்ம....இன்னும் எத்தனை பேரோ..!!??

    ReplyDelete
  10. க‌விதையின் ஆழ‌மும், ப‌ட‌த்தின் ஆழ‌மும் அழ‌கு அண்ணே...

    ReplyDelete
  11. கவிதை அழகு....

    ஆழம் செல்லச்செல்ல தண்ணீரைப்போல காதலும் வறண்டே போய் விடப்போகிறது சத்ரியன்

    ReplyDelete
  12. //
    உன்
    காதல் என்னுள்
    மீளமுடியா ஆழம் தேடி
    மூழ்க முயலும்
    மாயம் என்ன...?
    //

    வேற ஆள் கிடைச்சிருச்சின்னு அர்த்தம்

    ReplyDelete
  13. 8 இன்ச் போர் போடவேண்டியதுதானே சும்மா தமாஷ்)

    நல்லா இருக்கு நண்பா

    விஜய்

    ReplyDelete
  14. ஆழமாத்தான் இருக்கு!

    ReplyDelete
  15. சத்ரியா...பயங்கரமான ஆள்தான் நீங்க.எங்கட வைரவ கோயிலடிக் கிணறுபோலக் கிடக்கு இவ்வளவு ஆழமா.ஆழக் கிணறு அதிலயும் மூழ்கிறதோ !

    சுகம் வரும்
    ஆனா ஆள் தப்பாது தம்பி !


    ஓமெண்டுறன் கலா
    ....படம் மாத்திட்டார் !

    ReplyDelete
  16. ஆனா ஆள் தப்பாது “தம்பி” !\\\

    பாவம் என்ர புள்ள.....
    இந்தச் சொல் அம்{ன்}பால்..
    சுருண்டுவிட்டானடி
    இப்படியொரு பாணம் விடலாமா?

    மனக் கோட்டை .....?????

    ReplyDelete
  17. //படமும், படத்திற்கு ஏற்ற கவிதையும் கலக்கல்...//

    நன்றி சங்கமேஷ்வரன்.

    ReplyDelete
  18. //புதுமைதான் !//

    நன்றிங்க சங்கர்.

    ReplyDelete
  19. //இது ஆழ்மனத்திலிருந்து வெளிப்பட்ட ஆழ்மனக் காதலோ? நல்ல ஆழம் தான் காதல்!//

    ஆமாங்க ராஜ், இது ரொம்ப ஆழமானது.

    ReplyDelete
  20. //ரொம்ப ஆழமா போயிட்டீங்கன்னு நினைக்கிறேன்.... நமக்கு அந்த கெணத்தப்பாத்தாலே பயமாயிருக்குங்க...

    சூப்பர்...//

    நான் ஆழமா போயிடல பாலாசி. உள்ள்ள்ள்ள காதல் ஆழமா ஊடுருவி போயிடுச்சி.

    (கெணத்த படத்துல பாக்கறதுக்கே பயமாயிருக்கா..? செரிதான்.)

    ReplyDelete
  21. //என்ன என்ன என்ன ? கே பி சுந்தராம்பாளைப்போல் ?
    நிஜம்மாவே தெரியாதாங்காட்டியும்! //

    நெஜம்ம்ம்ம்ம்ம்மாத் தெரியில பத்மா.

    ReplyDelete
  22. //ஊர்ல எடுத்த படமா மாப்ள?

    ரொம்ப பொருத்தமான கவிதையும்.

    சீக்கிரம் டிக்கட் புக் பண்ணுங்க மாப்ஸ். கவிதை இதைத்தான் உணர்த்துது. சாரல், இதோ,அப்பா on the way! :-)//

    மாமா,

    படம் “கூகிள்”ல தேடி எடுத்தது.
    (கூகிளுக்கு நன்றி)

    டிக்கெட் வாங்கிட்டேன் மாமா. நாள எண்ணிக்கிட்டிருக்கேன்.

    சாரல்தான் கண்ணுக்குள்ளயே....!

    ReplyDelete
  23. //வாவ்...அன்பின் ஆழம் உங்கள் கவிதையின்
    ஆழத்தில் இருந்து நன்றாகப் புரிகிறது.//

    புரிஞ்சா சரிதான்.

    //ஆமா காதோடு...மெதுவா,மெதுவா எனக்கு மட்டும் “அந்த” இரகசியத்தை சொல்லபடாதா?//

    சொல்லலாந்தான். ஆனா பாருங்க ஹேமா சொல்ல வேண்டாங்கிறா.

    //நிசமா நான் கருணாகரசிடமோ, ஹேமாவிடமோ தப்பித் தவறிக் கூட மூச்சு விடமாட்டேன்

    நம்பலாமில்ல...//

    ம்ம்ம்ஹூம்... இதுக்கப்புறம் நம்புவேன்னு நெனைக்குறீங்க?

    ReplyDelete
  24. //நல்லா இருக்குங்க.//

    நன்றிங்க இராமசாமி கண்ணன்.

    ReplyDelete
  25. //நல்ல ஆஆஆழமாஆஆஆஆன கவிதை... :-)//

    ஆமாங்க சித்ரா,

    ரொம்ம்ம்ம்ம்ப ஆழம்!

    ReplyDelete
  26. //க‌விதையின் ஆழ‌மும், ப‌ட‌த்தின் ஆழ‌மும் அழ‌கு அண்ணே..//

    ஸ்டீவன்,

    நன்றியுடன் ஒரு கேள்வியும். நெஜமாவே நான் உங்களுக்கு அண்ணனா?

    சும்மா சும்மா வெளையாடாதீங்ணா.

    ReplyDelete
  27. //கவிதை அழகு....

    ஆழம் செல்லச்செல்ல தண்ணீரைப்போல காதலும் வறண்டே போய் விடப்போகிறது சத்ரியன்//

    வேலு.ஜி,

    நானும் ரொம்ப எச்சரிக்கையாத்தான் இந்தக் கவிதையில ஒரு சொல்லைப் பயன்படுத்தியிருக்கேன்.

    “ஆழப்பட்டுகொண்டே’’ க்கு பதிலா “வற்றிக்கொண்டே’ன்னு போட்டிருந்தா வேற மாதிரியில்ல ஆகிப்போயிருக்கும்.?

    ReplyDelete
  28. //உன்
    காதல் என்னுள்
    மீளமுடியா ஆழம் தேடி
    மூழ்க முயலும்
    மாயம் என்ன...?
    //

    வேற ஆள் கிடைச்சிருச்சின்னு அர்த்தம்//

    நசரேயன் அண்ணா,

    நல்லவேளை. எம்பொஞ்சாதி வலைப்பதிவு படிக்கிற வாய்ப்பில்ல. இல்லாட்டி உங்க பின்னூட்டத்த படிச்சிருந்தா வம்பா இல்ல போயிருக்கும்..?

    ReplyDelete
  29. //8 இன்ச் போர் போடவேண்டியதுதானே சும்மா தமாஷ்)

    நல்லா இருக்கு நண்பா//

    விஜய்,

    நம்ம ஊரு பக்கம் 700, 800 அடி தொளைச்சாலும் வெறும் காத்து மட்டுந்தான் வருது.

    ReplyDelete
  30. //ஆழமாத்தான் இருக்கு//

    கருணாகரசு மாமா,

    எட்டி பாத்தீங்களாக்கும்...?

    ReplyDelete
  31. //சத்ரியா...பயங்கரமான ஆள்தான் நீங்க.எங்கட வைரவ கோயிலடிக் கிணறுபோலக் கிடக்கு இவ்வளவு ஆழமா.ஆழக் கிணறு அதிலயும் மூழ்கிறதோ !

    சுகம் வரும்
    ஆனா ஆள் தப்பாது தம்பி !//

    செரி ஹேமாக்கா. கவனமாயிருந்துக்கறேன்.


    //ஓமெண்டுறன் கலா
    ....படம் மாத்திட்டார் !//

    படம் மட்டும் தான் மாத்தியிருக்கேன்.

    ReplyDelete
  32. //ஆனா ஆள் தப்பாது “தம்பி” !\\\

    பாவம் என்ர புள்ள.....
    இந்தச் சொல் அம்{ன்}பால்..
    சுருண்டுவிட்டானடி
    இப்படியொரு பாணம் விடலாமா?//

    அதானே..! இப்பிடியா வுடுவாங்க, பாணத்தை?

    //மனக் கோட்டை .....????//

    எக்கா கலா, ஒரு வீடு கட்றதுக்குள்ளயே கண்ணாமுழி பிதுங்குது. இன்னொன்ன எங்க கட்ட நெனைக்கிறது.( நான் கோட்டையச் சொன்னேன்.)

    ReplyDelete
  33. சத்ரியன் said...
    //ஆழமாத்தான் இருக்கு//

    கருணாகரசு மாமா,

    எட்டி பாத்தீங்களாக்கும்...?//

    அப்புறமென்ன... எட்டியிருந்தா பாக்க முடியும்? ங்கொய்யால கேள்விய பாரு?

    ஆமாம்... அங்கன ஒரு சண்டை நடக்குது அத பற்றி விவரமா தொலைபேசியில பேசுன... ஆனா அங்க நீ எதுவுமே எழுத்லையே ஏன்ன்ன்ன்ன் ராசா?

    ReplyDelete
  34. க‌விதையின் ஆழ‌ம் அழ‌கு

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.