சக உறவுகள்
சவச் சகதியாக்கப்பட்டு
தமிழ் வரலாற்றில்
கரி படிந்த இந்நாளை
துளி கண்ணீர் சிந்தி
மெளனமாய் ஓர்நொடி
மனதார பிரார்த்திக்க
மறந்து,
பிரபல நடிகை
‘பிற பல’ கட்சியில் இணைந்ததை
பிரதானமாய்க் கொண்டாடும்
வல்லரசின் இந்த
வருங்காலத் தூண்களை
பொறுத்தருள்
என் மனமே!
என்னே கவிதை சாட்டையடி.... நல்லாயிருக்கு...
ReplyDeleteநினைத்தால் வலிதான் மிஞ்சுகிறது சத்ரியன் என்ன செய்வது
ReplyDeleteகவிதை அருமை
மிகச் சரியாகச் சொன்னீர்கள் சத்ரியன். நல்ல வரிகள்.
ReplyDeleteஇன்றைய நிலையில் அந்த மக்களுக்குத் தற்சமய உதவிகளைச் செய்வோம்.உணர்வோடு கை கோர்த்துக்கொள்வோம் சத்ரியன்.
ReplyDeleteகவிதையின் வீரியம அதிகம்... இதில் உணர்கிறேன்...
ReplyDeleteஉங்களது வரிகள் கோபத்தையும்,
ReplyDeleteஉங்களது படம் கண்ணீரை வரவழிக்கிறது....
என்ன செய்வது தமிழனின் தலை எழுத்து.....
பிரபல நடிகை
ReplyDelete‘பிற பல’ கட்சியில் இணைந்ததை
பிரதானமாய்க் கொண்டாடும்
வல்லரசின் இந்த
வருங்காலத் தூண்களை
பொறுத்தருள்
என் மனமே!//
குஷ்புவை பற்றி குறை சொல்லாதே.....
குஷ்பு ஒரு முற்போக்குவாதி
//பொறுத்தருள்
ReplyDeleteஎன் மனமே!//
ம்ம்ம்....வேறென்ன முடியும்....
மாம்ஸூ சொல்ல வார்த்தைகள் என்னிடமில்லை
ReplyDeleteஇவர்கள் ஓட்டு தின்னும் ஒட்டுன்னிகள்
ஜயோ ...கவிதையை விடப் படம்
ReplyDeleteமுழுமையாய்க் கொல்கிறது
என்னை,!
என்னால்,,,முடியாது கருத்துச் சொல்ல...
என்ன சொல்ல நண்பா!
ReplyDeleteதுயரத்தை பகிர்ந்துகொள்ளுதலைத் தவிர வேறேதும் செய்ய இயலாத நிலையில் நாம்...
பிரபாகர்...
இன்றும் என் செவியில் ஒலிக்கிறது நம் உறவுகளின் கதறல் சத்தம் .
ReplyDelete:)
ReplyDeleteஅண்ணா எப்படி இருக்கிரிங்க, சாரல் குட்டி சவுக்கியமா
ReplyDeleteபாழும் உலகை என்ன சொல்ல!
ReplyDelete:(
கஷ்டம்தான்....வேறென்ன சொல்ல...
ReplyDeleteஉண்மைதான் நண்பரே, என்ன செய்ய? “நெஞ்சு பொருக்குதில்லயே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...”- என்ற பாரதியின் பாடல்வரிதான் நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteஎன் “மனவிழி” உறங்க மறுக்கிறது
விவரிக்க வார்த்தை இல்லை மனவிழி வலி நிரம்பிய கவிதை
ReplyDeleteசுருக்... நறுக்...
ReplyDeleteபொருத்தருள் என் மனமே!
//பொறுத்தருள்
ReplyDeleteஎன் மனமே!//
ஆம்..
பொறுத்தருள் என் மனமே!
என் செய்வேன் யான்
ReplyDeleteவிஜய்