Jun 9, 2010

இரு விழியும் நானும் !


தக்கையின் அசைவுக்காக
தவமிருக்கும்
மீன்பிடிச் சிறுவனைப் போல்

தத்தையுன்
கண் அசைவை
எதிர்ப்பார்த்து

நான்...!
***


விழும்போது சிறிதாயொரு
வட்ட அலையெழுப்பி விட்டு
நீரடியில் அமர்ந்துக்கொள்ளும்
சிறு கல் போல்

என்னுள்
உன்
விழியும்....!

55 comments:

 1. அருமை....

  உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு என் பதிவு தமிளிஷ்யில் வெளியாகி உள்ளது. எனக்கும் ஒரு ஓட்டு போடுங்க...
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html

  ReplyDelete
 2. அட...அட..அட... தக்கையின் அசைவுக்கு தவமிருக்கும் சிறுவனாமுல்ல... இப்டியே பேசிப்பேசி வயசக்கொறச்சிடலாம்னு மட்டும் நினைக்காதும்... நாங்கள்லாம் இன்னமும் உயிரோடத்தான் இருக்கோம்...

  ஆமா.. யாருங்க அது??

  கலக்கல்....

  ReplyDelete
 3. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க ரகு.

  ReplyDelete
 4. //அட...அட..அட... தக்கையின் அசைவுக்கு தவமிருக்கும் சிறுவனாமுல்ல... இப்டியே பேசிப்பேசி வயசக்கொறச்சிடலாம்னு மட்டும் நினைக்காதும்... நாங்கள்லாம் இன்னமும் உயிரோடத்தான் இருக்கோம்... //

  பாலாசி,
  நாங்களும் அதை ஞாபகத்துல வெச்சிக்கிட்டுத்தான் இருக்கோம்.

  //ஆமா.. யாருங்க அது?? //

  யாருன்னு சொல்லிட்டம்னா வீட்ல போட்டுக்குடுக்கவா?

  ReplyDelete
 5. யாருன்னு சொன்னா தங்கச்சி சார்பா மொத கல் என்னோடது

  விஜய்

  ReplyDelete
 6. படம் கிடைச்சா மீன் பிடி சிறுவன்னு போட்டுடறதா? எழுதுறது பெரியவங்க மேட்டரு!

  பிரபாகர்...

  ReplyDelete
 7. அப்புறம் சொல்ல மறந்துட்டேன், ரொம்ப அருமையா இருக்கு.

  பிரபாகர்...

  ReplyDelete
 8. ரொம்ப அருமை

  வயசான காலத்தில இதெல்லாம் தேவையா

  ReplyDelete
 9. //யாருன்னு சொன்னா தங்கச்சி சார்பா மொத கல் என்னோடது//

  விஜய்,

  தலையில போடற கல்லா...!

  ReplyDelete
 10. படங்களும் கவிதையும் அருமை.

  ReplyDelete
 11. //படம் கிடைச்சா மீன் பிடி சிறுவன்னு போட்டுடறதா? எழுதுறது பெரியவங்க மேட்டரு!//

  அட சின்னப்புள்ளைங்க தான்ப்பா கவனமா உத்து பாப்பாங்க.

  யூத்துங்கெல்லாம் இப்பிடித்தான் கவிதை எழுதுவோம்.

  ReplyDelete
 12. //ரொம்ப அருமை//

  இது என் கவிதைக்கு கிடைத்த வெகுமதி.

  //வயசான காலத்தில இதெல்லாம் தேவையா? //

  உங்களை நீங்களே விமர்சனம் செஞ்சிக்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்லீங்க வேலு ஜீ. ஹி..ஹி..ஹி!

  ReplyDelete
 13. //படங்களும் கவிதையும் அருமை.//

  படம் கூகுளின் கொடை.

  வரிகள் மட்டுமே அடியேனுக்குள் உதிச்சது.

  நன்றிங்க குணா.

  ReplyDelete
 14. ரொம்ப நல்லாருக்கு மாமா!

  (ஹி..ஹி..உம்ம வயசை நினைவு படுத்த எனக்கும், வேறு வழி தெரியலை மாப்ள மாமா)

  ReplyDelete
 15. //ரொம்ப நல்லாருக்கு மாமா!

  (ஹி..ஹி..உம்ம வயசை நினைவு படுத்த எனக்கும், வேறு வழி தெரியலை மாப்ள மாமா)//

  வாங்க மாமா,

  உங்க ஆசிர்வாதம் மாமா.!

  (இது என்னங்க மாமா புதுசா இருக்கு’மாப்ள மாமா.’)

  ReplyDelete
 16. ஹ்ம்ம்ம். என்னத்தச் சொல்ல. ப்ப்ப்பீலிங்ஸ் போறாது:))

  ReplyDelete
 17. நண்பரே....

  இது அனுபவக்கவிதை மாதிரியே இருக்குது.....

  ReplyDelete
 18. //ஹ்ம்ம்ம். என்னத்தச் சொல்ல. ப்ப்ப்பீலிங்ஸ் போறாது:))//

  பாலா அண்ணே,

  இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ...
  கூட்டத்துல சிக்க விட்ருங்க.

  (கொஞ்சம் மேல பாருங்க. ஒருத்தரு மொதக்கல்லு போடுவாராம்.)

  ReplyDelete
 19. //அருமை.//

  நன்றிங்க மாதேவி.

  ReplyDelete
 20. //நண்பரே....

  இது அனுபவக்கவிதை மாதிரியே இருக்குது....//

  ம்க்கூம்! வாய புடுங்குறதுக்கு என்னா ’டெக்னிக்’கு!

  ReplyDelete
 21. //நல்லாருக்கு :)//

  நன்றிங்க நேசன். (

  பேசி ரொம்ப நாளாச்சி. நலமா?)

  ReplyDelete
 22. தக்கையின் அசைவுக்காக
  தவமிருக்கும்
  மீன்பிடிச் சிறுவனைப் போல்\\\\\\

  கவனம் அப்பு பெரிய மீன் மாட்டிடிச்சி...
  அப்புறம் தக்கையுமில்ல..நீங்களுமில்ல...
  ஆழத்துக்குப் போனபின்தான் புத்தி வரும்.
  உன்
  கண் அசைவை
  எதிர் ப் பார்த்து
  நான்\\\\\
  எதிரில் உட்காந்து பார்தால்
  எப்படியய்யா நின்மதியாய்
  பயணம் செய்யுமா? அந்தப் பெண்  விழும்போது சிறிதாயொரு
  உலகத்தையே மறந்து இருந்தால்...
  விழாமல் என்ன செய்யமுடியும்?
  காயம் பலமா?
  நீரடியில் அமர்ந்துக்கொள்ளும்
  சிறு கல் போல்

  என்னுள்
  உன்
  விழியும்\\\

  நீர் அடியில்_உன்னடியில் அமர்ந்து
  காதல் கற்கும் மாணவன் போல்
  அமர்ந்திருக்கும் என்னை...
  பாரும் என்கிறேன்.......

  ReplyDelete
 23. மனம் விழியென்று..
  விழுந்து,வழிந்து,விழித்தும் காதல்
  வரிகளால்...தகர்கின்றார்
  தாயே,அம்மா கண்ணழகி ...
  வழுக்கி விழவேமாட்டாயா தங்கம்

  சத்ரியா! நிழல்படமும்,நிஐஎண்ணமும்
  போட்டி போடுகிறது நன்று, நன்றி

  ReplyDelete
 24. //கவனம் அப்பு பெரிய மீன் மாட்டிடிச்சின்னா..
  அப்புறம் தக்கையுமில்ல.. நீங்களுமில்ல... ஆழத்துக்குப் போனபின்தான் புத்தி வரும்.//

  கலா,

  நாங்களெல்லாம் மீனோட அளவுக்கு தகுந்த மாதிரி தூண்டில் போடற ஆளுங்க.

  அதனால எச்சரிக்கையாவே இருக்கிறோம்.

  ReplyDelete
 25. //எதிரில் உட்காந்து பார்தால்
  எப்படியய்யா நின்மதியாய்
  பயணம் செய்யுமா? அந்தப் பெண்..//

  அந்த பொண்ணு கொஞ்சம் சொக்கித்தான் போயிருக்கு கலா.

  (எந்தப் பொண்ணுன்னு கேக்காதீங்க. நீங்க எந்தப்பொண்ணைச் சொன்னீங்களோ அந்த பொண்ணை தான் நானும் சொல்றேன். குழம்பிட்டீங்களா?)

  ReplyDelete
 26. //உலகத்தையே மறந்து இருந்தால்...
  விழாமல் என்ன செய்யமுடியும்?
  காயம் பலமா?//

  மறந்திருந்ததில் விழுந்தது
  காயும், பழமுமாத்தான் இருக்குங்க!

  ReplyDelete
 27. //மனம் விழியென்று..
  விழுந்து,வழிந்து,விழித்தும் காதல்
  வரிகளால்...தகர்கின்றார்
  தாயே,அம்மா கண்ணழகி ...
  வழுக்கி விழவேமாட்டாயா தங்கம்//

  கலா,
  யாரந்த கண்ணழகி? தங்கம்னு வேறச் சொல்றீங்க.கெடைச்சா அடகு வெச்சிரலாம்.

  ReplyDelete
 28. //நல்லாருக்கு//

  நன்றிங்க அருணா.

  ReplyDelete
 29. யார்ன்னு சொன்னா தங்கச்சிட்ட போட்டு குடுக்கவா!!!

  என்னங்க இது அப்ப அவங்கள பற்றி எழுதலையா - இதையே போட்டு குடுக்கலாமே - எங்கே அன்பு கருணா

  ------------------

  மாம்ஸ் கவிதை நல்லாயிருக்குன்னு சொல்ற அளவுக்கு இல்லை, நீ எங்கே மிஸ் ஆகுறே ...

  ReplyDelete
 30. அருமைங்க ..கலக்குங்க

  ReplyDelete
 31. Super! :-)

  ...... the second pic. is very nice.

  ReplyDelete
 32. காலம் போன காலத்துல இப்போ உமக்கு எதுக்குய்யா இப்படிலாம் தோணுது மிஸ்டர் கொள்ளுதாத்தா

  ReplyDelete
 33. சின்னதா முடிச்சுடுறீங்க ஏன்?

  ReplyDelete
 34. அருமை சத்ரியன். படங்களும் அழகு.

  ReplyDelete
 35. சத்ரியா...ம்ம்ம்....கவிதை நல்லாத்தான் இருக்கு.கண்ணழகா உங்க கண்ணுக்குள்ள இன்னொரு கண்ணா !தாங்குமா !அதுவும் அடகு வைக்கவா !

  கலா கொஞ்சம் கவனிச்சுக்கொள்ளுங்கோ கருப்புத்தங்கத்தை.சரியில்ல போக்கு.சொல்லிட்டன் !

  தக்கை,மீன்பிடிச்சிறுவன்,கல்,
  காத்திருப்பு கவிதை அருமை !

  ReplyDelete
 36. //மாம்ஸ் கவிதை நல்லாயிருக்குன்னு சொல்ற அளவுக்கு இல்லை, நீ எங்கே மிஸ் ஆகுறே .../

  மாப்ள ஜமால்,

  இதுக்குத்தான் மச்சான் துணை வேணுங்கிறது. எனக்கும் ‘அந்த’ நிறைவின்மை தெரிஞ்சது. தூங்கி எழுந்து நிறைவாக்கிட்டேன் -ன்னு நினைக்கிறேன்.இன்னொருமுறை வந்துட்டு போங்க.

  ReplyDelete
 37. //Super! :-)

  ...... the second pic. is very nice.//

  சித்ரா அக்கா,

  நன்றிங்க. படங்கள் ‘கூகிள்’உபயம்.

  ReplyDelete
 38. //காலம் போன காலத்துல இப்போ உமக்கு எதுக்குய்யா இப்படிலாம் தோணுது மிஸ்டர் கொள்ளுதாத்தா..//

  இப்பத்தாணேய்யா மீசை அரும்புது? இதுவே காலம் போன காலம்னா- பின்ன எப்ப தான்யா இப்பிடி தோணனும்னு சொல்றீங்க.

  ஏன் மாப்பி, உடம்புல தெம்ப்பு இல்லியா? ”கொள்ளு தா தா” -ன்னு கேக்குறீங்களே அதனால கேட்டேன்!

  ReplyDelete
 39. //சின்னதா முடிச்சுடுறீங்க ஏன்?//

  வசந்த்,

  படிக்கிறவங்களோட பொறுமைய சோதிக்க வேணம்னு தான்!

  (மிச்சம் மீதி வெச்சாத்தான் அடுத்த பக்கத்தை நிறப்ப முடியும்னு ஒரு சுய நலமும்!)

  ReplyDelete
 40. //அருமை சத்ரியன். படங்களும் அழகு//

  வாங்க சரவணக்குமார்,

  நன்றி.

  (உங்களோடு பேசனும்னு விருப்பம். வகை செய்யுங்கள் +6596235852.)

  ReplyDelete
 41. //சத்ரியா...ம்ம்ம்....கவிதை நல்லாத்தான் இருக்கு.கண்ணழகா உங்க கண்ணுக்குள்ள இன்னொரு கண்ணா !தாங்குமா !அதுவும் அடகு வைக்கவா !//

  இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலியே!

  //கலா கொஞ்சம் கவனிச்சுக்கொள்ளுங்கோ கருப்புத்தங்கத்தை.சரியில்ல போக்கு.சொல்லிட்டன் !//

  கலா அக்கா,
  என் போக்கு சரியில்லயாம். வந்து என்னை கவனிச்சிக்குங்க. நானும் சொல்லிட்டன்.

  //தக்கை,மீன்பிடிச்சிறுவன்,கல்,
  காத்திருப்பு கவிதை அருமை //

  தண்ணீரில் தக்கையின் அசைவை கவனித்துக்காத்திருப்பதில் அலாதி சுகம். காதலும் அப்படித்தான். (கவனித்திருப்பதில் தான் அலாதி சுகம்.)

  ReplyDelete
 42. பாத்து கவனமா இருங்க மாப்ள, காலங்கெட்டு கிடக்கு......


  ஹி....ஹி.....


  விழும்போது சிறிதாயொரு
  வட்ட அலையெழுப்பி விட்டு
  நீரடியில் அமர்ந்துக்கொள்ளும்
  சிறு கல் போல்

  என்னுள்
  உன்
  விழியும்....!


  மிகவும் ரசித்தேன்......

  ReplyDelete
 43. விழும்போது சிறிதாயொரு
  வட்ட அலையெழுப்பி விட்டு
  நீரடியில் அமர்ந்துக்கொள்ளும்
  சிறு கல் போல்

  என்னுள்
  உன்
  விழியும்....!


  அருமை சத்ரியன்

  r.v.saravanan
  kudanthaiyur.blogspot.com

  ReplyDelete
 44. நன்றிங்க திகழ்.

  ReplyDelete
 45. நன்றிங்க கலாநேசன். வருகைக்கும், கருத்திற்கும்!

  ReplyDelete
 46. //பாத்து கவனமா இருங்க மாப்ள, காலங்கெட்டு கிடக்கு......


  ஹி....ஹி.....//

  ஆ.வி.மாமா,

  அப்பிடியே மாப்பிள்ளைக்கு ஒன்னுன்னா சும்மாவா விட்ருவீங்க?...அந்த நம்பிக்கையில தான் மாமா இப்பிடியெல்லாம்.!


  //விழும்போது சிறிதாயொரு
  வட்ட அலையெழுப்பி விட்டு
  நீரடியில் அமர்ந்துக்கொள்ளும்
  சிறு கல் போல்

  என்னுள்
  உன்
  விழியும்....!


  மிகவும் ரசித்தேன்.//

  உங்கள் ரசனை ...மாப்பிள்ளையோட பாக்கியம்!

  ReplyDelete
 47. //விழும்போது சிறிதாயொரு
  வட்ட அலையெழுப்பி விட்டு
  நீரடியில் அமர்ந்துக்கொள்ளும்
  சிறு கல் போல்

  என்னுள்
  உன்
  விழியும்....!


  அருமை சத்ரியன்//

  நன்றிங்க R.V.S.

  ReplyDelete
 48. அன்பின் சத்ரியன்

  அருமை அருமை காதல் கவிதை அருமை

  தத்தையின் கண்ணசைவுக்குக் காத்திராமல் உடனே உடனே - அவ்வப்போது கிடைத்துக் கொண்டே இருக்க நல்வாழ்த்துகள்

  நீரில் அலை எழுப்பிவிட்டு நீரினடியில் அமர்ந்து கொள்ளும் கல்லா அவளது கண் விழி

  சிந்தனை, கற்பனை, உவமைகள் அருமை.

  நல்வாழ்த்துகள் சத்ரியன்
  நட்புடன் சீனா

  அமர்ந்துக் கொள்ளும் = அமர்ந்து கொள்ளும் - ஒற்றுப்பிழை தவிர்க்கலாமே

  ReplyDelete
 49. அன்பின் சத்ரியன்

  மின்னஞ்சல் முகவரி தர இயலுமா

  நல்வாழ்த்துகள் சத்ரியன்

  நட்புடன் சீனா
  cheenakay@gmail.com

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.