May 5, 2011

காதல் ராமாயணம்




நான் ’அகலிகன்’
நீ ’ராமனி’

உன் கண்களால் 
நெஞ்சில் மிதித்தாய்.

உயிர்ப்பெற்றது 
நம் காதல்.

*


’பூவு...பூவேய்’ - எனக் 
கூவி போகிறாள் 
பூக்காரி.

கருப்பு மின்னலாய்
என்னில் மறைகிறது,
பூ கேட்கும்
உன் பின்னல்.


*

13 comments:

  1. இராமாயணம் ஆரம்பமா?!
    சூப்பர் கவிதை!

    ReplyDelete
  2. அகலிகைக்கான படமுமும் பின்னல் மின்னலும் ரசித்தேன்.

    ReplyDelete
  3. வார்த்தைகளும் படங்களும் சிறப்பாக இருக்கிறது தொடருங்கள்!

    ReplyDelete
  4. இரண்டுமே நல்லாருக்கு என்றாலும் பூ கேட்கும் பின்னல் ரசிக்க வைக்கிறது சத்ரியன் வாழ்த்துக்கள் படங்கள் சூப்பரா இருக்கு

    ReplyDelete
  5. புகைப்படமும் கவிதையும் பேசிகொள்கின்றன>>>

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  6. அகலிகன்
    ராமனி

    சீதன் யாரு ?!!!!!!!

    நல்லாருக்கு நண்பா, வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  7. உன் கண்களால்
    நெஞ்சில் மிதித்தாய்.\\\\\\\
    ஐய்யோடா....அவ்வளவுக்கு நம்ம பண்பாடு \
    தெரியாதவங்களா?
    அந்தச் சின்ன இதயத்தைப்போய் இப்படி
    மிதித்தால்.....தாங்குமா?
    காலில்..கால்பட்டாலே தொட்டுக்கும்பிடும் நாம்,
    நிட்சயமாய் இது நம் தமிழ்பெண்ணில்லை!
    சிங்கைக்கு வானில் பறந்துவரும்போது அகப்பட்ட
    வேறினப்பறவைபோலும்.....

    ReplyDelete
  8. கருப்பு மின்னலாய்
    என்னில் மறைகிறது,
    பூ கேட்கும்
    உன் பின்னல்.\\\\\\
    பூவாங்கிக் கொடுக்கக் கஞ்சத்தனமானதால்!
    சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக்கழிப்பா?
    இல்லாவிட்டால்...பூவைக்கு பூவாங்கிப் பூவைக்கச்
    சொல்னால்.. அப்புறம் .....!...?..?

    ReplyDelete
  9. க‌வி‌தை ஆர‌ம்பிச்சாச்சா... க‌ல‌க்குங்க‌.. :)

    ReplyDelete
  10. அகலிகன்,ராமனி...இவங்கல்லாம் யாரு சத்ரியன் !

    இப்பல்லாம் இப்பிடிப் தலை வாரிப்பின்னி பூவெல்லாம் வைக்கிறாங்களா !

    ReplyDelete
  11. மிதிபட துளர்ிக்கும் காதல்
    கூந்தல் நினைவுறுத்திப் போகும்
    பூக்காரியின் குரல்
    வித்தியாசமான சிந்தனை
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. படமும் கவிதையும் சூப்பர் கோபால்.:)

    ReplyDelete
  13. படத்துடன் இயைந்து கவிதை அழகு பெறுகிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.