Apr 23, 2011

நலம். நலமா?


         ருக்கு போய் ஒரு மாசம் ஆகிப்போச்சாம். பையில இருந்த பாஸ்போர்ட்ட எடுத்து, கையில குடுத்து மறுபடியும் ‘கன்னித்தீவு’- க்கு அனுப்பி வெச்சிட்டாங்க....! (சரி விடுங்க. என் வயித்தெரிச்சல் என்னோட போகட்டும்.) உடம்பு மட்டும் பாஸ்போர்ட்டோட சேர்ந்து வந்துடுச்சே தவிர நெனைப்பு எல்லாம் இன்னும் ஊஊஊ............ர்லயேதான் இருக்கு.

                   அனைவருக்கும் வணக்கம் மக்கள்ஸ். நிச்சயம் எல்லாரும் நலமா இருப்பீங்க- ன்னு நம்பறேன். ஊருலேர்ந்து வந்து ஒரு பதிவு போடலைன்னா எப்புடி? அதான் !





சாரலின்பா - அவளின் பெரிய அத்தையுடன்...!





 தூங்கி எழுந்தவுடன் படப்பிடிப்பு...!




கிருஷ்ணகிரி அணையில் சாரலின்பா - அம்மாவுடன்...!



வீட்டுச் செல்லங்கள்..!



வீட்டின் முன் வயலில் நெல்லும், வரப்பில் வாழையும்.



இதே மாதிரிதாங்க , மூளைக்குள்ள வீட்டு நெனைப்பு பசுமையாவே இருக்கிறதால வேலையே ஓடமாட்டேங்குது. 

உங்க ‘ ப்ளாக் ‘  பக்கமெல்லாம் வந்து மேயுற வேலை இருக்குல்ல. நான் கெளம்பறேன்.



36 comments:

  1. வளர்ந்துட்டாங்க சாரல்! :-) (சுத்தி வைக்க சொல்லும் ஓய்)

    'நாங்கதான் பேர் வச்சோம் புள்ள உனக்கு' ன்னு சாரலை பார்க்கிற போது சொல்லணும். அடப்பாவி மனுஷா, அழகழகா இத்தனை நாய்க் குட்டிகளா? பொறாமையா வருது மாப்சு.

    வந்தாச்சுல்ல..இனி, ஒரு வருஷத்துக்கு காதல் கவிதைகளை தட்டி விடும். :-)

    ReplyDelete
  2. மகள் அழகா இருக்காங்க.. நல்லா வள‌ர்ந்து இருக்காங்க. ஊரின் பசுமையான நினைவுகளை படங்களாக பார்க்க அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  3. ஆகா... நண்பரே வந்தீர்களா?

    ReplyDelete
  4. பொண்ணு கூடவே பொழப்பு ஓட்டினீராக்கும்.. ஊருக்கு வந்ததுகூட தெரியல...

    சரி சரி... இப்பவே நகை, சீர் செனத்தியெல்லாம் ரெடிபண்ணிக்கும்..

    ரொம்ப வெயில்ல விடாதீங்க.. உங்களமாரியே கருத்துடப்போறா மருமவ...

    ReplyDelete
  5. சாரலின்பா நன்கு மகிழ்ந்திருப்பார் என எண்ணுகிறேன். குழந்தைனளுக்கு புது இடங்கள் நன்கு பிடிக்குமே. அழகாக இருக்கிறாள்.

    ReplyDelete
  6. Welcome back!

    சாரலின்பா , இன்னும் cute ஆகிட்டு வருகிறாள்.... சமத்து குட்டி.

    ReplyDelete
  7. அழகான குட்டிப்பெண் அத்தையுடனும்,அம்மாவுடனும் கலக்கிட்டு இருக்காங்க. எல்லா படங்களும் நல்லாயிருக்கு!

    ReplyDelete
  8. சத்ரியன்...வந்தாச்சா கன்னித்தீவுக்கு.
    நல்லது நல்லது.இனிக் கவிதைகளா கொட்டப்போகுது !

    சாரல்குட்டி வளந்திட்டா.அன்பு முத்தங்கள் செல்லக்குட்டிக்கு !

    ReplyDelete
  9. வளர்ந்துட்டாங்களா சாரல்! ????சூப்பர்!

    ReplyDelete
  10. வணக்கம் அண்ணே, ஊருக்கு போயிட்டு வந்தாச்சா... சாரலின்பா க்யூட்டா இருக்காங்க... :))

    என்ன செய்வது நம்மளைப்போன்றவர்களின் நிலை பணத்திற்காக உறவுகளை பிரிந்து பாசத்தை தொலைத்து வாழும் வாழ்க்கை கொடுமையானது.

    புகைப்படங்களை பார்த்தவுடன் ஊர் நினைவு வந்துவிட்டது :))

    ReplyDelete
  11. கிருட்டிணகிரி அணைக்கட்டா..?

    ReplyDelete
  12. சார‌ல் அழ‌கா கியூட்டா இருக்காங்க‌... வ‌ந்த‌து வ‌ந்திட்டீங்க‌, ஒரு க‌விதையை த‌ட்டுங்க‌..

    ReplyDelete
  13. என்னது ஊருக்கு வந்தீங்களா????

    ReplyDelete
  14. வாவ்...சாரல்குட்டி நல்லாவே
    வளர்ந்துவிட்டாள்
    சாரலில் அம்மாவை பக்கத்தில்
    காண்பித்தால் கண்ணுபட்டுவிடுமா?
    விபரமான ஆளுதான் சாமியோவ்....

    ReplyDelete
  15. சாரலின் பார்வை அப்படியே குறும்பு கண்ணனை உரித்து வைத்திருக்கிறது.

    கவிதை மழை பொழிக

    விஜய்

    ReplyDelete
  16. //வந்தாச்சுல்ல..இனி, ஒரு வருஷத்துக்கு காதல் கவிதைகளை தட்டி விடும். :-)//

    மாமா,

    நீங்களே என்னை கெடுத்து வெச்சிருவீங்க போலிருக்கே...!

    ReplyDelete
  17. நன்றிங்க ப்ரியா.

    ReplyDelete
  18. வந்துட்டேன் ஞானம்.

    ReplyDelete
  19. //பொண்ணு கூடவே பொழப்பு ஓட்டினீராக்கும்.. ஊருக்கு வந்ததுகூட தெரியல... //

    மகளுடன் இருந்ததில் மற்றதெல்லாம் மறந்து போயிடுச்சி ஓய்.

    //சரி சரி... இப்பவே நகை, சீர் செனத்தியெல்லாம் ரெடிபண்ணிக்கும்..//

    அதுக்காகத்தானே இந்த ‘கன்னித்தீவு’ வாசம்.

    //ரொம்ப வெயில்ல விடாதீங்க.. உங்களமாரியே கருத்துடப்போறா மருமவ...//

    யோவ், வேலூர் மாவட்டம் வெயிலுக்கு பேர் போனது. என்னை என்ன பண்ணச்சொல்றே.

    ReplyDelete
  20. நன்றிங்க டொக்டர் சார்.

    ReplyDelete
  21. //Welcome back!

    சாரலின்பா , இன்னும் cute ஆகிட்டு வருகிறாள்.... சமத்து குட்டி.//

    நன்றிங்க சித்து.

    ReplyDelete
  22. நன்றிங்க தென்றல்.

    ReplyDelete
  23. //சத்ரியன்...வந்தாச்சா கன்னித்தீவுக்கு.
    நல்லது நல்லது.இனிக் கவிதைகளா கொட்டப்போகுது !//

    கன்னித்தீவுல நான் படற கஷ்டம் எனக்குத்தானே தெரியும். காதல் சொட்டுச்சின்னா, கவிதையும் கொட்டும். பாக்கலாம்.

    //சாரல்குட்டி வளந்திட்டா.அன்பு முத்தங்கள் செல்லக்குட்டிக்கு !//

    சாரல் சார்பா நன்றிங்க.

    ReplyDelete
  24. //வளர்ந்துட்டாங்களா சாரல்! ????சூப்பர்!//

    வளர்ந்துட்டாங்க. வளர்ந்துட்டாங்க.

    ReplyDelete
  25. //புகைப்படங்களை பார்த்தவுடன் ஊர் நினைவு வந்துவிட்டது :)) //

    அதனாலென்ன மாணவா,

    ஒருமுறை போயிட்டு வந்துட்டா போவுது.

    ReplyDelete
  26. //கிருட்டிணகிரி அணைக்கட்டா..?//

    ஆமாம் கும்க்கி அண்ணா.

    ReplyDelete
  27. //சார‌ல் அழ‌கா கியூட்டா இருக்காங்க‌... வ‌ந்த‌து வ‌ந்திட்டீங்க‌, ஒரு க‌விதையை த‌ட்டுங்க‌..//

    தட்டிடலாம் ஸ்டீவன். நீங்க சுகமா?

    ReplyDelete
  28. //என்னது ஊருக்கு வந்தீங்களா????//

    ஆமாம் சங்கவி. தெரியப்படுத்தாமைக்கு மன்னிக்கனும். அது ஒரு ரகசிய பயணம். ( சாரலை விட்டுட்டு ஊர் சுற்ற மனசு வரலை. அவலை கூட்டிக்கிட்டும் ஊர் சுத்த முடியாது, நம்ம ஊர்ல வெயில் அப்படி. அதனால மூச்சு விடாம வீட்லயே இருந்துட்டேன்.)

    ReplyDelete
  29. //வாவ்...சாரல்குட்டி நல்லாவே
    வளர்ந்துவிட்டாள்.//

    ஆமா ஆமா.

    //சாரலில் அம்மாவை பக்கத்தில்
    காண்பித்தால் கண்ணுபட்டுவிடுமா?
    விபரமான ஆளுதான் சாமியோவ்....//

    யாரு? நானு? நானு விவரமான ஆளா... நல்லா சொன்னீங்க போங்க.!

    ReplyDelete
  30. //சாரலின் பார்வை அப்படியே குறும்பு கண்ணனை உரித்து வைத்திருக்கிறது.

    கவிதை மழை பொழிக//

    குளிர் காற்றுக்காக காத்திருக்கு. பட்டதும் பொழியத் தொடங்கிடும் விஜய்.

    ReplyDelete
  31. உங்க தீவு கன்னி(கள்) இருப்பாங்க ஆனா நீங்க சாக்கிரதையா இருங்க மாம்ஸ், இல்லாங்காட்டி ஊருக்கு போனிட வேண்டியிருக்கும்

    ஊர்ல இரசிச்சி தான் வாழ்றீங்க போல பச்சை பசேலும் வாழைகளும் பொறாமையை ஏற்படுத்துது ...

    ReplyDelete
  32. சங்கவி said...
    என்னது ஊருக்கு வந்தீங்களா????

    /// என்ன கோபால் இது..:)0 \\சரி போகட்டும் சாரலோடு சந்தோஷமான நாட்களா..:)) படங்கள் அருமை..

    ReplyDelete
  33. welcome back

    எல்லா படங்களும் நல்லாயிருக்கு நண்பரே

    ReplyDelete
  34. வெல்கம் பேக் நண்பா. சாரலுக்கு என் அன்பு.

    அண்ணன் சொல்ற மாதிரி அடுத்த ஒரு வருஷத்துக்கு காதல் கவிதைகளை தட்டிவிடுங்க.

    ReplyDelete
  35. வீட்டின் முன் வயலில் நெல்லும், வரப்பில் வாழையும்.//
    வாழையடி வாழையாய் வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. குழந்தை நல்ல க்யூட் அண்ட் ஸ்வீட்...

    பசுமையாவே இருக்கு அருமையா பார்க்க அழகா...

    உங்க தங்கை அமைதியா இருக்காங்க...

    சாரலின்பா அம்மா, அத்தை, வீட்டு செல்லங்கள் கூட செம்ம லூட்டி அடிக்கிறாங்க....

    எப்ப கூட்டிட்டு போறீங்க எங்களை உங்க வீட்டுக்கு?

    ஆமாம்பா எங்களுக்கும் உங்க வீட்டை பார்த்ததும் உங்க வீட்டுக்கு வரனும்னு இருக்கு... கூட்டிட்டு போங்க....

    மலரும் நினைவுகளா?

    மஞ்சு அத்தையும் அன்பா வாழ்த்து சொல்லி ஆசி தந்ததை நாளை மறக்காம சொல்லுங்க சாரலின்பா பாப்பாக்கு....

    படங்கள் எல்லாமே ரொம்ப அருமைப்பா...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.