Showing posts with label சாரல். Show all posts
Showing posts with label சாரல். Show all posts

Apr 23, 2011

நலம். நலமா?


         ஊருக்கு போய் ஒரு மாசம் ஆகிப்போச்சாம். பையில இருந்த பாஸ்போர்ட்ட எடுத்து, கையில குடுத்து மறுபடியும் ‘கன்னித்தீவு’- க்கு அனுப்பி வெச்சிட்டாங்க....! (சரி விடுங்க. என் வயித்தெரிச்சல் என்னோட போகட்டும்.) உடம்பு மட்டும் பாஸ்போர்ட்டோட சேர்ந்து வந்துடுச்சே தவிர நெனைப்பு எல்லாம் இன்னும் ஊஊஊ............ர்லயேதான் இருக்கு.

                   அனைவருக்கும் வணக்கம் மக்கள்ஸ். நிச்சயம் எல்லாரும் நலமா இருப்பீங்க- ன்னு நம்பறேன். ஊருலேர்ந்து வந்து ஒரு பதிவு போடலைன்னா எப்புடி? அதான் !





சாரலின்பா - அவளின் பெரிய அத்தையுடன்...!





 தூங்கி எழுந்தவுடன் படப்பிடிப்பு...!




கிருஷ்ணகிரி அணையில் சாரலின்பா - அம்மாவுடன்...!



வீட்டுச் செல்லங்கள்..!



வீட்டின் முன் வயலில் நெல்லும், வரப்பில் வாழையும்.



இதே மாதிரிதாங்க , மூளைக்குள்ள வீட்டு நெனைப்பு பசுமையாவே இருக்கிறதால வேலையே ஓடமாட்டேங்குது. 

உங்க ‘ ப்ளாக் ‘  பக்கமெல்லாம் வந்து மேயுற வேலை இருக்குல்ல. நான் கெளம்பறேன்.



Jul 26, 2010

சாரலுடன்...



எம்மகள் சாரலின்பாவுடன்... இன்பமாய் இருந்த நொடிகளில் ... ஒரு படம்.



இப்பதான் தாயகத்திலிருந்து வந்திருக்கேன். மிச்சத்தை அப்புறமா பகிர்ந்துக்கறேன்.

Oct 12, 2009

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்




வாருங்கள் ,

சகோதர சகோதரிகளே,
மாமன் மச்சான்களே,
பாசமுள்ள மச்சினிகளே,(யாரும் இல்லையா?)


இனிப்பை எடுத்துக்கொள்ளுங்கள் .

இனிப்புச் சுவையுடன்,
எங்கள் ...ம்ம்ஹூம் .... நம் குட்டி தேவதைக்கு ,

பெயர்ச் சூட்டி விடலாம். சூட்டும் முன்,

அ). சாரலினியா, (சாரல் இனியா )
ஆ). சாரலின்பா (சாரல் இன்பா)



மேற்கண்ட இரண்டில் (உங்களுக்கு மிகவும் பிடித்த) ஒரு பெயரைக் குறிப்பிட்டு பின்னூட்டமிடவும்.



"எப்பதான் எனக்கு பேர் சூட்டப் போறீங்கப்பா?" -ன்னு நாள்தோறும் என்னைத் தூங்கவிடாமல் துவம்சம் செய்கிறாள்.

பெரும்பான்மையோருக்குப் பிடித்த பெயரைச் சூட்டலாம் என்று காத்திருக்கிறோம்.

பெயரினைத் தெரிவு செய்ய உதவிய இணையதளம் நம் விடுதலைப் புலிகளின் " நிதித்துறை.காம்" .

குறிப்பு:-
இதற்கு முன்னையப் பதிவிற்கு பின்னூட்டமாக ஏராளமான பெயர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறவினர்கள் அனைவருக்கும் நன்றி.