Oct 12, 2011

விருது


விருதுகள்
மலர்கள் போல.

சில
பூஜையறைக்குப் போகின்றன.

பல
கல்லறைக்குப் போகின்றன.

மனுகுலத்திற்கு
அரியதைச் செய்தவர்
பூஜையறை.

நடுவருக்கு
உரியதைச் செய்தவன்
கல்லறை.

விருதுகள்
மலர்கள் போல!

***

பி.கு.:

சிங்கப்பூர் கடற்கரைச்சாலைக் கவிமாலை அமைப்பு கடந்த மாதம் (செப்டம்பர்)  ”விருது” என்னும் தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை.


31 கருத்துரை:

முனைவர்.இரா.குணசீலன் said...

வாழ்வியல்
உண்மையை
நுட்பத்தை உணர்த்தும் அழகிய கவிதை..

suryajeeva said...

உயர் ரக கவிதை போல, புரிய நெடு நேரமாகியது
நல்ல வேலை சின்ன கவிதையாய் இருந்ததால் பத்து தடவை படிக்க முடிஞ்சது

தமிழரசி said...

முதல் தர முத்துவரிகள்..

shanmugavel said...

//நடுவருக்கு
உரியதைச் செய்தவன்
கல்லறை.//

கலக்கல்

Ramani said...

அருமை அருமை மிக எளிமையாய்
மிக மிக அருமையாய்
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

MUTHARASU said...

அருமையான வரிகள்.
அற்புதமான கவிதை.
விருது - சிறப்பு.

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள், அருமையான கவிதை....!!!

மாய உலகம் said...

விருது மலர்கள் போல அது பூஜையறைக்கா... கல்லறைக்கா.. கவிதை கலக்கல் நண்பா...

கோகுல் said...

இந்த கவிதைக்கான பரிசு நிச்சயம் பூஜையறைக்கானது~!

மகேந்திரன் said...

முத்தான வரிகள்.
அருமையான கவிதை.

தமிழ்வாசி - Prakash said...

சிறந்த கவிதை... பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

தமிழ்வாசி - Prakash said...

TM ஏழு

கலாநேசன் said...

மிக எளிய நல்கவிதை

நட்புடன் ஜமால் said...

விருதினை பற்றிய கருத்தை சொல்லி விருது பெற்றுவிட்டீர் ...

வாழ்த்துகள் மாம்ஸே ...

kavithai (kovaikkavi) said...

ஓ!...பரிசு வாழ்த்துகள். மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துகள் கவிதை நல்லது.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Kannan said...

மிக அருமையான கவிதை........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

புலவர் சா இராமாநுசம் said...

வெற்றிஎனும் விருது தனை
பெற்று விட்டே -இங்கே
விடுத்திட்ட கவிதை தன்னை
படித்து விட்டேன்
நற்கவிதை எனஏற்றே பரிசு-தன்னை
நல்கியது பூசைக்கு வந்தமலரே
பொற்கவிதை கருத்துமிக தந்தமலரே
பூசைக்கு மணக்கின்ற மலரேமலர்

புலவர் சா இராமாநுசம்

சே.குமார் said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
கவிதை அருமை.

சத்ரியன் said...

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

ரெவெரி said...

விருதினை பற்றிய கருத்தை சொல்லி விருது பெற்றுவிட்டீர்... வாழ்த்துக்கள்...

நல்ல சிந்தனை வெளிப்பாடு...

தொடர்கிறேன் நண்பரே...

கீதா said...

பூஜையறை சேரும் மலர்களாகவே விருதுகள் வாழட்டும். அர்த்தமுள்ள அழகுக் கவிதை.

மாதேவி said...

மனவிழி பெற்ற விருதுக்கு வாழ்த்துக்கள்.

Lakshmi said...

கவிதைப்போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். தகுதி உள்ள எளிமையான கவிதைதான்.

சந்திரகௌரி said...

சில வரிகளுக்குள் பதிந்திருக்கும் பல பக்கம் விபரிக்கக்கூடிய கவிதை. அழகு, அருமை, பாராட்டுக்கள்

♔ம.தி.சுதா♔ said...

உண்மையில் விருதுகள் மலர் போலாவே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

C.P. செந்தில்குமார் said...

பரிசுக்கு வாழ்த்துக்கள். பூஜை அறைக் கவிதை....

ஆதிரா said...

பூசையறையில் தடம் பதித்த தங்களின் விருதுக்கு என் வாழ்த்துகள் சத்ரியன்.
வெற்றி பெற்ற கவிதை... விருதுக்குத் தகுதி வாய்ந்த கவிதி..தொடர்க..

விக்கியுலகம் said...

கலக்கல்

kavithai (kovaikkavi) said...

வந்தேன் விருதையே கண்டேன். மறூடியும் ஒரு தடவை வாசித்தேன் வளர்க தங்கள் பணி.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wprdpress.com

அரசன் said...

அண்ணே வணக்கம் ..
அழுத்தமான வரிகள் ..
அதிகம் ரசித்தேன்..

வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

மிக அருமையாகச் சொன்னீர்கள் சகோ .விருதுபெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .