Oct 12, 2011

விருது


விருதுகள்
மலர்கள் போல.

சில
பூஜையறைக்குப் போகின்றன.

பல
கல்லறைக்குப் போகின்றன.

மனுகுலத்திற்கு
அரியதைச் செய்தவர்
பூஜையறை.

நடுவருக்கு
உரியதைச் செய்தவன்
கல்லறை.

விருதுகள்
மலர்கள் போல!

***

பி.கு.:

சிங்கப்பூர் கடற்கரைச்சாலைக் கவிமாலை அமைப்பு கடந்த மாதம் (செப்டம்பர்)  ”விருது” என்னும் தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை.


33 comments:

  1. வாழ்வியல்
    உண்மையை
    நுட்பத்தை உணர்த்தும் அழகிய கவிதை..

    ReplyDelete
  2. உயர் ரக கவிதை போல, புரிய நெடு நேரமாகியது
    நல்ல வேலை சின்ன கவிதையாய் இருந்ததால் பத்து தடவை படிக்க முடிஞ்சது

    ReplyDelete
  3. முதல் தர முத்துவரிகள்..

    ReplyDelete
  4. //நடுவருக்கு
    உரியதைச் செய்தவன்
    கல்லறை.//

    கலக்கல்

    ReplyDelete
  5. உங்கள் கவிதை அருமை பாஸ் இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றன வாழ்த்துக்கள்
    இனி தொடர்ந்து வருவேன்

    ReplyDelete
  6. அருமை அருமை மிக எளிமையாய்
    மிக மிக அருமையாய்
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அருமையான வரிகள்.
    அற்புதமான கவிதை.
    விருது - சிறப்பு.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள், அருமையான கவிதை....!!!

    ReplyDelete
  9. விருது மலர்கள் போல அது பூஜையறைக்கா... கல்லறைக்கா.. கவிதை கலக்கல் நண்பா...

    ReplyDelete
  10. இந்த கவிதைக்கான பரிசு நிச்சயம் பூஜையறைக்கானது~!

    ReplyDelete
  11. முத்தான வரிகள்.
    அருமையான கவிதை.

    ReplyDelete
  12. சிறந்த கவிதை... பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. மிக எளிய நல்கவிதை

    ReplyDelete
  14. விருதினை பற்றிய கருத்தை சொல்லி விருது பெற்றுவிட்டீர் ...

    வாழ்த்துகள் மாம்ஸே ...

    ReplyDelete
  15. ஓ!...பரிசு வாழ்த்துகள். மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துகள் கவிதை நல்லது.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  16. மிக அருமையான கவிதை........

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  17. வெற்றிஎனும் விருது தனை
    பெற்று விட்டே -இங்கே
    விடுத்திட்ட கவிதை தன்னை
    படித்து விட்டேன்
    நற்கவிதை எனஏற்றே பரிசு-தன்னை
    நல்கியது பூசைக்கு வந்தமலரே
    பொற்கவிதை கருத்துமிக தந்தமலரே
    பூசைக்கு மணக்கின்ற மலரேமலர்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  19. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  20. விருதினை பற்றிய கருத்தை சொல்லி விருது பெற்றுவிட்டீர்... வாழ்த்துக்கள்...

    நல்ல சிந்தனை வெளிப்பாடு...

    தொடர்கிறேன் நண்பரே...

    ReplyDelete
  21. பூஜையறை சேரும் மலர்களாகவே விருதுகள் வாழட்டும். அர்த்தமுள்ள அழகுக் கவிதை.

    ReplyDelete
  22. மனவிழி பெற்ற விருதுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. கவிதைப்போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். தகுதி உள்ள எளிமையான கவிதைதான்.

    ReplyDelete
  24. சில வரிகளுக்குள் பதிந்திருக்கும் பல பக்கம் விபரிக்கக்கூடிய கவிதை. அழகு, அருமை, பாராட்டுக்கள்

    ReplyDelete
  25. பரிசுக்கு வாழ்த்துக்கள். பூஜை அறைக் கவிதை....

    ReplyDelete
  26. பூசையறையில் தடம் பதித்த தங்களின் விருதுக்கு என் வாழ்த்துகள் சத்ரியன்.
    வெற்றி பெற்ற கவிதை... விருதுக்குத் தகுதி வாய்ந்த கவிதி..தொடர்க..

    ReplyDelete
  27. வந்தேன் விருதையே கண்டேன். மறூடியும் ஒரு தடவை வாசித்தேன் வளர்க தங்கள் பணி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wprdpress.com

    ReplyDelete
  28. அண்ணே வணக்கம் ..
    அழுத்தமான வரிகள் ..
    அதிகம் ரசித்தேன்..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. மிக அருமையாகச் சொன்னீர்கள் சகோ .விருதுபெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.