Nov 13, 2011

சுரப்பி



மனைவி
தேர்வு எழுதப் போயிருக்கிறாள்.

மகள்
பசியால் அழுகிறாள்.

புட்டி  பால்
கட்டிக்கட்டியாய் திரிந்துப் போயிருந்தது.

அவள்
அழுகையை அடக்க நெஞ்சில் சாய்த்தேன்.

மார்புக் காம்பை சப்பிய படியே
தூங்கிப்போனாள்.

அப்பாவின் அன்பு
சுரந்திருக்குமோ காம்பில்...!?



16 comments:

  1. அருமை சத்ரியன்

    ReplyDelete
  2. நெகிழ்ச்சி.. அன்பின் வெளிப்பாடு..

    ReplyDelete
  3. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்....!!!

    ReplyDelete
  4. தாயுமானவர் ?
    கண்ணிலே அன்பிருந்தால்
    கல்லிலே தெய்வம் வரும்
    அப்படியிருக்க இதுவும் சாத்தியமே
    அருமையான பதிவு
    த.ம 2

    ReplyDelete
  5. தந்தை தந்த அரவணைப்பில் தாயின் நினைவு சுகத்தில் பசியோடு நித்திரை

    கவிதை வரிகள் மனதை தொடும்

    த.ம 3

    ReplyDelete
  6. சத்ரியா...கேள்வியாய் முடித்திருக்கவே தேவையில்லை !

    ReplyDelete
  7. தாயுமானவன் என்றால் சும்மாவா?
    சுகமாய்தான் இருந்திருக்கும்.

    ReplyDelete
  8. இந்த இயந்திரஉலகத்தில்...இப்படித்தானப்பா வாழ்க்கை
    போய்க்கொண்டிருக்கிறது.....
    பணம்,பணமென்று “பற்றெல்லாம்”மறந்து
    பறக்கின்றோம்

    ஆமா,அனுபவம் கவியாகியதோ?
    எங்க காலத்தில இப்படியெல்லாம் இல்லப்பு
    {ஒரு90வருடங்களுக்கு முன்பு}
    அன்னைகளின் அணைப்பும்.அன்பும் 24மணிநேரமும்
    தான்பெற்றெடுத்த பிள்ளைகளுடந்தான்.

    ReplyDelete
  9. தாயுமானவன் சரிதான். நீங்க எப்போ மச்சான் தந்தையுமானவளாக மாறினீர்?

    ReplyDelete
  10. அர்த்தநாரிக்கு வந்தனம்

    வாழ்த்துக்கள் காம்பினில் சுரக்கும் அன்பிற்கு

    விஜய்

    ReplyDelete
  11. பாசத்தை கூறும் நேசமான வரிகள் அண்ணே ...
    உணர்வுகளின் வெற்றிடத்தை எழுத்துக்கள் போக்கும் ..
    உங்கள் கவிதை போல் ...

    ReplyDelete
  12. ரொம்ப நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  13. தேர்வெழுதப்போவது தவிர்க்க முடியாதது,சிலர் அழகு குறைந்துவிடும் என்று தாய்ப்பால் தருவதில்லையாம்,கொடுமை.

    ReplyDelete
  14. தந்தையின் அன்பின் வெளிப்பாடும் அதை உணர்ந்து பசி மறந்த சிசுவின் நிலையும் கண்முன் காட்டி நெகிழ்ச்சி தரும் கவிதை.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.