Nov 21, 2011

ஊடல் என்பது...



எழுத்துகளற்ற 
கடிதங்கள் எழுத எங்கு கற்றாளோ

வெறும்
காதலாலும் பிரியங்களாலும்
நிரப்பி விடுகிறாள் காகிதத்தை...!

***

என்
காயத்திலிருந்து *
காற்றை நீக்கி விட்டு
காதலை நிரப்பி வைத்திருக்கிறாள்...!

(*காயம்-உடல்)
***


போர்வைக்குள் அவள் 
புறமுதுகு காட்டுவது  புதிதல்ல
எனக்கு புரியாததுமல்ல...!


26 comments:

  1. புறமுதுகு காட்டுபவளிடம் சரணாகதி அடையும் விநோதமும் ஊடற்போரில் இருவருமே வெற்றி கொள்ளும் விந்தையும் காதலிருந்தால் மட்டும்தானே கச்சிதமாய் நிகழும். அழகான கவிதை, அன்பான வாழ்க்கையைப் போலவே. பாராட்டுகள் சத்ரியன்.

    ReplyDelete
  2. எழுத்துகளற்ற
    கடிதங்கள் எழுத எங்கு கற்றாள்
    என தெரியவில்லை.//

    ஆரம்பமே கலக்கலா இருக்கே...!!!

    ReplyDelete
  3. போர்வைக்குள் அவள்
    புறமுதுகு காட்டுவது புதிதல்ல
    எனக்கு புரியாததுமல்ல...!//

    ஊடல் என்பது காதலின் கவுரவம் போ' என்ற பாடல் வரிகள் மனதில் வந்து போகிறது அருமை...!!!

    ReplyDelete
  4. இன்ட்லி, தமிழ் பத்து இணைப்பு குடுத்துட்டேன் மக்கா...

    ReplyDelete
  5. //போர்வைக்குள் அவள்
    புறமுதுகு காட்டுவது புதிதல்ல
    எனக்கு புரியாததுமல்ல...!//

    அன்பான வரிகள்...

    ReplyDelete
  6. மயிலிறகால் வருடுவது போன்ற, ரசிக்க வைத்த வரிகள். பிரமாதம்!

    ReplyDelete
  7. கவி வரிகள் சிம்ப்ளி சூப்பர்ப்....

    ReplyDelete
  8. ////எழுத்துகளற்ற
    கடிதங்கள் எழுத எங்கு கற்றாளோ

    வெறும்
    காதலாலும் பிரியங்களாலும்
    நிரப்பி விடுகிறாள் காகிதத்தை...!
    /////

    கவிதையில் காதல் ரசம் கொட்டுகின்றது..

    அருமை பாஸ்

    ReplyDelete
  9. ம்ம்...நான் சொல்ல என்ன கிடக்கு !

    ReplyDelete
  10. ம்ம்...நான் சொல்ல என்ன கிடக்கு!\\\\\\
    எழுத்துகளற்ற
    கடிதங்கள் எழுத எங்கு கற்றாளோ

    வெறும்
    காதலாலும் பிரியங்களாலும்
    நிரப்பி விடுகிறாள் காகிதத்தை...!\\\\\



    ஓஓஓஓஓ...அதுதான் ஒன்றும்
    சொல்லாமல் கிடக்கா,...!பேஷ்...பேஷ்...

    ReplyDelete
  11. ஊடலைப் பற்றி அழகான கவிதை..

    ReplyDelete
  12. பட்டினத்தாரின் பாடல் சொல்லை (காயம்)பயன்படுத்தி அழகிய கவி நண்பரே....

    ReplyDelete
  13. என்
    காயத்திலிருந்து *
    காற்றை நீக்கி விட்டு
    காதலை நிரப்பி விட்டாள்...!\\\\\\\\\\

    கேட்டீகளோ.....!பாத்தீகளோ!
    காதல் நிரம்பி வாய்,கண்வழியாக....
    வரப்போகுதுங்கோ,யாராச்சும் இவர் கண்ணில
    படாதீங்கோ அப்புறம் உங்களுக்கும் நிரப்பிவிடுவார்.
    நல்லகாலம் ஹேமா சுவிஸில்....நான்..................அகப்
    படவேமாட்டான்.............................

    ReplyDelete
  14. போர்வைக்குள் அவள்
    புறமுதுகு காட்டுவது புதிதல்ல
    எனக்கு புரியாததுமல்ல\\\\\\

    ம்ம்ம்ம்ம..........இதுதான் ஊடலா?
    அனுபவிராஜா...அனுபவி

    ReplyDelete
  15. சின்ன சின்ன வரிகளில் சிலிர்ப்பான கவிதைகள் ..
    சட்டென்று பதிந்து கொள்ளும் கவிதைகள் ...

    ரொம்ப உற்சாகமா இருக்கீங்க போலும் ..
    வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  16. very nice..Super kavithai.
    great man.

    Nandri.

    ReplyDelete
  17. ம்...நல்ல அனுபவம்தான்.எங்கயோ இருந்துகிட்டே இந்தப் போடு போடறீங்க.....

    ReplyDelete
  18. ஊடல் என்பது நல்ல பாடலாய் உங்கள் கவிதையில்...

    ReplyDelete
  19. புரியாததுன்னு எதுனா இருக்கா மாம்ஸு, ஆனால் புரியாது போல இருக்கனும்

    ReplyDelete
  20. போர்வைக்குள் என்றுமே காதல் தானே!

    ReplyDelete
  21. அப்படியா உங்களை இந்த கவிதை எழுதச் செய்த அந்த சகோதரி முகவரிதருங்கள் அவரிடம் பேச வேண்டும் மிகவும் சிறப்பான வரிகள் பாராட்டுகள் நல்எண்ணெய் தேய்த்து குளியுங்கள் உடற்சூடு தணியும் காரணம் இந்த கவிதை தான் .

    ReplyDelete
  22. ஊடல் கவிதை கூட இனிமையாய்...அருமை...வரிகள்...

    ReplyDelete
  23. உணர்வுகளை அழகாய் வெளிக்காட்டிய கவிதை வரிகள் அருமை!..வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு ...

    ReplyDelete
  24. காதலாலும் பிரியங்களாலும் நிரப்பப் பட்டு வந்த வெற்றுக் கடிதம் ஆகா! மயக்குகிறதா....

    அருமை.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.