Jan 12, 2012

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -04


எங்களை
பார்த்தவர்களில் பலரும்
‘கொஞ்சம் அழகானவளைப்
பார்த்திருக்கலாமே’ - என்றார்கள்.

‘என் கண்ணால்’
பார்க்கத் தவறிய அவர்களுக்கு
அழகைப்பற்றி என்ன தெரியும்...?

***

கையில்
இரு ஆரஞ்சு பழங்களைத் திணித்து
சாப்பிடச்சொல்லி விட்டு

சுவைமிகு
சுளையிரண்டையும்
அவளே எடுத்துச் செல்லும்
விநோதத்தை
யாரிடம் போய் சொல்ல...?


26 comments:

  1. முதலாவது அழகு..
    இரண்டாவது சுவை..

    ReplyDelete
  2. உங்க ஆளை பார்த்து இன்னும் கொஞ்சம் அழகா இருக்கிறவளை பார்த்திருக்கலாமுன்னு சொன்னா கேட்டுகிட்டு சும்மா வா இருந்தீங்க.. பேட் வெரி பேட்

    இரண்டாவது குளிர்..

    ReplyDelete
  3. இரண்டாவது "இதழ்" தானே மாம்ஸூ

    ReplyDelete
  4. ரசனையான கவிதை..
    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. ம்ம்ம்... அருமை அருமை

    ReplyDelete
  6. //‘என் கண்ணால்’
    பார்க்கத் தவறிய அவர்களுக்கு
    அழகைப்பற்றி என்ன தெரியும்...?//

    அருமையான வரிகள்.
    சிறப்பான கவிதை.

    ReplyDelete
  7. //‘என் கண்ணால்’
    பார்க்கத் தவறிய அவர்களுக்கு
    அழகைப்பற்றி என்ன தெரியும்...?//

    அருமை சத்ரியன்.

    ReplyDelete
  8. கட்டிப்போடும் அழகான காதல் தொடரட்டும்...வாழட்டும் !

    ReplyDelete
  9. கவிதைக் கோப்பைகளில் காதல் நிரம்பி வழிகிறது. பாராட்டுகள் சத்ரியன்.

    ReplyDelete
  10. உங்கள் காதல் தொடரட்டும்

    ReplyDelete
  11. என் கண்ணால்’
    பார்க்கத் தவறிய அவர்களுக்கு
    அழகைப்பற்றி என்ன தெரியும்...?//

    உண்மைக் காதலின் அருமை அண்ணா...

    ReplyDelete
  12. இப்பெல்லாம் நல்லா மூடி மறைத்து எழுதப் பழகிட்டீங்க! மிக நன்றாக உள்ளது சத்ரியன் ! வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  13. ரசனையான கவிதைகள்.... !!!

    ReplyDelete
  14. காதல் ஊற்றெடுக்கின்ற கவிதை....!!!!

    ReplyDelete
  15. அழகு என்பது பார்க்கும் பொருளில்
    இல்லை அதனை நோக்கும் கண்களால்
    மனதில் தோன்றுவதே!

    கவிதை, அதை மிகவும் அருமையாகப் போதிக்கிறது!
    ஓட்டுப் பட்டை காணவில்லையே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. புத்தாண்டு+பொங்கல்
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. என் கண்ணால்’
    பார்க்கத் தவறிய அவர்களுக்கு
    அழகைப்பற்றி என்ன தெரியும்...?//
    அருமை.

    தொடரட்டும் அன்பு.

    ReplyDelete
  18. சுளையிரண்டை அவளே எடுத்துச் செல்லும் விநோதம். அருமை. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  19. என் கண்களில் இருந்து ஓடி ஒளிந்த அருமையான வரிகள்

    ReplyDelete
  20. //எங்களை
    பார்த்தவர்களில் பலரும்
    ‘கொஞ்சம் அழகானவளைப்
    பார்த்திருக்கலாமே’ - என்றார்கள்.
    //

    மாமூ மேட்டர் ஊட்டுக்காரம்மாவுக்கு தெரியுமா?

    ReplyDelete
  21. என்ன சார் காதல் ததும்புது :-)

    ReplyDelete
  22. அழகான வார்த்தை நடை.அருமை கவிதைகள்

    ReplyDelete
  23. நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. காதலில் நல்ல தேர்ச்சி சிறப்பான தேர்வு செய்யப்பட வார்த்தைகள் தொடருங்கள்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.