May 7, 2012

பரு காட்டி விரல்


இளம் இருளில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரும்பும்
விண்மீன் போல
அவளின்
இளங்கறுப்பு கன்னத்தில்
ஒன்றிரண்டு
பருவ பருக்கள்.

அதை
அடிக்கடி தொட்டுத் தடவும்
அவளின்
ஆள்காட்டி விரல்
எனக்கு மட்டும்
பரு காட்டி விரலாக
தெரிவதேன்?

#



27 comments:

  1. எனக்கும்....!
    தெரியல
    பதில் கண்டிப்பா சொல்வாங்க
    அவுங்க ...(:

    ம்ம்ம் ....அருமை நண்பா

    ReplyDelete
  2. அண்ணனுக்கு வயசு கூடினாலும்
    அவரின் வரிகளுக்கு வயது
    குறைந்து சுவை கூடுவது எப்படி???

    இளமை பொங்கும் அழகிய வரிகள் அண்ணே ..

    ReplyDelete
  3. உன்னாலே தான் இந்தப் பருக்கள் வந்தது என்று சொல்லாமல் சொல்லத்தான்...

    பெண்களின் விரல் கூட சில நேரங்களில் பேசுகிறது என்பதை உங்கள் கவிதையில் கண்டு கொண்டேன். நன்றிங்க.

    ReplyDelete
  4. பதில் கண்டிப்பா சொல்வாங்க
    அவுங்க ...(:\\\\\\

    யாருங்க?சீ...சீசீசீ.. எப்படிங்க! எப்படிங்க!எனக்கு காலால..கோலம்போட வருது ....

    ReplyDelete
  5. அவளின்
    இளங்கறுப்பு கன்னத்தில்\\\\\


    உங்களால் கறுப்பியென்று வருணனை
    செய்யப்படும் அந்த வஞ்சியின் ...
    கவனத்துக்கு!

    ReplyDelete
  6. ரொம்ப நல்ல இருக்குங்க அண்ணா கவிதை ...சூப்பர்

    ReplyDelete
  7. ஆள்காட்டி விரல்
    எனக்கு மட்டும்
    பரு காட்டி விரலாக
    தெரிவதேன்?

    பார்த்துப்,பார்த்து ஏங்கத்துடன்.....
    பருகாட்டி! இந்தத் தாகவரட்சியால்..
    கண் கொஞ்சம் மங்கலாகத்தான் தெரியும்

    ReplyDelete
  8. பதில் கண்டிப்பா சொல்வாங்க
    அவுங்க ...(:///


    ஏன் எல்லாரும் இதே சொல்லுரிங்க ....


    தெரிஞ்ச்வர்கள் பதிலை பகிர்ந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கு மல்லவா .....

    ReplyDelete
  9. ஏன் எல்லாரும் இதே சொல்லுரிங்க ....\\\\\

    கலை! ஹேமா பாதிவழியில..பிரம்போட வந்துகொண்டிருக்கிறாள...

    ReplyDelete
  10. அண்ணனுக்கு வயசு கூடினாலும்
    அவரின் வரிகளுக்கு வயது
    குறைந்து சுவை கூடுவது எப்படி???
    ////

    சந்துல சூப்பர் ஆ ச்ய்க்கில் ஒட்டுரிங்க குயந்த .....

    இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை அடிமை சரியா பயன் படுத்தி இருக்காங்க ....

    ReplyDelete
  11. கலை! ஹேமா பாதிவழியில..பிரம்போட வந்துகொண்டிருக்கிறாள...///


    கலா அக்கா ஏன் இப்புடி லாம் பயமுருத்துரிங்கள் ..
    ஹேமா அக்கா இன்னைக்கு பிஸி எண்டு தெரியும் அதான் தைரியமா காதல் கவிதை பக்கம் இருக்கான் .....

    கலா அக்கா நீங்கள் சொல்லி கொடுத்துராதிங்க ஹேமா அக்காகிட்ட ....டீல்

    ReplyDelete
  12. அதை
    அடிக்கடி தொட்டுத் தடவும்
    அவளின்
    ஆள்காட்டி விரல்
    எனக்கு மட்டும்
    பரு காட்டி விரலாக
    தெரிவதேன்?\\\\\

    அதென்ன? உங்களுக்கு மட்டுமா!
    தெரிகிறது எனக்குந்தான்,தெரிகிறது!
    ஆனால் நீங்கள சொல்வதுபோல்
    பரு த்தமாதிரித் தெரியவில்லையே!
    எதற்கும் ஹேமா வரட்டும்!

    ReplyDelete
  13. நான் உங்களைவிடச் சின்னவதான்!நான் வந்துபோனதை நீங்கள ஹேமாவிடம் சொல்லாதீங்கோ......
    உங்களுக்கும் ,எனக்கும் சரியாகப்
    போச்சு மூச்சுக்காட்டாம...ஓடிப்போவோம்

    ReplyDelete
  14. அடப்பாவி... எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க.. அந்தப் புள்ளைக்கு மருந்து வாங்கி குடுக்காம... கவிதையா எழுதுறியே கண்ணா என்ன விசேஷம் அம்பி...

    ReplyDelete
  15. கவிதை சிறிது-ஆனால்
    கற்பனை அரிது
    நயமோ அருமை-அது
    நல்கிடும் பெருமை
    இளமை திரும்புது-புது
    இன்பம் விரும்புது
    வளமை வளருது-நாளும்
    வயதும் குறைகிறது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. வேலை அலுப்பில நான் ஓடித்திரிய என்ர பேர்ல என்னால்லாம் கதைக்கினம் இங்க.அவர் என்னா பாண்ணினாரோ போன்ல.ஏன் பரு வந்திச்சோ....!

    இந்தக் குட்டிச்சாத்தான் கருவாச்சி இங்கயும் வந்திட்டுதோ கலாவோட சேர்ந்து கலாய்க்கா.கருவாச்சி உங்கட அங்கிளைப் பாக்கச்சொல்றன்...கலா க்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    பரு வந்தால் அப்ப மட்டும்தான் அழகு.அப்புறம் கருப்பாகிக் கன்னம் அசிங்கமாப்போய்டும் கருப்பா !

    ReplyDelete
  17. பரு காட்டி விரலா
    அழகிய பருவம் காட்டும் விரலா
    சுவாரஸ்யமான சிந்தனை
    மனம் கவர்ந்த பதிவு

    ReplyDelete
  18. மனங்கவர்ந்த கவிதை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. ஆள் காட்டி விரலை பரு காட்டி விரல் என்று பெயர் வைத்து புதுமை கண்டு விட்டீர்கள் போங்க அழகிய கவிதை

    ReplyDelete
  20. எப்படி எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரிகிறது.

    ReplyDelete
  21. புதிர்க் கவிதை....பதில் புரியலை....நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  22. இளமை மாறவில்லை ..........

    ReplyDelete
  23. எதை எதையோ ஆய்வு செய்கிறார்கள் சிறப்பான ஆய்வு பாராட்டுக்கள்

    ReplyDelete
  24. அருமையான வரிகளை அடக்கமாகக் கொடுத்துள்ளீர்கள் நன்றி..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்

    ReplyDelete
  25. அன்பின் பகிர்தலாய் "விருது" ஒன்றை பகிந்துள்ளேன்
    நேசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் (:

    ReplyDelete
  26. ஹா ஹா இன்னும் பருவ வயதிலேயே இருக்கீங்க போல இருக்கு கோபால்..:)

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.