Jul 21, 2012

களவொழுக்கம்




நிறைமாத கர்ப்பிணியின்
நடையைப் போல
தளும்புகிறது
நிரம்பிய ஏரி.

விதவிதமாய் ஒலியெழுப்பி
பயமுறுத்தும் முயற்சியில்
தவளைகள்

கரைக்குள் தவிக்கும்
அலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
நான்.

ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறதே
தூங்கி போயிருப்பாளோ?




19 comments:

  1. அருமையான ஒப்பீடு
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நிகழ்விற்குள் தவறாமல் வந்துவிடும் நினைவு அருமை.

    ReplyDelete
  3. நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ''...கரைக்குள் தவிக்கும்
    அலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
    நான்....''
    சுப்பர் மன்மதா!.....
    கம்பு தானே!....
    எப்படித்தான் சிந்தனை வருகிறதோ!.
    ஒவ்வோருவர் ஒவ்வோருவர் பாணி! நன்று!..நன்று....
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. கொடுத்த உவமைகள்
    சிந்தையை மயக்குகிறது
    நண்பரே..

    ReplyDelete
  6. தூங்கித்தானே சாமம்ன்னா இருப்பா....பின்ன உங்களை மாதிரி கன்னியில்லாத்தீவுக் கரையிலயா குந்திக்கிட்டு...ஓ ஒரு வேளை நேரவித்தியாசமோ அவவுக்கும் உங்களுக்கும் !

    ஒன்றை ஒன்றுக்குள் திணித்து காதலை உருவாக்கும் கவித்திறன் அற்புதம் சத்ரியா !

    ReplyDelete
  7. களவொழுக்கம்
    கற்பொழுக்கமாகி விட்டதே
    கவிதையில்..!!!

    பின்னிட்டிங்க போங்க நண்பரே.

    ReplyDelete
  8. சிறந்த படைப்பாக்கம் ... கூறிய சொற்களை விட அது கூறும் பொருள் அதிகம் அண்ணே

    ReplyDelete
  9. இரவுக்குறி பற்றி இயம்பாதது உம் குற்றம். இப்போது புலம்பித் திரிவதில் என்ன லாபம்?

    ஏரியிலே தவளைக்கல் எறிந்தேனும் எழுப்பப் பாரும் அவளை!

    களவொழுக்கம் காட்டும் கவிதை கலக்கல். பாராட்டுகள் சத்ரியன்.

    ReplyDelete
  10. ஏன் இந்தபுளள, வா! என்று சொல்லிவிட்டு வராமல் போனாள?
    சரியான ஏமாற்றுக்காரியாக இருப்பாளோ
    பாவம் இவரு.....காத்திருந்து,,காத்திருந்து....

    ஹேமா,இது அனுபவம்தான்,அனுபவமேதான்!

    ReplyDelete
  11. ''களவொழுக்கம் ''

    பதினைந்து
    இருபது வருடங்கள்
    முன்னுள்ள கிராமங்களில்
    வரண்டுபோன ஈர நிகழ்வுகளின்
    சாரல்


    சிறப்பு நண்பா

    ReplyDelete
  12. தூங்கித்தான் போகட்டுமே.இப்போது என்ன குறைந்து விட்டுப்போகிறது.அவளின் நினைவுகள்தான் அலைபாய்கிறதே மனதுக்குள்/

    ReplyDelete
  13. களவொழுக்கம் சூப்பர் அண்ணா...

    ReplyDelete
  14. காதல் நிறைந்தால்
    களவாட தோணுவது
    இயல்புதான் .........

    தோன்றவில்லை என்றாள் தான்
    ஆச்சர்யம் ..........

    //கரைக்குள் தவிக்கும்
    அலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
    நான்.//

    உணர்வு குவியல் ..........அருமை சத்திரியா .......

    ReplyDelete
  15. //கரைக்குள் தவிக்கும்
    அலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
    நான்.//

    மிக அழகிய சொல்லாடல் சத்ரியன் இப்படி வார்த்தைகளை அழகுணர்ச்சியுடன் படைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான், பளிச்சின்னு மனசில் ஒட்டிக்கிட்டது. என் ஸ்டேடசிலும் இதை தான் வைத்துள்ளேன் தற்போது.. சோ ப்யூட்டிபுல்

    ReplyDelete
  16. கனவுக் கன்னி அவள் தூங்கியதனால்
    கவிதை மலர் மலர்ந்த விதம் இதமானது!..
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  17. ஒரு நல்ல நினைவுகளை பதிவு செய்து உள்ளீர் இரவுக்குறி பகற்குறி பார்த்து உங்களின் உறவுகளை தொடருங்கள்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.