Dec 10, 2014

சமர்




த்தகத்தில் அரியாசனமிட்டு
ராணியாக வீற்றிருந்தாய்
புலவனாக கோட்டைக்குள் நுழைந்தேன்
குடம் தொடங்கி
மந்தகாச புன்னகை வழியிறங்கி
மார்மீது சறுக்கி 
மடி கடந்து
பாதத்தில்
ஓர் பூ உதிர்த்தேன்

இடை தரித்த உடைவாள் உருவி
பரிசளித்து
சமருக்கு சம்மதம் கேட்டாய்
மகிழ்வுடன் மயிற்பீலி தந்தேன்
இனி 
விடியும் முன் மருந்திடுவதே
முதல்வேலை உனக்கு

*


1 comment:

  1. செம...
    தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம்நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.