எருமைகள் மேயும் வனாந்தரத்தில்
நெருஞ்சிப்பூக்களைத் தேடி
நடக்கிறேன்
நிற்க சொல்லி நிர்பந்திக்கிறது
முனை அலர்ந்த வெண்ஊமத்தை
மொக்கு
முன்னாள் ஒன்றில்
நெற்றி உதிர்த்த திருநீறு
நிலைக்கொண்டிருந்தது என்
நுனிமூக்கில்
ஒற்றி துடைத்திட உன் உள்ளங்கை
பூத்த
வெண்பூ கைக்குட்டை விரிகிறது
மனக்கண்ணில்
நின்று நினைவில் மூழ்கும்
நிலையில் இல்லை நான்
தொலைதூரம் அலைய வேண்டியதிருக்கும்
தொடர்ந்தேன் தேடலை
அந்திப் பொழுதாகியும்
நெருஞ்சியைச் சந்திக்காமலே
திரும்புவது கொஞ்சம் துயரம் தான் எனக்கு
காம்பின் பிடி தளர்த்தித்
தலைக்கீழாகக் கவிழ்ந்து
வழிமறிக்கிறது
காலையில் எனை தடுத்த ஊமத்தம்பூ
பாவாடையை வட்டமாக பரப்பி
பசும்புற்களின் மீதமர்ந்த
நீயாக உருமாறுகிறது
ஊமத்தையும், அதன் உள்ளிருந்து நீளும் மகரந்தக்குழலும்
மீளும் வழியடைத்து
வேலியிட்டு விட்டாய் நீ
இனி
புதைக்குழியில் சிக்கி
கால் மாற்றி கால் பலம் செலுத்தி
மேலேற முயலும் களிறு போல
நானும்
ஓயாது உள்ளிழுக்கும் சகதி
போல உன் நினைவும
*
அருமை...
ReplyDeleteநன்றிங்க தனபாலன்.
Delete