உன்னைக்
கரம் பிடிக்க ஆசைதான்.
என் விரல் பட்டாலே
நீ தான்
ஒரு மாதிரியாகி விடுகிறாய் ...
ஊரறியும்
உலகறியும்
நீ யொன்றும்
கண்ணகி வம்சமில்லை என ...
வெட்ட வெளியினில்
நிர்வாணமாய்
நீ இருக்கையில்
இன்றும் ஒருமுறையென
உள்ளுக்குள்
ஓர் சபலம் உதிப்பது
உண்மை.
உன்னருகே
நான் நெருங்குகையில்
உன் அச்சம்
உணரமுடிகிறது என்னால் .
இருந்தும்
உன்
சிணுங்கல் விரும்பியே
தேடி வந்து -உன்னைத்
தீண்டி மகிழ்கிறேன் .
தொட்டாச்சிணுங்கியே !
//தொட்டு - உன்னைத்
ReplyDeleteதுன்புறுத்தி
இன்புற்றவர்கள்
இங்கு ஏராளம் .
ஆனாலும் ,
அடுத்தவரின் வருகையை
முகமகிழ்ந்தே வரவேற்கிறாய் .//
சிறுவயதில் தொட்டுப்பார்த்த ஞாபகம்....எத்தனைமுறை சிணுங்கினாலும் மீண்டும் உயிர்ப்பெரும் அதே இளமை....
கவிதை அருமை...
//சிறுவயதில் தொட்டுப்பார்த்த ஞாபகம்....எத்தனைமுறை சிணுங்கினாலும் மீண்டும் உயிர்ப்பெரும் அதே இளமை....
ReplyDeleteகவிதை அருமை...//
பாலாசி,
எத்த்த்த....னை முறை?
ம்ம்ம்ம்ம்.
நன்றி நண்பா!
வாவ்....என்னப் பொருத்தம் நம் இருவருக்கும்....
ReplyDeleteஏய்..ஏய் ரொம்பச் சிரிக்க வேண்டாம்...
பல்லு சுளுக்கிரும்,...
நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்!1
ரொம்ப நாளா நானும் இந்த சிணுங்கியைப்
பற்றி எழுதலாம்,எழுதலாம் என்றெண்ணி...
நாட்கள் தான் கழிந்தன.....எழுதவில்லை
அதுதான்!!வேறுஒன்றுமில்லை\\\
கவிதையில் இது ஒரு டெக்னிக் படிப்பவரை வேறு ஒன்றை நினைக்க வைத்து நாம் வேறு ஒன்றை சொல்வது அதை சரியாகச் செய்திருக்கிறீர்கள் சத்ரியன். பிறகு 'அந்த நானே யோசிச்சது' உண்மையில் என்னை யோசிக்க வைத்தது, உண்மையில் அது சத்ரியன் யோசித்தது தானா என்று. நூறு சதவிகிதம் உண்மையான விசயம். கிரேட் சத்ரியன்.
ReplyDelete\\உன்னைக்
ReplyDeleteகரம் பிடிக்க ஆசைதான்.
என் விரல் பட்டாலே
நீ தான்
ஒரு மாதிரியாகி விடுகிறாய் ..\\\
காதல் பெண்களுடன் முடிந்து...
பாவம் செடிகளிடமுமா?
அது நல்லாத்தான் இருக்குது
நீங்கதான்..ஓருமாதிரியா.....
ஊரறியும்
உலகறியும்
நீ யொன்றும்
கண்ணகி வம்சமில்லைஎன \\\\\\
அது வந்து என்னைத் தொடு,தொடு என்று
கூப்பிட்டதா??நீங்களாகப் போய்த் தொடுறது
அப்புறம் கற்ப்புப்... பாட்டுடில் திட்டிறது பாவம்..
\\\வெட்ட வெளியினில்
நிர்வாணமாய்
நீ இருக்கையில்
இன்றும் ஒருமுறையென ...
உள்ளுக்குள்
ஓர் சபலம் உதிப்பது
உண்மை\\\\\\
அதன் சுதந்திரத்துக்குக் கூடத் தடையா?
இந்தக் கண்கள் இருக்கே... அப்பப்பா...
செடி,பூக்களுக்குக் கூடத் துணி போட்டுத்தான்
மூடவேண்டும்.
\\\\\உன்னருகே
ReplyDeleteநான் நெருங்குகையில்
உன் அச்சம்
உணரமுடிகிறது என்னால்\\\\\
தெரிந்திருந்தும் விடவா
போறீக.....
உணர்ந்தாலும்.... அது செயலில்
இல்லையே!!
பயந்தான்!பயந்தான்!!
எந்த நேரம் என்ன நடக்குமோ??
\\\\இருந்தும்
உன்
சிணுங்கல் விரும்பியே
தேடி வந்து -உன்னைத்
தீண்டி மகிழ்கிறேன் .\\\\\
எலிக்கு வலி,,பூனைக்கு கொண்டாட்டம்
அதன் நிலமை புரிந்தும் தொடத்துடிக்கும்
கைகளை என்ன?என்ன?செய்யலாம்!!??
உங்களுக்கு ஒரு விளையாட்டு ஆனால்......
அதன் கஷ்ரம் புரியுமா?
//ரொம்ப நாளா நானும் இந்த சிணுங்கியைப்
ReplyDeleteபற்றி எழுதலாம்,எழுதலாம் என்றெண்ணி...
நாட்கள் தான் கழிந்தன.....எழுதவில்லை//
கலா,
இந்த மனுசங்களே இப்படித்தான். ஒருத்தர் நெனைச்சிக்கிட்டே இருப்பாங்க. வேறொருத்தர்........போய்ட்டேயிருப்பாங்க.
//கவிதையில் இது ஒரு டெக்னிக் படிப்பவரை வேறு ஒன்றை நினைக்க வைத்து நாம் வேறு ஒன்றை சொல்வது அதை சரியாகச் செய்திருக்கிறீர்கள் சத்ரியன். //
ReplyDeleteராஜ்கமல்,
செஞ்சிட்டேனா...அப்பாடி இன்னிக்கி நிம்மதியா தூங்குவேன்.
//பிறகு 'அந்த நானே யோசிச்சது' உண்மையில் என்னை யோசிக்க வைத்தது, உண்மையில் அது சத்ரியன் யோசித்தது தானா? என்று.//
நம்பியே ஆகனும். நிஜமாலுமே நானேதான் யோசிச்சேன்.
// நூறு சதவிகிதம் உண்மையான விசயம். கிரேட் சத்ரியன்.//
நன்றிங்க.
//காதல் பெண்களுடன் முடிந்து...
ReplyDeleteபாவம் செடிகளிடமுமா?//
ஆஹா,
என்னை இன்னிக்கி 'பிண்ணி பெடலெடுக்காம' விடமாட்டாங்க போல.!
//எலிக்கு வலி,,பூனைக்கு கொண்டாட்டம்
ReplyDeleteஅதன் நிலமை புரிந்தும் தொடத்துடிக்கும்
கைகளை என்ன?என்ன?செய்யலாம்!!??
உங்களுக்கு ஒரு விளையாட்டு ஆனால்......
அதன் கஷ்ரம் புரியுமா?//
இப்படியெல்லாம் யோசிச்சா "பூவாவுக்கு" (சோறு) என்ன பண்றது?.சில விடயங்களை ஆராயக் கூடாது. சரியா?
கவிதையிலும் anticlimax ஆ
ReplyDeleteநல்லாருக்கு நண்பா
விஜய்
சின்ன வயசு நினைவலைகள்.
ReplyDeleteம்ம்ம்...இன்னும் சின்னப்பிள்ளையென்ற நினைவாக்கும்.
சத்ரியா,யாரையாச்சும் தொட்டுச் சிணுங்க வச்சு கவிதையா எழுதினாச் சரின்னு இருக்கு உங்களுக்கு.
நல்லாத்தான் இருக்கு.ஆனா....
ReplyDelete//துன்புறுத்தி
இன்புற்றவர்கள்//
சிணுங்கள் இன்பம் என்பதை ஒத்துக் கொள்ளமுடிகிறது என்றாலும்
தொடுவது துன்புறுத்தல் என என்னால் நினைக்க முடியவில்லை.
//நான் நெருங்குகையில்
உன் அச்சம்//
கொஞ்ச நாள்ல அதெல்லாம் சரியாகிவிடும்.
[நானும் தொட்டால் சிணுங்கி பற்றித்தான் சொல்லுகிறேன். திரு எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள், தனது “எண்ணங்கள்” புத்தகத்தில்,தினமும் அதனைத் தொட்டு,பேசிக் கொண்டிருந்தால்,நாம் தொட்டாலும் சிணுங்காது எனக் கூறியுள்ளார்.]
ஆங்கிலத்தில் தான் சரியான பெயர் கொடுத்துள்ளார்கள்.அதன் பெயர்
“touch me not" இதுவரை இது அதன் பெயர் என எண்ணியிருந்தேன். இப்போது புரிகிறது அது அதன் பெயரல்ல,மாறாக அதன் குரல்.
இதனை உணர வைத்தமைக்கு நன்றி சத்ரியன்.
//கவிதையிலும் anticlimax ஆ
ReplyDeleteநல்லாருக்கு நண்பா..///
விஜய்,
எல்லாம் ஒரு 'இது'க்குதான்.
ஹேமா,
ReplyDelete//சின்ன வயசு நினைவலைகள்.
ம்ம்ம்...இன்னும் சின்னப்பிள்ளையென்ற நினைவாக்கும்.//
பின்னே?(எப்பவும் இளவட்டந்தான்)
//சத்ரியா,யாரையாச்சும் தொட்டுச் சிணுங்க வச்சு கவிதையா எழுதினாச் சரின்னு இருக்கு உங்களுக்கு.//
நானா எதுவும் திட்டமிட்டு செய்யிறதில்ல. தானா நிகழுது....ம்ம்ம்ம்ம்!
//ஆங்கிலத்தில் தான் சரியான பெயர் கொடுத்துள்ளார்கள்.அதன் பெயர்
ReplyDelete“touch me not" இதுவரை இது அதன் பெயர் என எண்ணியிருந்தேன். இப்போது புரிகிறது அது அதன் பெயரல்ல,மாறாக அதன் குரல்.//
அரங்க பெருமாள்,
அப்படியா?..ம்ம்ம்ம்!
//இதனை உணர வைத்தமைக்கு நன்றி சத்ரியன்.//
இவ்வளவு "மேட்டரா" வெச்சிருக்கேன் அதுல?
நல்ல கவிதைகள்...
ReplyDeleteநல்லா இருக்கு அண்ணே..
ReplyDeleteபொருத்தமான் உவமைகள்.. வரிகள் பொதுவில் நெருடுகின்றன...
ReplyDeleteஇன்னும் எதிர்பார்க்கிறோம்..
நல்லா இருக்கு!
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
kavaithai nalla iurkuga anna
ReplyDeleteகவிதை அருமை, உங்க கவிதைகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்
ReplyDelete//நல்ல கவிதைகள்...//
ReplyDeleteநன்றி கமலேஷ்.
/நல்லா இருக்கு அண்ணே..//
ReplyDeleteஅன்பு,
நன்றி. உங்கள் முதல் வருகைக்கும்..கருத்திற்கும்!
//kavaithai nalla iurkuga anna///
ReplyDeleteகாயு,
எங்கம்மா அடிக்கடி காணாம போயிடறீங்க?
(அண்ணனுக்கு ஆதரவு இல்லாம போறதால, ஒரு சிலர் வந்து திட்டிட்டு போறாங்க.)
நன்றி.
/கவிதை அருமை, உங்க கவிதைகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்..//
ReplyDeleteவசந்தி,
உங்கள் முதல் வருகைக்கு முதலில் 'வணக்கம்'.
இனி வரும் கவிதைகளும் உங்களுக்குப் பிடிக்கும். தொடர்ந்து வாருங்கள்.
கருத்தினைப் பதிவு செய்யுங்கள்.
நன்றி.
அது என்ன! ஒரு சிலர்….
ReplyDeleteபேர் சொல்லத் தையிரியம்
இல்லையா?
சேச்சேச்ச...என்ன!பயந்தாங்கொள்ளி...
உன்னருகே
ReplyDeleteநான் நெருங்குகையில்
உன் அச்சம்
உணரமுடிகிறது என்னால் . //
அச்சம்
மடம்
நாணம்
பயிர்ப்பு
பயிருக்கும்
இருக்கின்றதென்றால்
அது உன்னிடம் மிகையாகாது
தொட்டாசிணுங்கியே.....
மாமா கேட்டுகொண்டதற்கிணங்க ஒன்றும் திட்டாமல் போகிறேன்
ReplyDeleteநன்றி :))))))))))
நீ(ங்க) என்ன என்ன சொன்னாலும் கவிதை...
ReplyDeleteஉன்னை எங்கு எங்கு தொட்டாலும் கொடுமை...
அன்பின் சத்ரியன்
ReplyDeleteஅருமையான கவிதை - நல்ல கற்பனை - வாழ்க
மிக மிக ரசித்தென் மகிழ்ந்தேன்
நல்வாழ்த்துகள் சத்ரியன்
//அன்பின் சத்ரியன்
ReplyDeleteஅருமையான கவிதை - நல்ல கற்பனை - வாழ்க
மிக மிக ரசித்தென் மகிழ்ந்தேன்
நல்வாழ்த்துகள் சத்ரியன்//
வாங்க சீனா,(Cheena)
முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.