Dec 4, 2009
மறுநடவு
அவள் தரப்பிலும் யாரும் இல்லை
என் தரப்பிலும் யாரும் இல்லை
கடவுளாய் மாற்றப்பட்ட
கற்சிலை முன்பு நலமாகவே நடந்தேறியது
எங்களின்
கந்தர்வக் கல்யாணம்
அதே வருடம் ஒரு வாரிசு
அடுத்த வருடமே விவாகரத்து
அழுதுச் சொன்னேன்
அழுந்தச் சொன்னேன்
வேண்டாமே இந்த "ரத்து" என்று.
அவள் -
கேட்கவுமில்லை
கேட்பதாகவும் இல்லை .
பிரிந்தே விட்டாள்
பிள்ளையும் என்னையும் விட்டு.
அது அவள் குற்றமில்லை
அழகின் கர்வம்
உடலின் திமிர்
காலம்
கடிகார முள்ளில்
சுற்றிச் சுற்றிச் சுருங்கியது -அவளின்
சருமம் போலவே.
நீண்ட இடைவெளி.......................
ஒரு நாள்,
பெண்களின்
பேராயுதமாம் கண்ணீர் - அதை
கண்களில் ஏந்தி
உழுதாள்...என்னை.
அவள் மனதின் மறு நடவிற்கு
இவனின் மனம் வேண்டும் என்று .
என் கை விரலை இறுகப்பற்றியபடி
கண் சிமிட்டினான் என் கண்மணி .
இறுக்கம் தளர்த்தி
இதயம் சொல்லியது
"பிரிந்தால் பாவம்-மீண்டும்
இணைந்தால் தீரும்" என்று.
Subscribe to:
Post Comments (Atom)
//அவள் தரப்பிலும் யாரும் இல்லை
ReplyDeleteஎன் தரப்பிலும் யாரும் இல்லை
கடவுளாய் மாற்றப்பட்ட
கற்சிலை முன்பு நலமாகவே நடந்தேறியது
எங்களின்
கந்தர்வக் கல்யாணம்//
பொய் பொய்
திருட்டு கல்யாணம்...
//அதே வருடம் ஒரு வாரிசு
ReplyDeleteஅடுத்த வருடமே விவாகரத்து//
இதுக்கு பேர் கல்யாணமா கன்றாவி
//அழுதுச் சொன்னேன்
ReplyDeleteஅழுந்தச் சொன்னேன்
வேண்டாமே இந்த "ரத்து" என்று.//
ஆண்கள் அப்படித்தான் விட்டுக்கொடுத்து போவபவர்கள் பெண்கள் ராங்கிகள்...
யாரடிச்சாலும் தாங்குவோம்ல...
//அவள் -
ReplyDeleteகேட்கவுமில்லை
கேட்பதாகவும் இல்லை .
பிரிந்தே விட்டாள்
பிள்ளையும் என்னையும் விட்டு.//
பிள்ளையையுமா அவ மனுசியே இல்ல பேய்...
இது மறு நடவா? மறு உழவா?
ReplyDeleteஅருமையப்பா தலைவன் தலைவி இருவரும் பிரிந்து பின் புரிந்து வாழுதலை சொன்னது அருமை
நல்லா இருக்கு கற்பனைக் க(வி)தை
ReplyDelete//அவள் -
ReplyDeleteகேட்கவுமில்லை
கேட்பதாகவும் இல்லை .
பிரிந்தே விட்டாள்
பிள்ளையும் என்னையும் விட்டு.
அது அவள் குற்றமில்லை
அழகின் கர்வம்
உடலின் திமிர்//
அழமான, அழுத்தமான வரிகள்......
கவிதை Superrr.........
உலகமெனும் நாடகமேடையில் நாமெல்லாம் நடிகர்கள் தானே. தவறு செய்வது மனித இயல்பு. மன்னிக்க வேண்டியது மனித பண்பு.
ReplyDelete//இதுக்கு பேர் கல்யாணமா கன்றாவி//
ReplyDelete//ஆண்கள் அப்படித்தான் விட்டுக்கொடுத்து போவபவர்கள் பெண்கள் ராங்கிகள்...
யாரடிச்சாலும் தாங்குவோம்ல...//
//பிள்ளையையுமா அவ மனுசியே இல்ல பேய்...//
//அருமையப்பா தலைவன் தலைவி இருவரும் பிரிந்து பின் புரிந்து வாழுதலை சொன்னது அருமை//
வசந்து,
1. எனக்கு பொய் சொல்லத்தெரியாதுங்கோ....
2. நம்பனும். இதுக்கு பேரும் கல்யாணந்தான்.
3. ராங்கின்னெல்லாம் சொல்லபிடாது தம்பி. உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. (கொஞ்சம் அடக்கி வாசிக்கனும்...ஒருத்தியிடம் சிக்குற வரைக்குமாவது)
4. ஒரு இதுக்குதானே....
5. ஏற்கனவே, எங்கெங்கோயோ படிச்சது " புரியாத பிரியம் பிரியும் போது புரியும்..." அதான்.
//நல்லா இருக்கு கற்பனைக் க(வி)தை//
ReplyDeleteபாலா,
நல்லா கதை விட்டிருக்கிறேனா..? இந்த க(வி)தைக்கும் ஒரு போட்டியில இரண்டாம் பரிசு கிடைச்சது மக்கா.. (2006)
//அது அவள் குற்றமில்லை
ReplyDeleteஅழகின் கர்வம்
உடலின் திமிர்//
அழமான, அழுத்தமான வரிகள்......
கவிதை Superrr.........//
வணக்கம் சங்(க)கவி,
முதல் வருகைக்கும் , கருத்து பரிமாற்றத்திற்கும் நன்றி.
//உலகமெனும் நாடகமேடையில் நாமெல்லாம் நடிகர்கள் தானே. தவறு செய்வது மனித இயல்பு. மன்னிக்க வேண்டியது மனித பண்பு.//
ReplyDeleteவணக்கம் தமிழுதயம்,
நானும் அதைத்தான் பதிவு செய்ய முனைந்திருக்கிறேன்.
தங்களின் முதல் வருகைக்கும், மேலான கருத்துப் பகிர்விற்கும் நன்றி.
மறு நடவு, மகசூல் பெற வாழ்த்துக்கள்
ReplyDeletemm.. k..! நல்லா இருக்கு அண்ணே..!
ReplyDeleteஅழுதுச் சொன்னேன்
ReplyDeleteஅழுந்தச் சொன்னேன்
வேண்டாமே இந்த "ரத்து" என்று.
..........விட்டுட்டு போன மகராசி, அழகு கவிதைக்கு காரணகர்த்தா.....
சத்ரியா ,கற்பனைதான்.என்றாலும் ஏன் இப்பிடி ஒரு கற்பனை ?
ReplyDeleteஅன்பு ஆழமானால் பிரிவு என்பது மறுநடவுதான்.ஆனால் இவ்வளவு அன்பைத் தேக்கி வைத்திருக்கும் ஒருத்தி பிரிந்து போகக் காரணம் என்ன ! கவிதையை ஒத்துக்கொள்ள முடியவில்லை.
//ஹேமா சொன்னது…
ReplyDeleteசத்ரியா ,கற்பனைதான்.என்றாலும் ஏன் இப்பிடி ஒரு கற்பனை ?
அன்பு ஆழமானால் பிரிவு என்பது மறுநடவுதான்.ஆனால் இவ்வளவு அன்பைத் தேக்கி வைத்திருக்கும் ஒருத்தி பிரிந்து போகக் காரணம் என்ன ! கவிதையை ஒத்துக்கொள்ள முடியவில்லை.//
வழிமொழிகின்றேன்....
இருந்தாலும் வரிகள் சிறை வைகின்றது
கவிதை ரொம்ப நல்ல இருக்கு...
ReplyDeleteவரிகளும் கூட...
புரிதலும்
ReplyDeleteபின்பு
பிரிதலும்
மீண்டும்
பிரிதலில்
புரிதலிலும்
இயல்பானாலும்
இம்சையே
நண்பா
நல்லா இருக்கு மக்கா
\\\\அது அவள் குற்றமில்லை
ReplyDeleteஅழகின் கர்வம்
உடலின் திமிர்\\\\\
{மனைவியின்}அழகையும்,உடலையும் பார்த்து
சந்தேகப்படும் கணவன்மார்களும் உலகில்
உண்டு ஐயா!
{வாய் ஓயாத் திட்டு,சந்தேகக் கண்,
சுதந்திரம் பறிப்பு}இந்த நேரம் கரைந்திருப்பார்
{பெண்.அந்த ஆண் கல்லாய் இருந்திருப்பார்}
இவைஉள்ள
கணவனிடம் எந்த மனைவி ஒட்டியிருப்பார்?
பிரிவுக்கு இதுவும் காரணமாய் இருந்திருக்கலாம்!!
அதுவரை ஆண் தேடிப் போகவில்லை ஏன்?
காரணம்
கர்வம்,திமிர்இதனுடன் ஈகோவும்.....
தோல் சுருங்கிய போதும்.....!!!
இளமையில்..........எப்படி இருந்திருக்கும்?!
தேடி வந்தது பெண்.. {எதுவும் இல்லாமல்}
அங்கேதான் தெரிகிறது தாய்மை{யின்}
பாசம்,தாரம்.
நல்ல கற்பனை நண்பா
ReplyDeleteகோடம்பாக்கம் பக்கம் போயிடாதீங்க
கொத்திட்டு போயிடுவாங்க
வாழ்த்துக்கள்
விஜய்
அண்பு நண்பரே -
ReplyDeleteஉங்கள் படைப்பு அருமை! சரியான காதலர் போலவே!
நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.
அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி
என் வலைப்பூ முகவரி: http://eluthuvathukarthick.wordpress.com/
//மறு நடவு, மகசூல் பெற வாழ்த்துக்கள்//
ReplyDeleteஈசா,
உங்கள் நல்ல உள்ளத்துக்கு நன்றிகள் பல.
//mm.. k..! நல்லா இருக்கு அண்ணே..!//
ReplyDeleteப்ரியா,
இனிமே M K ன்னு சொல்லாத தங்க(ம்)ச்சி. ஏற்கனவே அண்ணனைப் பார்த்து ஆளாளுக்கு "முட்டைக் கண்ணா" 'ன்னு கூப்ட்றாங்க.
(ஒரு சிலர் " Magnet Kannaa" 'ன்னும் கூப்டறாங்க அதையெல்லாம் வெளியில சொன்னோம்னு வெச்சிக்க..என் பாயி தலையணையெல்லாம் வீட்டுக்கு வெளியில விழுந்து கெடக்கும்.)
அதனால, இதெல்லாம் யாரு காதுக்கும் போகாம பாத்துக்கறது தங்கச்சியோட தனி பொறுப்பு.
//..........விட்டுட்டு போன மகராசி, அழகு கவிதைக்கு காரணகர்த்தா.....//
ReplyDeleteமுதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்வும், நன்றிகளும்!
கவிஞன் என்பவன் "சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி" அவ்வளவே.
//அன்பு ஆழமானால் பிரிவு என்பது மறுநடவுதான்.ஆனால் இவ்வளவு அன்பைத் தேக்கி வைத்திருக்கும் ஒருத்தி பிரிந்து போகக் காரணம் என்ன ! கவிதையை ஒத்துக்கொள்ள முடியவில்லை.//
ReplyDeleteஹேமா,
"ஒருத்தி பிரிந்து போகக் காரணம்" இன்றையச் சூழலில் பெரும்பாலும் "Freedom" என்ற சொல்லுக்கான தவறான புரிதலும், "Compromise" என்ற சொல்லை பயன்படுத்த தவறுவதும் முக்கிய காரணங்கள் எனச் சொல்லலாம்.
//ஹேமா சொன்னதை
ReplyDeleteவழிமொழிகின்றேன்....
இருந்தாலும் வரிகள் சிறை வைகின்றது//
நன்றிங்க ஞானம்.
//கவிதை ரொம்ப நல்ல இருக்கு...
ReplyDeleteவரிகளும் கூட...//
நன்றிங்க கமலேஷ்
//புரிதலும்
ReplyDeleteபின்பு
பிரிதலும்
மீண்டும்
பிரிதலில்
புரிதலிலும்
இயல்பானாலும்
இம்சையே
நண்பா
நல்லா இருக்கு மக்கா.///
நவாஸ்,
சரியாச் சொன்னீங்க.
//அதுவரை ஆண் தேடிப் போகவில்லை ஏன்?
ReplyDeleteகாரணம்
கர்வம்,திமிர்இதனுடன் ஈகோவும்.....
தோல் சுருங்கிய போதும்.....!!!
இளமையில்..........எப்படி இருந்திருக்கும்?!//
கலா,
கவிதையாய் பதிவு செய்வது என் கடமை.
பலவிதமாய் புரிந்துக் கொள்வது வாசகர்களின் திறமை.
//நல்ல கற்பனை நண்பா
ReplyDeleteகோடம்பாக்கம் பக்கம் போயிடாதீங்க
கொத்திட்டு போயிடுவாங்க
வாழ்த்துக்கள்..//
விஜய்,
கோடம்பாக்கத்திலும் ஒரு "கூட்டம்" வெச்சிருக்கேன் நண்பா.
//அண்பு நண்பரே -
ReplyDeleteஉங்கள் படைப்பு அருமை! சரியான காதலர் போலவே! //
ஆமா...ஆமா....ஆமா....... இமயவரம்பன்,
ஆகா அருமை
ReplyDeleteஇரு பிரிவுகளிலும்
ReplyDeleteகண்ணீர்..
என்னில் பிறந்து
உன்னை நிறைத்து
வழிய இத்தனை வருடங்களா?
நீ என் கண்ணாகவே
இருந்திருந்தால்
இருக்குமோ!
இறக்குமோ! இந்த பிரிவு..
//ஆகா அருமை..//
ReplyDeleteநன்றி தியா.
//இரு பிரிவுகளிலும்
ReplyDeleteகண்ணீர்..
என்னில் பிறந்து
உன்னை நிறைத்து
வழிய இத்தனை வருடங்களா?
நீ என் கண்ணாகவே
இருந்திருந்தால்
இருக்குமோ!
இறக்குமோ! இந்த பிரிவு..//
ச.சங்கர்,
பின்னூட்டக் கவிதை ரொம்ப நல்லாயிருக்கே!
கவிதை அருமை....
ReplyDelete//கவிதை அருமை....//
ReplyDeleteவசந்தி,
வந்து வாழ்த்துவதோட இல்லாம, சுட்டிக்காட்டி பின்னூட்டம் எழுதனீங்கன்னா இன்னும் மகிழ்ச்சியடைவேன்.
உங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.
அப்ப போட்டோவுல உள்ள சத்ரியன் பொய்யா?
ReplyDeleteரொம்ப வயசாயிடுச்சோ?
கவிதை அருமை நண்பரே.....
//அப்ப போட்டோவுல உள்ள சத்ரியன் பொய்யா?
ReplyDeleteரொம்ப வயசாயிடுச்சோ?
கவிதை அருமை நண்பரே....//
பாலாசி,
இவ்வளவு லேட்டாவா வாரது?
வந்ததும் இல்லாம சந்தேகம் வேற?
சாமி, கவிஞன் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி...!
//இறுக்கம் தளர்த்தி
ReplyDeleteஇதயம் சொல்லியது
"பிரிந்தால் பாவம்-மீண்டும்
இணைந்தால் தீரும்" என்று//
அழகா முடிச்சி இருக்கீங்க..வாழ்வியல் விட்டு கொடுத்தலை வெகு இயல்பாய் சொல்லியிருக்கீங்க...
..ம்ம்.சூப்பர்....ரசிக்கிறேன்..இன்னும்..இன்னும்
ReplyDelete