Jan 8, 2010

நீயே சொல் - 04


நிறைய பேச வேண்டுமென அழைக்கிறாய்
நானும் ஆவலில் காத்திருக்கிறேன்.

சந்திப்பின் சொற்ப நேரத்தையும்
மெளனமாகவே கழித்து விடுகிறாய்.

பேச எண்ணி
சேர்த்தச் சொற்களை
வரும் வழியில்
தவற விட்டு விட்டாயா?


***
இதோ
இப்பொழுது வரை
உன்னிடம்
எனக்கு புரிபடாத ஒன்று,


’வருகிறேன்’ எனச் சொல்லி
’புறப்பட்டு’ போகும்.. புதிர் !

என்னவென்று...
நீயே சொல்.


***





எ(பொ)ன் மகள்

39 comments:

  1. அருமை மாம்ஸ் ...

    -----------

    இதோ
    இப்பொழுது வரை
    உன்னிடம்
    எனக்கு புரிபடாத ஒன்று,


    ’வருகிறேன்’ எனச் சொல்லி
    ’புறப்பட்டு’ போகும்.. புதிர் !

    ---------------

    இத்தோடு முடித்திருக்கனும் போல் தோனுது - அல்லது இந்த பத்தி இல்லாட்டி அடுத்த பத்தி அருமையான முடிவு

    ஏனோ ஒட்டவில்லைப்பா - நமக்கு அம்பூட்டு தெரியாது ...

    ReplyDelete
  2. //அருமை மாம்ஸ் ...

    -----------

    ’வருகிறேன்’ எனச் சொல்லி
    ’புறப்பட்டு’ போகும்.. புதிர் !

    ---------------

    இத்தோடு முடித்திருக்கனும் போல் தோனுது - அல்லது இந்த பத்தி இல்லாட்டி அடுத்த பத்தி அருமையான முடிவு...//

    ஜமால் மாப்ள,

    சரி செய்தாகி விட்டது.


    //நமக்கு அம்பூட்டு தெரியாது ...//

    சின்ன வயசிலேயே எனக்கு காது குத்திட்டாங்களே மாப்ஸ். என்ன செய்யலாம்...?

    நீயே சொல்.

    ReplyDelete
  3. //’வருகிறேன்’ எனச் சொல்லி
    ’புறப்பட்டு’ போகும்.. புதிர் !//

    வீட்டுக்கு வருகிறேன் என்று சூசகமாக சொல்லி புறப்பட்டிருக்கலாம். (கண்டுபிடிப்பு??!!!)

    //பேச எண்ணி
    சேர்த்தச் சொற்களை
    வரும் வழியில்
    தவற விட்டு விட்டாயா?//

    நம்மளோட அழகுல மயங்கிடறதால அவிங்களுக்கு எல்லாமே மறந்துடும்போல.

    கவிதை அருமைங்க...

    அடிக்கடி யாரையோ (??) சந்திக்கபோயிடுறீங்கன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. //’வருகிறேன்’ எனச் சொல்லி
    ’புறப்பட்டு’ போகும்.. புதிர் !//

    வீட்டுக்கு வருகிறேன் என்று சூசகமாக சொல்லி புறப்பட்டிருக்கலாம். (கண்டுபிடிப்பு??!!!)//

    ஆஹா,

    இந்த விசயம் நம்ம மூளைக்கு எட்டாம போச்சே...!

    //பேச எண்ணி
    சேர்த்தச் சொற்களை
    வரும் வழியில்
    தவற விட்டு விட்டாயா?//

    நம்மளோட அழகுல மயங்கிடறதால அவிங்களுக்கு எல்லாமே மறந்துடும்போல.//

    அப்பிடித்தான் இருக்குமோ?

    //கவிதை அருமைங்க...//

    நன்றி பாலாசி.

    //அடிக்கடி யாரையோ (??) சந்திக்கபோயிடுறீங்கன்னு நினைக்கிறேன்.//

    அப்பிடியெல்லாம் நினைக்கப்பிடாது. நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்னு எல்லாரும் நம்பிக்கிருக்காய்ங்க.

    (என்ன பண்றது சாமி. என் தொழில் அப்பிடி)

    ReplyDelete
  5. கவிதை கலக்கல....

    //வருகிறேன்’ எனச் சொல்லி
    ’புறப்பட்டு’ போகும்.. புதிர் !//

    உன் கூடவே வருகிறேன் என்று சொல்லி புறப்படுகிறாள்..

    நாம் நாளை வருகிறேன் என்று கூறுகிறாள் என நினைத்து சரி என்று கூறிவிடுகிறோம்
    (இது என் கண்டுபிடிப்பு)

    ReplyDelete
  6. //கவிதை கலக்கல்....

    //வருகிறேன்’ எனச் சொல்லி
    ’புறப்பட்டு’ போகும்.. புதிர் !//

    உன் கூடவே வருகிறேன் என்று சொல்லி புறப்படுகிறாள்..

    நாம் நாளை வருகிறேன் என்று கூறுகிறாள் என நினைத்து சரி என்று கூறிவிடுகிறோம்
    (இது என் கண்டுபிடிப்பு)//

    சங்கமேஷ்,
    எப்படியோ ஒரு வழியா பலரையும் ஆராய்ச்சியாளனா மாத்திட்டேன். ..ம்ம்ம்ம்!


    (என்ன சாமி அப்பப்போ பேரு மாறுது?) உங்க வலையில இடுகை வேற தினுசா தெரியுது?)

    ReplyDelete
  7. //அருமை//

    வாங்க உழவரே,

    முதலில் பொங்கல் வாழ்த்துகள்.

    தங்கலின் வருகைக்கும், கருத்திற்கும் இனி எப்பவும் காத்திருப்பேன்.

    ReplyDelete
  8. உங்கள் விழியின் மொழியை படிப்பதால் சொல்ல வந்ததை சொல்ல மறந்திருக்கலாம்...

    வருகிறேன் என்றால் மீண்டும் வருகிறேன் என்ற பொருளோ?

    ReplyDelete
  9. //உங்கள் விழியின் மொழியை படிப்பதால் சொல்ல வந்ததை சொல்ல மறந்திருக்கலாம்...//

    தமிழரசி,

    நம்புற மாதிரியா இருக்கு...?

    //வருகிறேன் என்றால் மீண்டும் வருகிறேன் என்ற பொருளோ?//

    அப்படியும் ஒரு பொருளிருக்குமோ?

    ReplyDelete
  10. //சொற்ப நேரத்தையும்
    மெளனமாகவே கழித்து விடுகிறாய்//

    கண்ணோடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்சொற்கள்
    என்ன பயனும் இல

    நம்ம வள்ளுவர் சொன்னது.

    பார்த்தாலே போதும் சாமி, பேசவும் வேணுமா?

    ReplyDelete
  11. ஹலோ மாம்ஸ்
    இன்னமும் காதலை உருக்கி ஓடவிடுங்க
    அள்ளி பருக காத்துகிடக்கேன்
    இது மென்மையான உணர்வா இருக்கு
    மயிலிறகு வருடுனாப்போல
    எனக்கு இன்னமும் அதிகமான ஆதீதமா காதல் உணர்ச்சி வேணும்
    ஐஸ் தண்ணிய சட்டுன்னு முகத்துல பீச்சி அடிக்குற மாதிரி
    என்ன பண்ணுவீங்களோ தெரியாது எழுதுங்க
    சினிமாத்தமா இருந்தாலும் பரவாஇல்லை அதீதமா சொல்லுங்க காதலை
    படிக்கிறவங்க உருகணும் அப்புடி வேணும்
    .
    கு.கு
    இங்க(ஆபீஸ்) face book ஓபன்
    ஆகாது மாம்ஸ்

    ReplyDelete
  12. இப்பதான் புரியுது.நன்றி பாலா. என்னப்பத்திதான் உங்களுக்கு தெரியுமே, கொஞ்சம் விளக்கினாத்தான் புரியும்.இது காதல் கவிதை அப்பிடின்னு நெனச்சேன்.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    //சொற்ப நேரத்தையும்
    மெளனமாகவே கழித்து விடுகிறாய்.//

    மயில் பார்க்க அழகு, ஆடினாலும் கூட அழகுதான். பாடினால்....

    //’வருகிறேன்’ எனச் சொல்லி
    ’புறப்பட்டு’ போகும்.. புதிர் !//

    நம்ம மூஞ்சியப் பார்த்துப்புட்டுப் போய்,அந்தப் புள்ள எப்பிடி இருக்கும்.பேயப்பார்த்துட்டு பயந்து போய் எதாச்சும் ஆயிடுச்சுன்னா.... இதல்லாம் நடக்காது அப்பின்னு ஒரு நம்பிக்கை. இந்த மூஞ்சிய பார்த்தாலும் பயங்கிடயாதுன்னு ஒரு துணிவு.

    ஆக பெண்கள் ஆச காட்டின மாதிரி ரெண்டு வரி,அவங்களக் கலாய்ச்சு ரெண்டு வரி அப்பறம் அவங்க திறமையைப்(நம்பிக்கை,துணிவு) பாராட்டி ரெண்டு வரி.

    அது சரி. நான் கூட காதல் கவிதையோன்னு நினச்சேன்.

    கலக்கிறீங்களே எப்பிடி இப்பிடி????

    ReplyDelete
  13. சத்ரியன் நாம சி,சி++,ஜாவா,லினக்ஸ் இது மாதிரி நிறைய லாங்குவேஜ் கத்துக்கிடலாம் ஆனா இந்த பொண்ணுங்க லாங்குவேஜ் ம்ஹ்ஹும் அவங்க ஒண்ணு சொல்லுவாங்க நாம ஒண்ணு சொல்லுவோம் பிறகு தப்பா சொல்லிப்புட்டொம்ன்னு குமட்டுல ஒரு குத்து விடுவாங்க பாருங்க அப்போ தோணும் இங்கிலிபீஸ் கத்துக்கிட ரெபிடெக்ஸ் இருக்கோ அதுபோல பொண்ணுங்க மொழி புரிய ஒரு அகராதியிருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்ன்னு...

    ஷாஜகான் படம் பாத்திருக்கீங்களா சரிவேணாம் அதுல மேமாத மேகம் அப்படின்னு ஒரு பாட்டு இருக்கு அந்த பாட்டுல "போ போ, போ என்று சொல்லுக்கு வா வா வா என்று அர்த்தமே" அப்பிடின்னு ஒரு அர்த்தம் வரும் அது தான் பொண்ணுங்க லாங்குவேஜ்....

    ’வருகிறேன்’ எனச் சொல்லி
    ’புறப்பட்டு’ போகும்.. புதிர் !

    அப்போ இந்த வரிக்கான அர்த்தம் புரிந்திருக்குமே....

    ReplyDelete
  14. ’வருகிறேன்’ எனச் சொல்லி
    ’புறப்பட்டு’ போகும்.. புதிர் !//

    புரிந்தவர்களிடமும்

    புரியாமல்போகும்

    புதிர்தான்

    பெண்மை..

    ReplyDelete
  15. பேசினா மிஞ்சுவீங்க
    பேசாட்டிக் கெஞ்சுவீங்க
    இந்த ஆம்பிளைங்களுக்கு
    இதுவே விளையாட்டாப் போச்சுப்பா !

    ReplyDelete
  16. //கண்ணோடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்சொற்கள்
    என்ன பயனும் இல

    நம்ம வள்ளுவர் சொன்னது.//

    நம்ம தாத்தா சொல்லாம விட்ட செய்தி எதுவும் இல்லைதான்.

    நம்ம மாப்பிள்ளைகளுக்கு (பாலா....,) தெரியிற மாதிரி இருக்கட்டுமேன்னு தான்....!

    //பார்த்தாலே போதும் சாமி, பேசவும் வேணுமா?//

    சும்மா இருங்க சாமி. அப்ப அப்பிடி நெனைச்சி இருந்து தான் ....இப்ப நான் எதுவும் பேசமுடியாம... இதுக்குமேல வெளியில சொன்னா மச்சான் -ன்ற முறையில மொறைப்பீங்க.

    ReplyDelete
  17. //எனக்கு இன்னமும் அதிகமான ஆதீதமா காதல் உணர்ச்சி வேணும்
    ஐஸ் தண்ணிய சட்டுன்னு முகத்துல பீச்சி அடிக்குற மாதிரி///

    உங்க மன நிலை புரியுது மாப்ள.
    முயற்சிக்கிறேன்.

    //என்ன பண்ணுவீங்களோ தெரியாது எழுதுங்க//

    வேணும்னா லவ் பண்ணிப் பாத்து எழுதவா?

    ReplyDelete
  18. //இப்பதான் புரியுது.நன்றி பாலா.

    நம்ம மூஞ்சியப் பார்த்துப்புட்டுப் போய்,அந்தப் புள்ள எப்பிடி இருக்கும்.பேயப்பார்த்துட்டு பயந்து போய் எதாச்சும் ஆயிடுச்சுன்னா.... இதல்லாம் நடக்காது அப்பின்னு ஒரு நம்பிக்கை. இந்த மூஞ்சிய பார்த்தாலும் பயங்கிடயாதுன்னு ஒரு துணிவு.

    ஆக பெண்கள் ஆச காட்டின மாதிரி ரெண்டு வரி,அவங்களக் கலாய்ச்சு ரெண்டு வரி அப்பறம் அவங்க திறமையைப்(நம்பிக்கை,துணிவு) பாராட்டி ரெண்டு வரி.

    அது சரி. நான் கூட காதல் கவிதையோன்னு நினச்சேன்.

    கலக்கிறீங்களே எப்பிடி இப்பிடி????//

    அரங்கபெருமாள்,

    ஏன் இந்தக் குத்தாட்டம் சாமி?

    ReplyDelete
  19. //நாம சி,சி++,ஜாவா,லினக்ஸ் இது மாதிரி நிறைய லாங்குவேஜ் கத்துக்கிடலாம் ஆனா இந்த பொண்ணுங்க லாங்குவேஜ் ம்ஹ்ஹும் அவங்க ஒண்ணு சொல்லுவாங்க நாம ஒண்ணு சொல்லுவோம் பிறகு தப்பா சொல்லிப்புட்டொம்ன்னு குமட்டுல ஒரு குத்து விடுவாங்க பாருங்க அப்போ தோணும் இங்கிலிபீஸ் கத்துக்கிட ரெபிடெக்ஸ் இருக்கோ அதுபோல பொண்ணுங்க மொழி புரிய ஒரு அகராதியிருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்ன்னு...//

    வசந்த்,

    பொண்ணுங்க மொழி புரிய ஒரு அகராதி நீங்களே அந்த புண்ணிய காரியத்த செய்யலாமே...!


    //ஷாஜகான் படம் பாத்திருக்கீங்களா சரிவேணாம் அதுல மேமாத மேகம் அப்படின்னு ஒரு பாட்டு இருக்கு அந்த பாட்டுல "போ போ, போ என்று சொல்லுக்கு வா வா வா என்று அர்த்தமே" அப்பிடின்னு ஒரு அர்த்தம் வரும் அது தான் பொண்ணுங்க லாங்குவேஜ்....

    ’வருகிறேன்’ எனச் சொல்லி
    ’புறப்பட்டு’ போகும்.. புதிர் !

    அப்போ இந்த வரிக்கான அர்த்தம் புரிந்திருக்குமே....//

    ரொம்ப சினிமா பாக்குறீங்க.

    ReplyDelete
  20. //புரிந்தவர்களிடமும்

    புரியாமல்போகும்

    புதிர்தான்

    பெண்மை..//

    சந்தன சங்கர்,

    ஒன்னுமே புரியல உலகத்துல....

    ReplyDelete
  21. //பேசினா மிஞ்சுவீங்க
    பேசாட்டிக் கெஞ்சுவீங்க
    இந்த ஆம்பிளைங்களுக்கு
    இதுவே விளையாட்டாப் போச்சுப்பா !//

    ஹேமா,

    ஊடல் என்பது காதலின் கெளரவம்.

    இந்த விளையாட்டு கூட இல்லாட்டி என்ன காதல்?

    ReplyDelete
  22. அன்பின் சத்ரியன்

    சொற்கள் தவற விடப்படனவா - இல்லை வந்தவுடன் களவாடப்பட்டதா

    வருகிறேன் எனப் புறப்படுவது உண்மையிலேயே புரியாத புதிர்தான் - காதலர்களுக்கு

    நல்வாழ்த்துகள் சத்ரியன்

    ReplyDelete
  23. ///நிறைய பேச வேண்டுமென அழைக்கிறாய்
    நானும் ஆவலில் காத்திருக்கிறேன்.

    சந்திப்பின் சொற்ப நேரத்தையும்
    மெளனமாகவே கழித்து விடுகிறாய்.///

    ஆகா. ஆகா. இருவருக்குமிடையில் வெக்கமில்லாமல் வந்தமரும் வெட்கம் தான் காரணம் மாம்ஸ்.

    ReplyDelete
  24. ///எனக்கு புரிபடாத ஒன்று,


    ’வருகிறேன்’ எனச் சொல்லி
    ’புறப்பட்டு’ போகும்.. புதிர் !///

    வந்தபின்னும் ”வந்துட்டீங்களா!”ன்னு கேக்குறமாதிரிதான்.

    நீ கலக்கு மாமு.

    ReplyDelete
  25. உலக மக்களே!!
    எப்பவாவது புரிகிறதா? சத்ரியன்
    அடிக்கடி காணாமல் போவதேனென்று
    அதுதாங்கப்பா...பூங்காவும்,கடற்கரைகளும்
    என்று வரச்சொல்லிக் காத்திருப்பது!!

    அதில் வந்த கோபத்தின் வெளிப்பாடுதான்
    இந்தவரிகள். ம்மம நன்றாகத்தான்
    இருக்கிறது.நடக்கட்டும்

    வசந்தின் அனுபவம் ரொம்ப.....ரொம்பவோ
    மனசு நொந்து போயிற்றார் பார்த்துப் பார்த்து
    பழகுங்கோ!1

    ஹேமாதான் சரியாகப் புரிந்திருக்கிறார்
    நன்றியடி தோழி {தைரியத்துக்கு}

    ReplyDelete
  26. அன்பின் சத்ரியன்

    சொற்கள் தவற விடப்படனவா - இல்லை வந்தவுடன் களவாடப்பட்டதா //

    அண்ணா(சீனா),

    நான் நல்லவன் எனக்கேன் அந்த திருட்டு புத்தி...


    //வருகிறேன் எனப் புறப்படுவது உண்மையிலேயே புரியாத புதிர்தான் - காதலர்களுக்கு..//

    எல்லார் காதல்லயும் இப்பிடித்தான் நடக்குதா?

    //நல்வாழ்த்துகள் சத்ரியன் //

    நன்றி.

    உங்களுக்கும் “பொங்கல் வாழ்த்துகள்”

    ReplyDelete
  27. //ஆகா. ஆகா. இருவருக்குமிடையில் வெக்கமில்லாமல் வந்தமரும் வெட்கம் தான் காரணம் மாம்ஸ்.//

    மாப்ள,

    காரணத்தை எப்பிடி கண்டுபிடிச்சீங்க...?

    (வெக்கமில்லாம வந்தமருதாம்ல....!)

    ReplyDelete
  28. //வந்தபின்னும் ”வந்துட்டீங்களா!”ன்னு கேக்குறமாதிரிதான்.

    நீ கலக்கு மாமு.//

    நவாஸூ,

    இதை கொஞ்ச வருஷம் கழிச்சி எழுதலாம்னு நெனைச்சிருந்தேன்.
    ..ம்ம்ம்ம்ம்ம்...!

    ReplyDelete
  29. //உலக மக்களே!!
    எப்பவாவது புரிகிறதா? சத்ரியன்
    அடிக்கடி காணாமல் போவதேனென்று
    அதுதாங்கப்பா...பூங்காவும்,கடற்கரைகளும் என்று வரச்சொல்லிக் காத்திருப்பது!! //

    கலா,

    கலாய்க்கிறதுன்னு புறப்பட்டாச்சு.... ம்ம்ம். ..! நடத்துங்க.

    (இப்ப என்னைய உலக அளவுல தெரிஞ்சி வெச்சிருக்காகளா?...அப்ப சரிதேன்..)

    ReplyDelete
  30. //ஹேமாதான் சரியாகப் புரிந்திருக்கிறார்
    நன்றியடி தோழி {தைரியத்துக்கு}//

    வெவ்வெவ்வெவ்.....வே.

    ReplyDelete
  31. /சந்திப்பின் சொற்ப நேரத்தையும்
    மெளனமாகவே கழித்து விடுகிறாய்.//

    விழிகளினால் பேசிய மொழி உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன்.
    இது எப்பிடி இருக்கிறது ?

    ReplyDelete
  32. //விழிகளினால் பேசிய மொழி உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன்.
    இது எப்பிடி இருக்கிறது ?//

    ஜெஸ்ஸி,

    இந்த பச்சபுள்ளைக்கு புரிய இன்னும் அனுபவம் தேவையா இருக்குமோ?

    ReplyDelete
  33. காதலியின் ஒவ்வொரு வார்த்தையிலும் கவிதை என்று மயங்கி இருக்கிறான். நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  34. நல்லா இருக்கு நண்பா

    (போகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருந்தால் சரி)

    விஜய்

    ReplyDelete
  35. அருமையாக இருக்கிறது :-)

    ReplyDelete
  36. காதல் நிறைந்த கவிதைக்கு பாராட்டுக்கள்..... குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. வருகிறேன் என்று கூறி புறப்பட்டு போகும் வித்தை மிக நன்றாக இருக்கிறது சத்திரியன்....அருமையான சிந்தனை ,
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  38. ’வருகிறேன்’ எனச் சொல்லி
    ’புறப்பட்டு’ போகும்.. புதிர் !

    என்னவென்று...
    நீயே சொல்.


    / போகிறேன் என்று சொன்னால்

    பதறிபோவீர்கள் ( சந்தோசபடுவீர்கள் !!!!!!!!!! ) என்று

    வருகிறேன் என்று சொல்லுகிறார்கள் ( வேதனைபடுவீர்கள் என்ற நம்பிக்கையில் )


    ஹ ஹ தவறாக நினைக்க வேண்டாம் தோன்றியதை சொன்னேன்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.