Jan 20, 2010

என்னையும் ஒருவர்.....ஓர் உண்மைச் சம்பவத்தையொட்டி அருமை அண்ணன் ”புதுமைத் தேனீ” திரு மா.அன்பழகன் அவர்களின் விருப்பத்திற்காக நான் எழுதிய ஒரு குறுங்கவிதையை,

எனதருமை நண்பரும்
கவிஞருமான அகரம் அமுதா அவர்கள்
வெண்பாவாக்கிய வித்தைய அவரது வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறார்.அகரம் அமுதா அவர்களின் அந்தப் பதிவிலிருந்து ஒரு பகுதி கீழே....

பாலை, கலத்தில் ஊற்றிவைத்தாலும், பானையில் ஊற்றிவைத்தாலும், கோப்பையில் ஊற்றி வைத்தாலும், தேங்கிநிற்கப் பயன்படும் பொருட்கேற்ப வடிவம் மாறுபடுமே அல்லால் தன்மையால் மாறுபடாதல்லவா? அஃதேபோல் மூலம் சிதையாமல் வடிவமாற்றம் செய்தலே மூலத்தைக் காயப்படுத்தாமலும், மூலப்படைப்பாளனைக் காயப்படுத்தாமலும் இருக்க, சிறந்த வழிமுறையாகும்.

இச்சட்டத்திற்கு உட்பட்டு ஓர் குறுங்கவிதையை வடிவமாற்றம் செய்துள்ளேன்.
கவிதையின் கருப்பொருள் இதுவே:- (நாளேட்டில் வந்த செய்தி) ஓர்திருடன் ஓர் வீட்டுள் புகுந்து பொன்பொருளைக் கொள்ளையடிக்கிறான். திருடன் திருடிய வேளையின் திருடனின் மகன் இறந்துவிடுகிறான். தான் திருடிய கரணியத்தால் ஆண்டவன், தன் மகனின் இறப்பின் மூலமாகத் தன்னை ஒறுத்துவிட்டதாக (தண்டித்துவிட்டதாக) எண்ணிக்கொண்டு, இனி அக்குற்றச்செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாது, திருடிய பொருளை மூட்டையாகக் கட்டி, கூடவே ஓர் மடலையும் எழுதி (மேலுள்ள செய்தியை) காவல் நிலையத்தின் அருகில் போட்டு விட்டுச் சென்றுவிடுகிறான். இக்கருத்தை உள்ளடக்கியதாகப் பேசுகிறது கீழ்காணும் ஹைக்கூ:-

கொள்ளை மனதை
வெள்ளை மனதாக்கியது
பிள்ளை மரணம்!

மேலுள்ள குறுங்கவிதையின் படைப்பாளர் எனதருமை நண்பர் மனவிழி சத்ரியன் வார்.

இவ் ஹைக்கூ உணர்த்தவரும் கருத்தை, எச்சொற்களைக் கொண்டு உணர்த்தி நிற்கிறதோ?! அச்சொற்களின் துணைகொண்டே வெண்பா என்கிற வடிவத்திற்குள் நுழைத்துக் காட்ட முடியுமா? என்கிற வேட்கையோடு உரைக்கப் புகுந்தேன். அது இப்படி உருப்பெற்றது.

பிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்
கொள்ளைக் குணங்கொண்ட வன்!


கவிதைக்குறிய எக்கருப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும். அது அவ்வடிவத்தைக் கையாளுபவனின் ஆற்றலைப் பொருத்தது. மேலுள்ள இரு குறுங்கவிதைகளையும், ஏறக்குறைய அவ்வக் கவிஞர்களின் சொற்களைக் கொண்டே மரபுக்குள் புகுத்த முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றானா என்பது தெரியாது. முயன்றிருக்கிறேன் அவ்வளவே!

இவ்வலையில் வெண்பாப் பயிலும் நண்பர்களே! நான் வழங்கும் குறுங்கவிதையை வெண்பாவாக்க முடியவில்லை என நினைக்கத்தால் தங்களால் வெண்பா வாக்க முடியும் எனக் கருதுகிற குறுங்கவிதையில் ஒன்றை எடுத்துக்கொண்டு வடிவ மாற்றம் செய்துபார்க்கவும். ஓர் குறுங்கவிதையை அளவடி வெண்பாவாக்குகிற போது, நிறைய சொற்களை இட்டு நிறப்ப வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆதலால் குறள்வெண்பாவாகவோ, சிந்தியல் வெண்பாவாகவோ வழங்கமுற்படுவது சாலச் சிறந்தது.

வெண்பா கற்க விரும்பும் நண்பர்கள்
இங்கே சுட்டவும்.


நன்றி: கவிஞர் அகரம் அமுதா.

21 comments:

 1. கவிதைக்குறிய எக்கருப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும்]]

  நிறைய தன்னம்பிக்கை கொடுக்கின்றார்

  நானெல்லாம் எழுத துவங்கிடலாம் போலிருக்கு.

  பாவம் மக்கா

  --------------------

  உங்களுடைய கவிதைகளில் மிகவும் இரசித்த ஒன்று அது சத்ரியன் - அந்த பகுதிக்கும் சுட்டி குடுத்திடுங்களேன்.

  ReplyDelete
 2. ரொம்ப சந்தோசமா இருக்கு கண்ணா. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. //கொள்ளை மனதை
  வெள்ளை மனதாக்கியது
  பிள்ளை மரணம்!//

  நல்லாயிருக்கு தோழரே.... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. பொங்கல் வாழ்த்துக்கள் சத்ரியன்.சுகம்தானே.

  நல்ல முயற்சி.
  மூளைதான் வேணும்.

  ReplyDelete
 5. //தேங்கிநிற்கப் பயன்படும் பொருட்கேற்ப வடிவம் மாறுபடுமே அல்லால் தன்மையால் மாறுபடாதல்லவா? //

  சரியான வாக்கியம்...

  அப்டின்னா நம்மளாலையும் முடியும்ங்றார்.

  ReplyDelete
 6. //பிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்
  கொள்ளைக் குணங்கொண்ட வன்!//

  நல்ல இருக்கு சத்ரியன்
  வெண்பா எழுத ஊக்குவித்தமைக்கு நன்றி

  ReplyDelete
 7. உங்கள் ஹைக்கூ மற்றும் வெண்பாவாக மாற்றிய விதம் இரண்டும் அருமை.

  நம்மளால முடியலயே நினைச்சேன், ஹேமா அதற்கான காரணத்தை சொல்லியிருங்காங்க. (எப்பிடித்தான் கண்டுபுடிப்பாங்களோ!!)

  ReplyDelete
 8. வெண்பால இறங்கிட்டீங்களா...மிகவும் நன்றாக செய்து இருக்ரீர்கள்...வெண்பாவை பற்றி அறிமுகம் கொடுத்ததிற்கு நன்றி...தொடருங்கள்..

  ReplyDelete
 9. கொள்ளையால் அணைந்த பிள்ளை வெள்ளையாய்
  மீட்டியது கயவ னவனை!


  வெள்ளையாய் மீட்டியது கயவ னவனை
  கொள்ளையால் அணைந்த பிள்ளை!


  நண் பா என்னால் முடிந்தது
  தப் பா சரியா தெரியவில்லை..

  ReplyDelete
 10. //கவிதைக்குறிய எக்கருப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும்]]

  நிறைய தன்னம்பிக்கை கொடுக்கின்றார்

  நானெல்லாம் எழுத துவங்கிடலாம் போலிருக்கு.

  பாவம் மக்கா//

  --------------------

  ஆரம்பிச்சிடுங்க ஜமால்.

  ReplyDelete
 11. // ரொம்ப சந்தோசமா இருக்கு கண்ணா. வாழ்த்துக்கள்.//

  வாங்க நவாஸ்,

  வாழ்த்திற்கு நன்றி மக்கா.

  ReplyDelete
 12. //கொள்ளை மனதை
  வெள்ளை மனதாக்கியது
  பிள்ளை மரணம்!//

  நல்லாயிருக்கு தோழரே.... வாழ்த்துக்கள்...


  நன்றிங்க சங்கவி.

  ReplyDelete
 13. // பொங்கல் வாழ்த்துக்கள் சத்ரியன்.சுகம்தானே.

  நல்ல முயற்சி.
  மூளைதான் வேணும்.//

  ஹேமா,
  உங்களுக்கும் வாழ்த்துகள்.
  பூரண சுகமாயிருக்கிறேன்.

  உங்க ஊருல “கசாப்பு கடையில” கிடைக்காதா? (மூளை)

  ReplyDelete
 14. //தேங்கிநிற்கப் பயன்படும் பொருட்கேற்ப வடிவம் மாறுபடுமே அல்லால் தன்மையால் மாறுபடாதல்லவா? //

  சரியான வாக்கியம்...

  அப்டின்னா நம்மளாலையும் முடியும்ங்றார்.

  பாலாசி,

  ஆரம்பிங்கன்னு அடிச்சி சொல்கிறார் நண்பர் அகரம் அமுதா.

  ReplyDelete
 15. //பிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்
  கொள்ளைக் குணங்கொண்ட வன்!//

  நல்ல இருக்கு சத்ரியன்

  வெண்பா எழுத ஊக்குவித்தமைக்கு நன்றி //

  நன்றிக்குரியவர் நண்பர் அகரம் அமுதா.

  ReplyDelete
 16. உங்கள் ஹைக்கூ மற்றும் வெண்பாவாக மாற்றிய விதம் இரண்டும் அருமை.

  நம்மளால முடியலயே நினைச்சேன்,

  ஹேமா அதற்கான காரணத்தை சொல்லியிருங்காங்க. (எப்பிடித்தான் கண்டுபுடிப்பாங்களோ!!)

  அரங்க பெருமாள்,

  “மூளை” இருக்கு கண்டு பிடிக்கிறாங்க.( ஹேமா)

  ReplyDelete
 17. வெண்பால இறங்கிட்டீங்களா...மிகவும் நன்றாக செய்து இருக்ரீர்கள்...வெண்பாவை பற்றி அறிமுகம் கொடுத்ததிற்கு நன்றி...தொடருங்கள்..

  கமலேஷ்,

  நமக்கு வெண்பா-ன்னா இன்பம் தான். ஆனா வசப்பட மாட்டேங்குது.

  அந்த வெண்பா விற்கு சொந்தக்காரர் நண்பர் அகரம் அமுதா. அவரின் வலைக்குச் சென்று பாருங்கள்.

  ReplyDelete
 18. // கொள்ளையால் அணைந்த பிள்ளை வெள்ளையாய்
  மீட்டியது கயவ னவனை!


  வெள்ளையாய் மீட்டியது கயவ னவனை
  கொள்ளையால் அணைந்த பிள்ளை!


  நண் பா என்னால் முடிந்தது
  தப் பா சரியா தெரியவில்லை..//

  சந்தான சங்கர்,

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ...ப்ப் பா.

  நடத்துங்கப் பா .

  ReplyDelete
 19. வெண்பா நன்று நண்பா

  விஜய்

  ReplyDelete
 20. தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

  ReplyDelete
 21. //கொள்ளை மனதை
  வெள்ளை மனதாக்கியது
  பிள்ளை மரணம்!//

  இடுகை மிகநன்று வாழ்த்துக்கள்  நேரம்கிடைக்கும்போது இதையும் பாருங்கள்..

  http://niroodai.blogspot.com

  http://fmalikka.blogspot.com

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.