Jun 8, 2010

ஆண்மை இழந்த இறையாண்மை







ஒரு கொலைக்கு தண்டனையாய்
ஒரு இனத்தையே படுகொலை செய்ய
துணை போன இந்தியாவில்
இன்றொரு ( 07/06/10)
விசித்திரம் நிகழ்ந்தது.

பதினைந்தாயிரம் உயிரைக் கொன்று
பல்லாயிரத்தோர் உறுப்புகளைத் தின்று
கால் நூற்றாண்டு காலந்தாழ்த்தி
காசு பணங்கொண்டு காய்களை நகர்த்தி

போபால் வழக்கில்
கொலைக்காரர்களுக்கு
குறைந்தபட்ச தண்டணையாய்
ஈராண்டு சிறை விதிக்கிறேன் - என
தீர்ப்பொன்றைத் துப்பியது பணம்.
நீதிதேவதை முகத்தில்!

ஆண்மை சோதனைக்கு
உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில்
இந்தியாவின் இறையாண்மை!



*************************************






இணைப்புப் படங்கள் போபால் விஷவாயுவினால் நிகழ்ந்த கொடூரக்காட்சிகள்.







19 comments:

  1. நல்ல கருத்து, கோபம்...

    “பணம்
    தீர்ப்பொன்றைத் துப்பியது
    நீதிதேவதை முகத்தில்!”-

    என்னால் நீதி “தேவதை” என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. அவளை வேண்டுமானாள் தேவடியாள் என்று சொல்வேன்.
    ஏனெறால் பணம் இருக்கும் பக்கம் சாஇவதால்..
    ..............

    ReplyDelete
  2. சாட்டையடி நண்பா!

    பிரபாகர்...

    ReplyDelete
  3. மிகக்கொடுமையான விஷயம்

    ReplyDelete
  4. இரண்டு ஆண்டுகள் தண்டனை கொடுக்கும் அளவிற்கேணும் நீதிமான்களின் மனசாட்சி உருத்தியிருக்கிறதே அந்த அளவில் திருப்ப்தி கொ(ல்)ள்ளவேண்டியதுதான்.!

    ReplyDelete
  5. கண்ணே இல்லாத “நீதி” தேவதையிடம்

    எது நடந்தாலும் தெரியவா போகிறது?
    சில...பணத்தாசைகள் பிடித்தவர்கு
    எழுத்துச் சாட்டையல்ல...
    அவர்கள்
    சேட்டையால் உயிர் போனாலும்
    சேதம் நமக்குத்தான்!!
    ஆதங்க,ஆவேச வீரத்துடன் வெளிவந்த
    புரிந்துணர்வு அருமை நன்றி

    ReplyDelete
  6. இங்கே பணமும் அரசியலும் கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்துதுங்கோ.கண்டுக்காதீங்கோ !

    ReplyDelete
  7. தீர்ப்பெனும் பெயரில் நடந்த அநீதியை உக்கிரமாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

    வணங்குகிறேன் நண்பரே.

    ReplyDelete
  8. அன்றைக்கு Union carbide நிறுவன அதிபர் ஆண்டர்சன் இப்பொழுது ஜாலியாக ஒரு தீவில் பொழுதை போக்கி வருவதாக தகவல்.

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை நண்பா

    விஜய்

    ReplyDelete
  9. /*
    பதினைந்தாயிரம் உயிரைக் கொன்று
    பல்லாயிரத்தோர் உறுப்புகளைத் தின்று
    கால் நூற்றாண்டு காலந்தாழ்த்தி
    காசு பணங்கொண்டு காய்களை நகர்த்தி
    */


    ரொம்ப நல்லா இருக்குங்க

    ReplyDelete
  10. ஆண்மை சோதனைக்கு
    உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில்
    இந்தியாவின் இறையாண்மை!

    உண்மையிலும் உண்மை :((

    ReplyDelete
  11. இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது கூட உறுதியாக இல்லை குற்றவாளிகள் ஜமீனில் வரமுடியும் என்ற அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே தண்டனைக்குள்ளான ரியல் இன்டியன்ஸ் விரைவில் வெளியில் வருவார்கள் என்பது சந்தோசமான செய்தி அதனால் யாரும் அதிகம் வேதனைப்படவேண்டாம்.

    ReplyDelete
  12. கவலை தரும் செய்தி அண்ணா...

    ReplyDelete
  13. வலி நிறை பகிர்வு.

    (ஆன்ம இழந்த இறையாண்மை என எடுக்கிறேன்)

    ReplyDelete
  14. ஒருவனின் மரணத்திற்க்காக ஒரு இனத்தையே அழிக்க துணை போன ஒரு அயல்நாட்டுக்காரியின் ஆட்சியின் கீழ் இருக்கும் நீங்கள் எதை எதிர் பார்க்கிறீர்கள்!!

    ReplyDelete
  15. ந‌ம‌து நீதிக‌ள் இதுதான் ... வெட்க‌ கேடு..

    ReplyDelete
  16. ரெளத்திரம்...

    இது போல காலம் தாழ்த்தப்படும் பல அவசர வழக்குகள் இன்னும் உள்ளன.

    ReplyDelete
  17. கண்ட கண்ட இழவுகளையெல்லாம் கவிதையென கிறுக்கிவிட்டெழும் கிறுக்கனுக்கு மத்தியில்.. விழுந்த இழவுகளை கவிதையாய் பொறித்திட்ட உம் பதிவுக்கும், சமூக அக்கரைக்கொண்ட உம் எழுச்சி மிகு வார்த்தைக்கும் நன்றி நண்பா!

    எண்ணத் தோன்றுகிறது..
    ஆம்
    எண்ணத்தான் தோன்றுகிறது,
    முகவரியில்லாத சில
    முதுகெலும்பற்றவர்களுக்கு
    முட்டுக் கொம்பாய்தானோ
    எம் பாரதமென்று!

    ReplyDelete
  18. சொந்தக் குடிமக்களின் மரணத்தையே அலட்சியப்படுத்தும் இந்திய நீதி தேவதையிடம்
    நாம் ஈழப் படுகொலைகளை நிறுத்தும்படி கேட்டது தப்பு! தப்பு! கன்னத்தில் போட்டுக் கொள்கின்றோம்.

    ReplyDelete
  19. சொந்தக் குடிமக்களின் மரணத்தையே அலட்சியப்படுத்தும் இந்திய நீதி தேவதையிடம்
    நாம் ஈழப் படுகொலைகளை நிறுத்தும்படி கேட்டது தப்பு! தப்பு! கன்னத்தில் போட்டுக் கொள்கின்றோம்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.