ஜூன் 16 , 2010 அன்று 40 நாட்கள் விடுப்பில் தாய்த்தமிழகத்திற்குச் சென்றேன். சென்னை விமான நிலையத்தில் என்னை வரவேற்க (எனது தங்கையின் கணவர் வர சற்று தாமதமாகி விட்டது) நண்பர் கயிலை மு.வேடியப்பன் அவர்கள் வரவிருந்தார். தவிர்க்கவே முடியாத காரணத்தால் அவராலும் வரமுடியாமல் போகவே, அவருடைய நண்பர் ஒருவரை சுமோ வாகனத்துடன் அனுப்பி, அவரது “ டிஸ்கவரி புக் பேலஸ்”-க்கு அழைத்துப்போக ஏற்பாடு செய்திருந்தார்.
காலை உணவாக பூரி வாங்கி வைத்து காத்திருந்தார். முதன்முதலாக இருவரும் நேரில் சந்தித்துக் கொள்கிறோம். ஆனால், அப்படியொரு எண்ணமே இருவருள்ளும் இருக்கவில்லை.மாறாக, நெருங்கிய உறவினரை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதைப் போலவே உணர்ந்தோம்.
சென்று சேர்ந்ததும் முதல் வேலையாக பூரியை பதம் பார்த்தபின், சிறிது நேரம் பேசி மகிழ்ந்தோம். அன்று புத்தகக்கடைக்கு அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களும் வந்திருந்தார்.அவரையும் அங்கே சந்தித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. பின், சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொண்டு ஊருக்குப் புறப்படத் தயாரானேன்.
சுமோ ஓட்டி வந்த அதே நண்பர் அதுவரை வாகனத்திலேயே காத்திருந்து (நான் அதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை), என்னை அழைத்துக் கொண்டு போய் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சேர்த்தார். எனது தகவலின் பேரில் தங்கையின் கணவர் அங்கே வந்து காத்திருந்தார். சுமோ ஓட்டிய நண்பருக்கு நன்றி சொல்லிவிட்டு,
“பாஸ் தண்ணிப்பழக்கம் உண்டா?”, என்றேன். (எனக்கும் அந்த பழக்கம் இல்லைங்க. நம்பனும். நம்பிக்கைதான் வாழ்க்கை.)
“ஆறு மாசம் ஆச்சுங்க பாஸ். கல்யாணத்துக்கப்புறம் விட்டுட்டேன்”, என்றார்.
“ரொம்ப சந்தோசம்”, என்று மீண்டும் ஒருமுறை கை குலுக்கி விடைப்பெறுகையில்,
இன்னொரு சந்தோசம் பாஸ் உங்களுக்காக விமான நிலையத்தில் காத்திருந்த போது உங்க தங்கச்சி (அவரின் மனைவி) போன் செஞ்சிருந்தாங்க. ”உண்டாகி இருக்காங்களாம்”, என்றார்.
முதல் சந்திப்பிலேயே உறவினராகிப்போன அந்த நட்பை என்ன பேர் சொல்லி அழைக்கலாம்?
அதைவிடவும் கவனிக்கவேண்டியது, மனைவி சொன்ன மகிழ்வானத் தகவலைக்கேட்டு உடனே வீட்டிற்குச் சென்று தனது அன்பையும் , மகிழ்வையும் வெளிப்படுத்துவதை தவிர்த்துவிட்டு , நண்பனின் நண்பனுக்காக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக (எனக்காக) காத்திருந்த அவரது அன்பை என்ன பேர் சொல்லி அழைக்கலாம்?
“இதை ஏன் மொதல்லயே என்கிட்ட சொல்லலை. நீங்க போய் தங்கச்சியப் பாத்திருக்கலாம். நான் ஆட்டோ புடிச்சி போயிருப்பனே”, என்றேன்.
“பரவாயில்ல விடுங்க பாஸ், உங்களை சந்திக்கறதும் கூட மகிழ்ச்சியான விசயந்தானே. நிலமைய சொன்னா வீட்ல ஏத்துக்குவாங்க பாஸ்” என்றார்.
அந்த நண்பரின் பெயர் “ சுரேஷ் ”. சென்னை தான் அவரது சொந்த ஊராம்.
இரு கைகளையும் பற்றிக் குலுக்கி அவருக்கு வாழ்த்துச் சொல்லி, அந்த புதுத் தங்கைக்கு எனதன்பை தெரிவிக்கச் சொல்லி விட்டு , ஊருக்குப் பயணமானோம். பயணம் இனிதாய் அமைந்தது. அதைவிட இனிது,
அகநாழிகை பொன்.வாசுதேவன் நண்பர்களுடன்.
வேடியப்பனுடன் நான்.
கீழே- “டிஸ்கவரி புக் பேலஸ்”- இன் புகைப்படங்கள்.
நம்ம ”டாபிக்”குல கூட நிறைய புத்தகங்கள் இருக்கே.
அகநாழிகை பொன்.வாசுதேவனுடன் வேடியப்பன்.
நட்பின் ப(பா)லம் அடுத்த பதிவிலும் தொடரும்.....
நெகிழ்ச்சியான பதிவு. நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் அனைவருமே முதல் சந்திப்பிலேயே பலவருடப் பழக்கம் ஏற்பட்டதைப் போல நம்மை உணரச் செய்வார்கள். மிக இனியவர்கள்.
ReplyDeleteஸ்ரீ....
//நட்பின்றி அமையாது உலகு...//
ReplyDeleteஅதேதான்... மகிழ்ச்சி தொடருங்கள்...
//“ரொம்ப சந்தோசம்”, என்று மீண்டும் ஒருமுறை கை குலுக்கி விடைப்பெறுகையில், //
ஆமா இதிலென்ன அப்படி சந்தோஷம்... ??
ரொம்ப சந்தோசம் சத்ரியன்
ReplyDeleteநட்பைக் கொண்டாடும் மனிதர்கள் உள்ளவரை உலகம் இனிதும் அழகுமானது
அந்த சகோதரிக்கும் சுரேஷுக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி சத்ரியன்
ReplyDeleteநீங்கள் பகிர்ந்திருக்கும் விதம் நன்று
உங்கள் இடுகைலேயே உணர முடிகிறது உங்கள் சந்தோசத்தை... வாழ்த்துக்கள்..
ReplyDeleteமதியமே வாசித்தேன், பின்னூ போட முடியல...
ReplyDeleteஅருமையான பகிர்வு.
தொடருங்கப்பு, ஆவலோடு இருக்கோம்.
நல்ல பகிர்வு
ReplyDeleteதலைப்பே அருமை....
ReplyDeleteம்ம்ம்.....நடத்துங்க மாப்ள
natpu thodara vazhthukkal
ReplyDeleteஉங்கள் நட்பும், சந்தோசமும் பதிவிலேயே தெரிகிறது....
ReplyDeleteநெகிழ்ச்சியாக உணர்ந்தேன். நண்பர் சுரேஷ்க்கு எனது அன்பு.
ReplyDeleteதொடருங்கள் நண்பரே..
பதிவு நெகிழ்ச்சி தொடருங்கள் சத்ரியன்
ReplyDeleteஅன்புக்கு இலக்கணமாய்...
ReplyDeleteஇன்னும் சிலர் வாழ்ந்து
கொண்டுதான் இருக்கின்றார்கள்
அதில்... உங்களுக்குக் கிடைத்த
நண்பரும் ஒருவர்
பிரதிபலன் எதிர்பார்க்காமல்
நடந்து கொள்வதும்,உதவி செய்வதும்தான்
உண்மையான நட்புத் தோழரே! அது உங்களுக்குக்
கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி
அண்ணே உங்களப்பார்க்கையில எனக்கென்னவோ இதயம் முரளிய பார்த்த மாறியே இருக்கு...
ReplyDelete