Aug 16, 2010

சலவைக்கல் ரோஜா

சேற்றில் அன்றி - யமுனை
ஆற்றில் முளைத்த
வெண் தாமரை

சிதை புதைத்த இடத்தில்
புல் முளைத்திருந்தால்
உலகு அதிசயிக்க
ஒன்றுமில்லாமல் போயிருக்கும்.
”சலவைக்கல் ரோஜா” முளைத்தால்
உலகம் அதிசயிக்காமல்
வேறென்ன செய்யும் ?

முப்பத்தெட்டு வயதில் உதிர்ந்த
முள்ளில்லாத ரோஜாவிற்கு
முகலாய ராஜா
நினைவுச் சின்னம் எழுப்ப
நினைத்த தருணம்,
யாருக்கு உதித்திருக்கும்
நாளைய உலகின்
காதல் சின்னம் இதுவென்று ?

சுவாசம் இன்றி
வாழ முடியாதென்றால்
முன்னூற்றைம்பது
ஆண்டுகள் கடந்தும்
மும்தாஜ் இன்னும்
வாழ்ந்துக் கொண்டிருப்பது எப்படி?



புகைப்படம்:- நன்றி google.

43 comments:

  1. தாஜ்மகாலுக்காக ஒரு கவிதையா
    அருமை மனவிழியாரே!!!

    ReplyDelete
  2. க‌விதை ந‌ல்லா இருக்கு அண்ணா... ப‌ட‌மும் ந‌ல்லா இருக்கு ரெம்ப‌ தேடி இருப்பீங்க‌னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. சலவைகல் ரோஜா - அட!!!


    ------------------

    தாஜ்மஹாலை பார்த்தவுடன் நான் வேறு கவிதை எதிர்ப்பார்த்தேன் ...

    ReplyDelete
  4. சில விஷயங்களைப்பற்றி எழுத, படிக்க, பார்க்க என எல்லாம் இனிமையாய் இருக்கும்...! தாஜ்மகாலும் அதில் ஒன்று. கவிதை அழகு கண்ணன்!

    பிரபாகர்...

    ReplyDelete
  5. நினைவாலே சிலை செய்து.. ம்ம்ம் சலவைக்கல் ரோஜா அருமை கவிஞரே

    ReplyDelete
  6. சுவாசம் இன்றி
    வாழ முடியாதென்றால்
    முன்னூற்றைம்பது
    ஆண்டுகள் கடந்தும்
    மும்தாஜ் இன்னும்
    வாழ்ந்துக் கொண்டிருப்பது எப்படி?


    ........அதானே! அருமையான கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. கவிதையும், தாஜ்மகாலும் அழகு...

    ReplyDelete
  8. //யமுனை
    ஆற்றில் முளைத்த
    வெண் தாமரை//
    உண்மை தான் அண்ணே..

    கவிதையை இன்னும் கொஞ்சம் நீட்டி இருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்..

    ReplyDelete
  9. முப்பத்தெட்டு வயதில் உதிர்ந்த
    முள்ளில்லாத ரோஜாவிற்கு
    முகலாய ராஜா
    நினைவுச் சின்னம் எழுப்ப
    நினைத்த தருணம்,
    யாருக்கு உதித்திருக்கும்
    நாளைய உலகின்
    காதல் சின்னம் இதுவென்று ?\\\\\\

    ஓஓ..எனக்கு வயது தெரியாது
    முப்பத்தெட்டா?
    இதற்குள் அவர்கள் பதினான்கு
    பிள்ளைகள் பெற்றுவிட்டார்!

    ReplyDelete
  10. //தாஜ்மகாலுக்காக ஒரு கவிதையா
    அருமை மனவிழியாரே!//

    சக்தி,

    தாஜூக்கு ஒரு கவிதை போதாது தான்.

    ReplyDelete
  11. //க‌விதை ந‌ல்லா இருக்கு அண்ணா... ப‌ட‌மும் ந‌ல்லா இருக்கு ரெம்ப‌ தேடி இருப்பீங்க‌னு நினைக்கிறேன்//

    ஸ்டீவன்,

    தம்பிய அண்ணா-ன்னு கூப்பிடறீங்களே.

    படம் இணையத்தில் தேடிப் பெற்றது தான்.

    ReplyDelete
  12. //சலவைகல் ரோஜா - அட!!!


    ------------------

    தாஜ்மஹாலை பார்த்தவுடன் நான் வேறு கவிதை எதிர்ப்பார்த்தேன் .//

    வேற மாதிரி பின்னர் வரும் மாப்ள.

    ReplyDelete
  13. //வாழும் காதல்//

    ஆமாம் ஈசா,

    இன்னும் இன்னும் ... வாழும்!

    ReplyDelete
  14. //சில விஷயங்களைப்பற்றி எழுத, படிக்க, பார்க்க என எல்லாம் இனிமையாய் இருக்கும்...! தாஜ்மகாலும் அதில் ஒன்று. கவிதை அழகு கண்ணன்!//

    நன்றி பிரபா.

    ReplyDelete
  15. //நினைவாலே சிலை செய்து.. ம்ம்ம் சலவைக்கல் ரோஜா அருமை கவிஞரே//

    தேனக்கா,

    நன்றிங்க.

    ReplyDelete
  16. //சுவாசம் இன்றி
    வாழ முடியாதென்றால்
    முன்னூற்றைம்பது
    ஆண்டுகள் கடந்தும்
    மும்தாஜ் இன்னும்
    வாழ்ந்துக் கொண்டிருப்பது எப்படி?


    ........அதானே! அருமையான கவிதை! பாராட்டுக்கள்!//

    நன்றிங்க சித்ராக்கா.

    ReplyDelete
  17. //கவிதையும், தாஜ்மகாலும் அழகு.//

    நன்றி சங்கமேஷ்.

    ReplyDelete
  18. ////யமுனை
    ஆற்றில் முளைத்த
    வெண் தாமரை//
    உண்மை தான் அண்ணே..

    கவிதையை இன்னும் கொஞ்சம் நீட்டி இருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்..//

    சிவா,

    நீண்ட கவிதைகளை இப்போதெல்லாம் வெகுவாக பலர் விரும்புவதில்லை.

    ReplyDelete
  19. //முப்பத்தெட்டு வயதில் உதிர்ந்த
    முள்ளில்லாத ரோஜாவிற்கு
    முகலாய ராஜா
    நினைவுச் சின்னம் எழுப்ப
    நினைத்த தருணம்,
    யாருக்கு உதித்திருக்கும்
    நாளைய உலகின்
    காதல் சின்னம் இதுவென்று ?\\\\\\

    ஓஓ..எனக்கு வயது தெரியாது
    முப்பத்தெட்டா?
    இதற்குள் அவர்கள் பதினான்கு
    பிள்ளைகள் பெற்றுவிட்டார்!//

    ஆமாங்க கலா,

    38 வயதில் மரணமடைந்து விட்டதாக வரலாறு சொல்கிறது. அதற்குள்ளாகத்தான் 14 குழந்தைகளைப் பெற்றெடுத்திருந்தார்.

    அதில், மூத்த மகள் அச்சு அசலாக “மும்தாஜ்” போலவே இருந்தாளாம்.

    இன்னும் தகவல் வேண்டும் என்றால் “முகலாயர்கள்” என்னும் நூல் வாங்கிப் படியுங்கள்.

    ReplyDelete
  20. மிகவும் அருமை நன்பரே.

    //முன்னூற்றைம்பது
    ஆண்டுகள் கடந்தும்
    மும்தாஜ் இன்னும்
    வாழ்ந்துக் கொண்டிருப்பது எப்படி?
    //

    சிறப்பான வரிகள்

    ReplyDelete
  21. சிறப்பான வரிகள். அருமை நன்பரே.

    ReplyDelete
  22. சிதை புதைத்த இடத்தில்
    புல் முளைத்திருந்தால்
    உலகு அதிசயிக்க
    ஒன்றுமில்லாமல் போயிருக்கும்.
    ”சலவைக்கல் ரோஜா” முளைத்தால்
    உலகம் அதிசயிக்காமல்
    வேறென்ன செய்யும் ?

    அசத்திருக்கீங்க நண்பரே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. யாருக்கு உதித்திருக்கும்
    நாளைய உலகின்
    காதல் சின்னம் இதுவென்று ?



    உண்மைதான்!!!!!!!!!

    ReplyDelete
  24. சுவாசம் இன்றி
    வாழ முடியாதென்றால்
    முன்னூற்றைம்பது
    ஆண்டுகள் கடந்தும்
    மும்தாஜ் இன்னும்
    வாழ்ந்துக் கொண்டிருப்பது எப்படி?





    எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி??????????????????????

    ReplyDelete
  25. அதுசரி.. வயசானாலும் காதல நேசிக்கிற பார்வை எல்லாருக்கும் இருக்கத்தானே செய்யுது.. (இப்ப நீங்க இல்ல...)

    ReplyDelete
  26. கண்ணழகா.....வந்திட்டேன்.ஊர்ல இருந்து வந்து ஒரு மாசமாகப் போகுது.இன்னும் அதே காதல் மூட்லதான் இருக்கீங்களோ !

    கவிதையும் படமும் அழகு.ஆனா இது உங்க பாணியிலிருந்து வித்யாசம்.சலவைக்கல் வரிகளில் மிஸ்ஸிங் செதுக்கல்.

    ReplyDelete
  27. //சுவாசம் இன்றி
    வாழ முடியாதென்றால்
    முன்னூற்றைம்பது
    ஆண்டுகள் கடந்தும்
    மும்தாஜ் இன்னும்
    வாழ்ந்துக் கொண்டிருப்பது எப்படி?





    எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி?????????????????????//

    வாங்க குணா,

    எப்படின்னா, கடவுளை மறுப்பவர்கள் கூட காதலை மறுப்பதில்லை. அதான்!

    ReplyDelete
  28. //அதுசரி.. வயசானாலும் காதல நேசிக்கிற பார்வை எல்லாருக்கும் இருக்கத்தானே செய்யுது.. (இப்ப நீங்க இல்ல...)//

    அதானே பாலாசி! இப்ப நீங்க இல்ல?

    ReplyDelete
  29. //கண்ணழகா......வந்திட்டேன்.//

    இதுக்கொன்னும் கொறைச்சல் இல்ல.

    //ஊர்ல இருந்து வந்து ஒரு மாசமாகப் போகுது.இன்னும் அதே காதல் மூட்லதான் இருக்கீங்களோ !//

    ஆமா... அதே காதல்.

    //கவிதையும் படமும் அழகு.ஆனா இது உங்க பாணியிலிருந்து வித்யாசம்.சலவைக்கல் வரிகளில் மிஸ்ஸிங் செதுக்கல்..//

    ஆமா, இருக்கலாம். மனசுல சின்னதா என்னவோ.....?

    ReplyDelete
  30. கவிதை அருமை.
    தாஜ்மகால் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  31. சுவாசம் இன்றி
    வாழ முடியாதென்றால்
    முன்னூற்றைம்பது
    ஆண்டுகள் கடந்தும்
    மும்தாஜ் இன்னும்
    வாழ்ந்துக் கொண்டிருப்பது எப்படி?

    காதலின் வெளிபாடு மிகஅருமை

    http://marumlogam.blogspot.com

    ReplyDelete
  32. கண்ணழகா.....வந்திட்டேன்\\\\\\\

    இந்த அழகை விடுவதாயில்லை....???

    ஹேஸ்..இப்படியெல்லாம் சொல்லபடாது
    என்று சாரல்குட்டி சொல்லிருக்கிறாள்
    சத்ரியனேட இடுகையில்
    உசிரே போகுது......
    என்ற தலைப்பின் இடுகையின்
    பின்னோட்டத்தை
    நோட்டம் விடவும்

    ReplyDelete
  33. //கவிதை அருமை.
    தாஜ்மகால் நல்லாயிருக்கு.//

    குமார்,

    அது எப்பவும் அப்படித்தான்...!

    ReplyDelete
  34. //சுவாசம் இன்றி
    வாழ முடியாதென்றால்
    முன்னூற்றைம்பது
    ஆண்டுகள் கடந்தும்
    மும்தாஜ் இன்னும்
    வாழ்ந்துக் கொண்டிருப்பது எப்படி?

    காதலின் வெளிபாடு மிகஅருமை//

    தினேஷ்,

    முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தோழா.

    ReplyDelete
  35. சலவைக்கல் ரோஜாவிற்கு கண்ணழகு ராஜாவின் கவிதையா !!!

    வாழ்த்துக்கள் நண்பா நீண்ட கவிதையை தந்ததிற்கு

    விஜய்

    ReplyDelete
  36. ஆமா ... சாரலின்பாவோட அம்மா டீச்சருக்குத் தெரியுமா? காதல் இன்னும் இருப்பது?

    ReplyDelete
  37. கலக்குறீங்கோ...

    http://communicatorindia.blogspot.com/

    ReplyDelete
  38. அண்ணா கவிதை அருமை

    ReplyDelete
  39. அழகான கவிதை ;)

    ReplyDelete
  40. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. மிகவும் அழகான கவிதை சகோ!!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.