Sep 21, 2010

தேவகணம்



’உன்னை
மணந்ததால் தான்
இந்த நாரும் ( நானும்)
மணக்கிறது’ என்ற
உண்மையை நீ
உணராமல்,

வாழ்த்துச் சொல்ல
வாய் திறக்கும் முன்னே
நானுன்னை
மணந்த நாள் தான்
உனது பிறந்த நாள்
எனச் சொல்லி
பிடிவாதம் செய்கிறாய்.
புரியத் தொடங்கியது
என் பிறவிப்பயன்.

*
யாசித்தே பழகிப்போன
எனக்கு
வள்ளலாக எப்போதும் நீ!

இதோ
இந்த யாசகனின்
வாசகங்கள்
வாழ்த்துக்களாய்
மலர்கிறது - உன்
மலர் பாதங்களில்...!

கூடவே,
என் வாசகர்களின்
வாழ்த்துக்களும் ...!


* இன்று (22/09/10) என்னுயிர் மனைவியின் பிறந்த நாள்.


12 comments:

  1. Thats a nice gift. convey our birthday wishes to her. :-)

    ReplyDelete
  2. வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும்,
    வாழ்த்த வரும் அன்புள்ளங்களுக்கும்
    எங்களின் நன்றிகள் பல!

    (பொருத்தருளுங்கள் தோழமைகளே! மிகுந்த பணிச்சுமைகளுக்கு நடுவே சிலவற்றைப் பதிவேற்றுகிறேன். உங்களின் படைப்புகளை வாசித்து , என் கருத்தினைப் பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பில்லாததால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.)

    ReplyDelete
  3. வாழ்த்துகள் தங்காச்சி ...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தோழி,,,,அழகிய கவிதை சொல்கிறது அவர் மேல் உங்கள் காதலை சத்ரியன்..

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பா தங்கைக்கு

    விஜய்

    ReplyDelete
  7. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
    உங்கள் கவிதை சொல்கிறது காதலை..!

    ReplyDelete
  8. சத்ரியா...வரக் கொஞ்சம் பிந்திவிட்டேன்.என்றாலும் என் அன்பின் வாழ்த்தைச் சொல்லிவிடுங்கள் சகோதரிக்கு.

    ReplyDelete
  9. வாழ்த்துக்க‌ள்.. வாழ்த்துக்க‌ள்..

    ReplyDelete
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. என்னுடைய வாழ்த்துக்களை சொல்லுங்க மாப்ள

    ReplyDelete
  12. இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.