புறாக்களின் ஜீவாதாரத்திற்கு
பிடிப்பிடியாய்
அரிசியை அள்ளி வீசும் நீ
எனது ஜீவாதாரத்திற்கு
ஒன்றிரண்டு
புன்னகையையும் வீசி விட்டு
போகிறாய்..!
***
பறந்து விடாமலும்
இறந்து விடாமலும்
உள்ளங்கைக்குள்
பொத்திப் பாதுகாக்கும்
பட்டாம்பூச்சியைப்போல்
உள்ளத்துக்குள்
உன்
புன்னகைகளையும்...!
***
அகராதிப் புத்தகங்களில்
சல்லடையாய்
சலைத்துப் பார்த்தும்
அகப்பட மறுக்கின்றன
உன்னிதழ்
உதிர்க்கும்
புன்னகைக்கான பொருள்..!
//பறந்து விடாமலும்
ReplyDeleteஇறந்து விடாமலும்
உள்ளங்கைக்குள்
பொத்திப் பாதுகாக்கும்
பட்டாம்பூச்சியைப்போல்
உள்ளத்துக்குள்
உன்
புன்னகைகளையும்...!//
அற்புதமான வரிகள்....
அருமை..
ReplyDeleteமுதலில் ௧௦௦ போலோவேர்ஸ் மைல்கல் அடைந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பா..
அகராதிப் புத்தகங்களில்
ReplyDeleteசல்லடையாய்
சலைத்துப் பார்த்தும்
அகப்பட மறுக்கின்றன
உன்னிதழ்
உதிர்க்கும்
புன்னகைக்கான பொருள்.
அழகு மனவிழியாரே!!!
சத்ரியா...பொருள் புரிந்துவிடாமலே இருப்பதுதான் அழகு உங்கள் கவிதைபோல !
ReplyDeleteஎல்லாம் அழகவே இருக்கிறது சத்ரியா....
ReplyDeleteவாழ்த்துகள்
நண்பா நலமா ?
ReplyDeleteகவிதை புன்னகை அழகு
விஜய்
அகராதிப் புத்தகங்களில்
ReplyDeleteசல்லடையாய்
சலைத்துப் பார்த்தும்
அகப்பட மறுக்கின்றன
உன்னிதழ்
உதிர்க்கும்
புன்னகைக்கான பொருள்.....
அருமையான வரிகள் நண்பரே
பொருள் புரிந்துவிட்டால்
சிந்திக்க மனமேது.....
//புறாக்களின் ஜீவாதாரத்திற்கு
ReplyDeleteபிடிப்பிடியாய்
அரிசியை அள்ளி வீசும் நீ
எனது ஜீவாதாரத்திற்கு
ஒன்றிரண்டு
புன்னகையையும் வீசி விட்டு
போகிறாய்..!//
அழகு யாரோ சாயலும் ...
//அகராதிப் புத்தகங்களில்
சல்லடையாய்
சலைத்துப் பார்த்தும்
அகப்பட மறுக்கின்றன
உன்னிதழ்
உதிர்க்கும்
புன்னகைக்கான பொருள்..! //
கரீக்ட்டு
இரண்டுக்கும் நடுவில் இருக்கும் கவிதை சாரலோட பாய் ஃப்ரண்ட் எழுதுனதா ( பேபி பொயம்)
புன்னகை தொகுப்பு அறியாமலே புன்னகைக்க செய்கிறது..
ReplyDeleteஆமா இந்த கவிதைகள் யாரோட சிரிப்புக்கு உண்மையை சொல்லனும் சத்ரியன்....
நல்ல புரிதல்
ReplyDeleteசூப்பர் புன்னகை ...
மாம்ஸு நல்லாக்கீறியா
நண்பா , காதலின் பாவம்
ReplyDeleteகவிதைகளில் மிளிர்கிறது
//எனது ஜீவாதாரத்திற்கு
ReplyDeleteஒன்றிரண்டு
புன்னகையையும் வீசி விட்டு
போகிறாய்..!//
இன்றுதான் உங்களின் கவிதை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது....மிக அருமையாக நடை பயில்கிறது உங்கள் கவிதை...வாழ்த்துக்கள்.
காதலில் மயங்கியது போய்....
ReplyDeleteஇப்போது புன்னகையிலா..?
அப்பா,யாரந்தப் புன்னகையரசு?
உங்களைப் புண்ணாக்கியவர்!!
//பறந்து விடாமலும்
ReplyDeleteஇறந்து விடாமலும்
உள்ளங்கைக்குள்
பொத்திப் பாதுகாக்கும்
பட்டாம்பூச்சியைப்போல்//
இந்தப் புன்னகை என்னை வசீகரித்து விட்டது நண்பரே.
அழகிய புன்னகை.
ReplyDeleteஎன்னப்பா இது... தபூ சங்கர் போலவே இருக்கு...
ReplyDeleteஅருமை...