Oct 4, 2010

புன்னகை உனது; புரிதல் எனது-1



புறாக்களின் ஜீவாதாரத்திற்கு
பிடிப்பிடியாய்
அரிசியை அள்ளி வீசும் நீ

எனது ஜீவாதாரத்திற்கு
ஒன்றிரண்டு
புன்னகையையும் வீசி விட்டு
போகிறாய்..!

***

பறந்து விடாமலும்
இறந்து விடாமலும்
உள்ளங்கைக்குள்
பொத்திப் பாதுகாக்கும்
பட்டாம்பூச்சியைப்போல்

உள்ளத்துக்குள்
உன்
புன்னகைகளையும்...!

***

அகராதிப் புத்தகங்களில்
சல்லடையாய்
சலைத்துப் பார்த்தும்
அகப்பட மறுக்கின்றன

உன்னிதழ்
உதிர்க்கும்
புன்னகைக்கான பொருள்..!

16 comments:

  1. //பறந்து விடாமலும்
    இறந்து விடாமலும்
    உள்ளங்கைக்குள்
    பொத்திப் பாதுகாக்கும்
    பட்டாம்பூச்சியைப்போல்

    உள்ளத்துக்குள்
    உன்
    புன்னகைகளையும்...!//

    அற்புதமான வரிகள்....

    ReplyDelete
  2. அருமை..
    முதலில் ௧௦௦ போலோவேர்ஸ் மைல்கல் அடைந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  3. அகராதிப் புத்தகங்களில்
    சல்லடையாய்
    சலைத்துப் பார்த்தும்
    அகப்பட மறுக்கின்றன

    உன்னிதழ்
    உதிர்க்கும்
    புன்னகைக்கான பொருள்.

    அழகு மனவிழியாரே!!!

    ReplyDelete
  4. சத்ரியா...பொருள் புரிந்துவிடாமலே இருப்பதுதான் அழகு உங்கள் கவிதைபோல !

    ReplyDelete
  5. எல்லாம் அழகவே இருக்கிறது சத்ரியா....
    வாழ்த்துகள்

    ReplyDelete
  6. நண்பா நலமா ?

    கவிதை புன்னகை அழகு

    விஜய்

    ReplyDelete
  7. அகராதிப் புத்தகங்களில்
    சல்லடையாய்
    சலைத்துப் பார்த்தும்
    அகப்பட மறுக்கின்றன

    உன்னிதழ்
    உதிர்க்கும்
    புன்னகைக்கான பொருள்.....

    அருமையான வரிகள் நண்பரே

    பொருள் புரிந்துவிட்டால்
    சிந்திக்க மனமேது.....

    ReplyDelete
  8. //புறாக்களின் ஜீவாதாரத்திற்கு
    பிடிப்பிடியாய்
    அரிசியை அள்ளி வீசும் நீ

    எனது ஜீவாதாரத்திற்கு
    ஒன்றிரண்டு
    புன்னகையையும் வீசி விட்டு
    போகிறாய்..!//

    அழகு யாரோ சாயலும் ...

    //அகராதிப் புத்தகங்களில்
    சல்லடையாய்
    சலைத்துப் பார்த்தும்
    அகப்பட மறுக்கின்றன

    உன்னிதழ்
    உதிர்க்கும்
    புன்னகைக்கான பொருள்..! //

    கரீக்ட்டு

    இரண்டுக்கும் நடுவில் இருக்கும் கவிதை சாரலோட பாய் ஃப்ரண்ட் எழுதுனதா ( பேபி பொயம்)

    ReplyDelete
  9. புன்னகை தொகுப்பு அறியாமலே புன்னகைக்க செய்கிறது..

    ஆமா இந்த கவிதைகள் யாரோட சிரிப்புக்கு உண்மையை சொல்லனும் சத்ரியன்....

    ReplyDelete
  10. நல்ல புரிதல்
    சூப்பர் புன்னகை ...

    மாம்ஸு நல்லாக்கீறியா

    ReplyDelete
  11. நண்பா , காதலின் பாவம்
    கவிதைகளில் மிளிர்கிறது

    ReplyDelete
  12. //எனது ஜீவாதாரத்திற்கு
    ஒன்றிரண்டு
    புன்னகையையும் வீசி விட்டு
    போகிறாய்..!//

    இன்றுதான் உங்களின் கவிதை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது....மிக அருமையாக நடை பயில்கிறது உங்கள் கவிதை...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. காதலில் மயங்கியது போய்....
    இப்போது புன்னகையிலா..?

    அப்பா,யாரந்தப் புன்னகையரசு?

    உங்களைப் புண்ணாக்கியவர்!!

    ReplyDelete
  14. //பறந்து விடாமலும்
    இறந்து விடாமலும்
    உள்ளங்கைக்குள்
    பொத்திப் பாதுகாக்கும்
    பட்டாம்பூச்சியைப்போல்//

    இந்தப் புன்னகை என்னை வசீகரித்து விட்டது நண்பரே.

    ReplyDelete
  15. என்னப்பா இது... தபூ சங்கர் போலவே இருக்கு...

    அருமை...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.