Oct 29, 2010

காதல் சொல்லி வந்தேன் -1


ஒன்பது கிரகங்கள்
தன்னைச் சுற்றியே
வந்த போதும்
ஒளியைப்
பிரதிபலிக்கும் பாக்கியத்தை
நிலவிற்கே தந்த
சூரியன் போல

எண்ணற்றோர்
உன்னைச் சுற்றி
வந்தபோதும்
எனக்கே அருளினாய்
உன் காதலை..!

****
வீட்டிற்குத் தெரியாமல்
பூங்கா வலம் சென்றோம்

பசும்புல் மீது
பரவி அமர்ந்தாய்.
ஆறறிவு ஆணாய்ப் பிறந்ததை விட
ஓரறிவு புல்லாய் முளைத்திருக்கலாம் என
அங்கலாய்த்தது
அடி மனம்...!

****

வாரங்கள்
பல கடந்த பின்
விரலை மட்டும் தொட
சம்மதித்தாய்...

பூ பறிக்க வாய்த்ததற்கு
தீ மிதிக்க நேர்ந்துக்கொண்ட
என்னை எண்ணி
ஏளனமாய் சிரித்தது
அம்மன் சிலை..!



17 comments:

  1. //ஆறறிவு ஆணாய்ப் பிறந்ததை விட
    ஓரறிவு புல்லாய் முளைத்திருக்கலாம் என
    அங்கலாய்த்தது
    அடி மனம்...!//

    உண்மைதான்....

    ReplyDelete
  2. மூன்றாவது கவிதை சூப்பர் சத்ரியன்... நம்ம முப்பாத்தம்மனுக்கா..மிதிங்கோ மிதிங்கோ...

    ReplyDelete
  3. சங்கவி said...

    //ஆறறிவு ஆணாய்ப் பிறந்ததை விட
    ஓரறிவு புல்லாய் முளைத்திருக்கலாம் என
    அங்கலாய்த்தது
    அடி மனம்...!//

    உண்மைதான்....

    ஏன் சங்கவி அவரை என்கிரேஜ் பண்ணிறீங்க ஏற்கனவே அவர் பாவம் தீ மிதிக்க புறப்பட்டுகிட்டு இருக்கார்

    ReplyDelete
  4. வெண்ணிலவாக
    ஒரு பிறவி
    பசும்புல்லாக
    மறுபிறவி
    அம்மன் சிலை
    சிரித்ததன்ரோ
    தான் கொடுத்த
    பிறவியோன்ரில்
    பல பிறவி
    படைத்து
    பிரம்மனயும்
    மிஞ்சுவிட்டான்
    இன்று காதல்
    கட்டுகளினால்
    இனி பிரம்மன்பாடு
    திண்டாட்டம்தான்........

    ReplyDelete
  5. எண்ணற்றோர்
    உன்னைச் சுற்றிச்சுற்றி
    வந்தலைந்தும்
    எனக்கே அருளினாய்
    உன் காதலை..!]]

    இது தான் மாம்ஸ் டாப்பு

    இருந்தாலும் உன் நேர்மை ...

    ReplyDelete
  6. //பூ பறிக்க வாய்த்ததற்கு
    தீ மிதிக்க நேர்ந்துக்கொண்ட
    என்னை எண்ணி
    ஏளனமாய் சிரித்தது
    அம்மன் சிலை..!
    //

    ஹ ஹ ஹா

    முதல் கவிதை இலக்கணம் மீறினாலும் அழகா இருக்குண்ணா!

    ReplyDelete
  7. 3
    2
    1

    மூன்றும் அருமை...

    தீமித்தது என்னவோ மனசுக்குள் சுடராய்.

    ReplyDelete
  8. பசும்புல் மீது
    பரவி அமர்ந்தாய்.
    ஆறறிவு ஆணாய்ப் பிறந்ததை விட
    ஓரறிவு புல்லாய் முளைத்திருக்கலாம் என
    அங்கலாய்த்தது
    அடி மனம்...!

    மெல்லிய உணர்வை அழகாய் சொல்லியிருக்கின்றீர்கள்

    ReplyDelete
  9. வணக்கம் உறவுகளே!

    சொன்னா நம்பவா போறீங்க. இருந்தாலும் சொல்ல வேண்டியது எனது கடமை.

    கன்ன்ன்ன்ன்ன்னித் தீவுல
    (’பெண் வாசமே இல்லாத தீவுக்கு கன்னித் தீவுன்னு பேரு. இதையெல்லாம் தட்டிக்கேக்க இங்க யார் இருக்கா?) வேலைக்குப் போறதனால, நேரப்பற்றாக்குறை!

    என்னமோ உங்களயெல்லாம் ஏமாத்தக்கூடாதுன்னு அப்பப்போ ஒரு பதிவ போட்டுட்டு, பதிவுலகத்துல நானும் இருக்கேன்னு துண்டு ஒன்னு போட்டு வெக்கறேன்.

    ReplyDelete
  10. "ஏளனமாய் சிரித்தது
    அம்மன் சிலை..!" சூப்பர்.

    எதுஎதற்கோ எல்லாம் அம்மன் சிரிக்குது.

    "கன்ன்ன்ன்ன்ன்னித் தீவுல"
    கடல்கன்னி இருக்குமே :))

    ReplyDelete
  11. எண்ணற்றோர்
    உன்னைச் சுற்றிச்சுற்றி
    வந்தலைந்தும்
    எனக்கே அருளினாய்
    உன் காதலை..!//

    அட அம்புட்டும் அருமை . நான் எதைச் சொல்வேன்..:)) கோபால்

    ReplyDelete
  12. அட்டகாசம் நண்பா

    அதுவும் அந்த மூன்றாவது கவிதை

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  13. உண்மைதான் கோபால்.. பூப்பறீக்க வாய்த்ததற்கு தீ மிதிக்க நேர்ந்து கொண்டதைப் படிக்க திரும்ப வந்தேன்..:))

    ReplyDelete
  14. ரொம்ப அருமை சத்ரியன்
    //
    வீட்டிற்குத் தெரியாமல்
    பூங்கா வலம் சென்றோம்
    //

    சாரலின்பாவிற்காவது இது தெரியுமா?

    ReplyDelete
  15. மூன்று கவிதைகளும் நச்...

    அம்மன் சிரித்தது மட்டும்தானே..
    கோபம் இல்லையே..

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.