”எப்படி நுழைந்தாய்
என்னுள்?”, என்பதை
இன்னும்
எத்தனை தடவைதான்
கேட்கவிருக்கிறாயோ!
செப்படி வித்தையொன்றும்
செய்திட வில்லையடி - நான்!
உயிர்த்திரவம் ஒருதுளியின்
கோடியணுக்களில் ஏதோவொன்று
ஓடிப்புகுந்து கூடி கலந்து
கரு உருவாவது போல்,
உன்
சிறுசிறு விசாரிப்புகள்
துறுதுறுவென்ற செயல்கள்
கலகலவென்ற சிரிப்பு
இதுகளில் ...
ஏதோவொன்று
என்னுள் சென்று
காதல் தரித்து
கவிதைச் சொற்களாய் வழிந்து
உன்
கண்வழி நுழைந்ததை
கண் இமைக்காமல்
நீ
கண்டிருந்த கனமொன்றில் தான்
உன்னில் நான்..!
சத்ரியா....வெளில ரொம்பக் குளிர்.ஆனா சுடச் சுடக் கவிதை பாக்கிறேன்.என்ன ஞாயிறு ஸ்பெஷலா.காதல் சொட்டச் சொட்ட அழகான வரிகளோட கவிதை.
ReplyDeleteகண்ணழகர் கண் யார் கண்ணுக்குள்ள நுழைஞ்சிருக்கு.வீட்டுக்குத் தெரியுமா இந்த விஷயம் !எதுக்கும்.....கலா ஊர்ல இல்லன்னு நினைக்கிறேன்.அவ பார்த்தா விபரம் சொல்லுவா.
தமிழிஸ்ல இணைச்சிருக்கேன்.
காதல் சொட்டச் சொட்ட அழகான கவிதை..!
ReplyDeleteகாதல் ததும்பும் கவிதை! அருமை!
ReplyDeleteகாதல்
ReplyDeleteகரை ஏறுமிடத்தும்
கரை சேருமிடத்தும்
ஏறுமிடம்
சேருமிடம்
இதற்கிடையே
எத்துனை
காதல் நம்மில்
செத்து மடிகின்றன........
நுழைந்தேன்....மிக ரசித்தேன்.
ReplyDeleteநுழைந்த வழியும் விதமும் அழகு
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா
விஜய்
//.என்ன ஞாயிறு ஸ்பெஷலா..?//
ReplyDeleteஇல்லை ஹேமா, இது காதல் ஸ்பெஷல்!
//கண்ணழகர் கண் யார் கண்ணுக்குள்ள நுழைஞ்சிருக்கு.வீட்டுக்குத் தெரியுமா இந்த விஷயம் !//
ReplyDeleteஅவசியம் தெரிஞ்சிக்கனுமோ? வேற யார் கண்ணுக்குள்ள நுழைஞ்சிரப் போகுது, என் ஆத்துக்காரி கண்ணுக்குள்ள தான்! (அப்பாடி, ஒருவழியா சமாளிச்சிட்டேன்.)
//தமிழிஸ்ல இணைச்சிருக்கேன்//
ReplyDeleteநன்றி ஹேமா.
//காதல் சொட்டச் சொட்ட அழகான கவிதை..!//
ReplyDeleteவணக்கம் குமார்,
சரிவர ப்ளாக் பக்கம் வரமுடியறதில்ல. வேலை மிகமிக அதிகம். (இனிமேல்,கொஞ்சம் நேரம் கிடைக்கும்)நீங்க எல்லாம் எப்பவும் போல வரது மகிழ்ச்சியா இருக்கு நண்பா.
மனவிழியாரே மிக அழகான காதல் கவிதை வாழ்த்துக்கள்
ReplyDeleteபடித்தேன்..... பாராட்டுக்கள். (எழுதி ஒட்ட வகை குறைந்த.... வாடகை கணினி... எனவே சுருக்கமாக)
ReplyDeleteஅழகான காதல் கவிதை!
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க..
ReplyDeleteமிகவும் ரசித்து படித்தேன்...
அன்பின் உறவுகளுக்கு ,
ReplyDeleteநன்றிகள் பல.
உன்
ReplyDeleteகண்வழி நுழைந்ததை
கண் இமைக்காமல்
நீ
கண்டிருந்த கனமொன்றில் தான்
உன்னில் நான்..!
..//
மன விழி இல்லையா.. அதான் ரொம்ப பவர் போல கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிப் பாயுது மனசுல..:)) என்ன கோபால்..
நானும் பாக்குறேன்.. எத்தன நாள்தான் யூத்து மாதிரியே நடிப்பீங்கன்னு..
ReplyDelete//காதல் தரித்து
கவிதைச் சொற்களாய் வழிந்து//
வயசான காலத்துல இதெல்லாம் தேவையா நைனா...
//Blogger க.பாலாசி said...
ReplyDeleteநானும் பாக்குறேன்.. எத்தன நாள்தான் யூத்து மாதிரியே நடிப்பீங்கன்னு..
//
repeate............