Nov 21, 2010

புகுந்தேன்



”எப்படி நுழைந்தாய்
என்னுள்?”, என்பதை
இன்னும்
எத்தனை தடவைதான்
கேட்கவிருக்கிறாயோ!

செப்படி வித்தையொன்றும்
செய்திட வில்லையடி - நான்!

உயிர்த்திரவம் ஒருதுளியின்
கோடியணுக்களில் ஏதோவொன்று
ஓடிப்புகுந்து கூடி கலந்து
கரு உருவாவது போல்,

உன்
சிறுசிறு விசாரிப்புகள்
துறுதுறுவென்ற செயல்கள்
கலகலவென்ற சிரிப்பு
இதுகளில் ...

ஏதோவொன்று
என்னுள் சென்று
காதல் தரித்து
கவிதைச் சொற்களாய் வழிந்து

உன்
கண்வழி நுழைந்ததை
கண் இமைக்காமல்
நீ
கண்டிருந்த கனமொன்றில் தான்
உன்னில் நான்..!

18 comments:

  1. சத்ரியா....வெளில ரொம்பக் குளிர்.ஆனா சுடச் சுடக் கவிதை பாக்கிறேன்.என்ன ஞாயிறு ஸ்பெஷலா.காதல் சொட்டச் சொட்ட அழகான வரிகளோட கவிதை.

    கண்ணழகர் கண் யார் கண்ணுக்குள்ள நுழைஞ்சிருக்கு.வீட்டுக்குத் தெரியுமா இந்த விஷயம் !எதுக்கும்.....கலா ஊர்ல இல்லன்னு நினைக்கிறேன்.அவ பார்த்தா விபரம் சொல்லுவா.

    தமிழிஸ்ல இணைச்சிருக்கேன்.

    ReplyDelete
  2. காதல் சொட்டச் சொட்ட அழகான கவிதை..!

    ReplyDelete
  3. காதல் ததும்பும் கவிதை! அருமை!

    ReplyDelete
  4. காதல்
    கரை ஏறுமிடத்தும்
    கரை சேருமிடத்தும்
    ஏறுமிடம்
    சேருமிடம்
    இதற்கிடையே
    எத்துனை
    காதல் நம்மில்
    செத்து மடிகின்றன........

    ReplyDelete
  5. நுழைந்தேன்....மிக ரசித்தேன்.

    ReplyDelete
  6. நுழைந்த வழியும் விதமும் அழகு

    வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  7. //.என்ன ஞாயிறு ஸ்பெஷலா..?//

    இல்லை ஹேமா, இது காதல் ஸ்பெஷல்!

    ReplyDelete
  8. //கண்ணழகர் கண் யார் கண்ணுக்குள்ள நுழைஞ்சிருக்கு.வீட்டுக்குத் தெரியுமா இந்த விஷயம் !//

    அவசியம் தெரிஞ்சிக்கனுமோ? வேற யார் கண்ணுக்குள்ள நுழைஞ்சிரப் போகுது, என் ஆத்துக்காரி கண்ணுக்குள்ள தான்! (அப்பாடி, ஒருவழியா சமாளிச்சிட்டேன்.)

    ReplyDelete
  9. //தமிழிஸ்ல இணைச்சிருக்கேன்//

    நன்றி ஹேமா.

    ReplyDelete
  10. //காதல் சொட்டச் சொட்ட அழகான கவிதை..!//

    வணக்கம் குமார்,

    சரிவர ப்ளாக் பக்கம் வரமுடியறதில்ல. வேலை மிகமிக அதிகம். (இனிமேல்,கொஞ்சம் நேரம் கிடைக்கும்)நீங்க எல்லாம் எப்பவும் போல வரது மகிழ்ச்சியா இருக்கு நண்பா.

    ReplyDelete
  11. மனவிழியாரே மிக அழகான காதல் கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. படித்தேன்..... பாராட்டுக்கள். (எழுதி ஒட்ட வகை குறைந்த.... வாடகை கணினி... எனவே சுருக்கமாக)

    ReplyDelete
  13. அழகான காதல் கவிதை!

    ReplyDelete
  14. ரொம்ப நல்லா இருக்குங்க..
    மிகவும் ரசித்து படித்தேன்...

    ReplyDelete
  15. அன்பின் உறவுகளுக்கு ,

    நன்றிகள் பல.

    ReplyDelete
  16. உன்
    கண்வழி நுழைந்ததை
    கண் இமைக்காமல்
    நீ
    கண்டிருந்த கனமொன்றில் தான்
    உன்னில் நான்..!
    ..//

    மன விழி இல்லையா.. அதான் ரொம்ப பவர் போல கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிப் பாயுது மனசுல..:)) என்ன கோபால்..

    ReplyDelete
  17. நானும் பாக்குறேன்.. எத்தன நாள்தான் யூத்து மாதிரியே நடிப்பீங்கன்னு..

    //காதல் தரித்து
    கவிதைச் சொற்களாய் வழிந்து//

    வயசான காலத்துல இதெல்லாம் தேவையா நைனா...

    ReplyDelete
  18. //Blogger க.பாலாசி said...

    நானும் பாக்குறேன்.. எத்தன நாள்தான் யூத்து மாதிரியே நடிப்பீங்கன்னு..
    //

    repeate............

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.