Dec 8, 2010

இது எத்தனையாவது நாள்...?


இது எத்தனையாவது
நாளென நினைவில் இல்லை.

காற்று மட்டும் புக இடைவெளி
காது கூசாத சொல் தேடி உரையாடல்
மெல்லிய தூரல்
விரைந்து நடக்க
விரும்பாத கால்கள்
நனைந்திருந்தது உடை
பெருந் தீ யின்
முதல் பொறி
முளைவிடத் தொடங்கியிருந்தது...!


**********

சிறுவயதில்
எத்தனையோ முறை
சொல்லியிருக்கிறாள் அம்மா.
எச்சில் பண்டம்
யார் கொடுத்தாலும்
தின்னக்கூடாதென.!

இருவது வருடப்
பசியுடன் இருக்கிறேன்.
முதல்முறை
முத்தம் தின்னக் கொடுக்கிறாய் நீ
வேண்டாமெனச் சொல்ல
விரும்புமா மனம்...?


39 comments:

  1. //இருவது வருடப்
    பசியுடன் இருக்கிறேன்.
    முத்தம் தின்னக் கொடுக்கிறாய் நீ
    வேண்டாமெனச் சொல்ல
    விரும்புமா மனம்...?
    //


    சார் ரொம்ப நல்லா இருக்கு..

    நளினமான வரிகள்.. அத்தனையும் அழகு..

    தொடரட்டும் தங்களின் கலக்கலான இந்த பயணம்..

    அது போல் முதல் கவிதையும் அருமை..

    அனுபவம் அதிகம் என்றே தோன்றுகிறது அய்யா...

    ReplyDelete
  2. கலக்குங்க தலைவரே நமக்கு அனுபவம் இல்லை நான் ரொம்ப சின்ன பையன் தலைவரே

    நேரம் கிடைச்சா கட பக்கம் வாங்க தலைவரே

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க கவிதை உணர்வு பூர்வமா...

    ReplyDelete
  4. ரொம்ப பசியோட இருக்காதீங்க...அல்சர் வந்துடப்போகுது.

    ReplyDelete
  5. //சார் ரொம்ப நல்லா இருக்கு..//

    சார் எல்லாம் வேணாம் அரசன். அந்நியமாத் தோனுது.


    //அனுபவம் அதிகம் என்றே தோன்றுகிறது அய்யா...//

    என்னது? அய்யாவா...? இப்படி எழுதச் சொல்லி கருணாகரசு சொல்லிக் குடுத்தாரா?

    December 8, 2010 10:19 PM

    ReplyDelete
  6. நன்றிங்க சித்ராக்கா.

    ReplyDelete
  7. //கலக்குங்க தலைவரே நமக்கு அனுபவம் இல்லை நான் ரொம்ப சின்ன பையன் தலைவரே //

    யப்ப்ப்ப்பா...!

    //நேரம் கிடைச்சா கட பக்கம் வாங்க தலைவரே//

    நிச்சயமா தினேஷ்.

    ReplyDelete
  8. //நல்லா இருக்குங்க கவிதை உணர்வு பூர்வமா..//

    நன்றிங்க. முதல் வருகைக்கு வணக்கம்.

    காளிதாசன் அண்ணே, ஏன் உங்க வலைக்குச் செல்ல முடியவில்லை?

    ReplyDelete
  9. //ரொம்ப பசியோட இருக்காதீங்க...அல்சர் வந்துடப்போகுது..//

    நண்பா......,

    கலாய்க்குறீங்களே...!

    ReplyDelete
  10. //ம்ம்....ம் !//

    ஹேமா,

    எப்ப ஊமையா போனீங்க?

    வெறும் “ம்ம்..ம் !”

    (உங்களுக்கு யாருக்கும் புரிஞ்சதா, இதுக்கு என்ன அர்த்தம்ன்னு...?)

    ReplyDelete
  11. //love love only love :)//

    மகிழ்ச்சி படுத்தற ஒரே உணர்வு அது மட்டும் தானே சக்தி! அதான்...love love only love :)

    ReplyDelete
  12. சார் எல்லாம் வேணாம் அரசன். அந்நியமாத் தோனுது.

    // இனிமேல் தங்களை அண்ணன் என்றே கூப்பிடுகிறேன்... இது அந்நியமா படாது. தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றால்..//

    //என்னது? அய்யாவா...? இப்படி எழுதச் சொல்லி கருணாகரசு சொல்லிக் குடுத்தாரா?//

    இல்லை இல்லை.. என்னுடைய சொந்த முயற்சி மட்டுமே...

    ReplyDelete
  13. வேட்கை சொல்லி வெள்ளாமை தேடுகிறது கவிதை வரிகள். ரொம்ப பிடிச்சிருக்கு சத்ரியன்

    ReplyDelete
  14. வேட்கை சொல்லி வெள்ளாமை தேடுகிறது கவிதை வரிகள். ரொம்ப பிடிச்சிருக்கு சத்ரியன்

    ReplyDelete
  15. வேட்கை சொல்லி வெள்ளாமை தேடுகிறது கவிதை வரிகள். ரொம்ப பிடிச்சிருக்கு சத்ரியன்

    ReplyDelete
  16. கண்ணழகரே....நான் ஒண்ணும் ஊமையாப் போகல.இந்த "ம்" ல எவ்வளவோ அர்த்தம் இருக்கு.சத்திரியருக்கு இதுவும் தெரில.எதுக்கும் கலா வரட்டும்.சொல்லுவாங்க !

    ReplyDelete
  17. எச்சில் பண்டமா ம்ம்ம்

    நடத்துங்க நண்பா

    விஜய்

    ReplyDelete
  18. //வேட்கை சொல்லி வெள்ளாமை தேடுகிறது கவிதை வரிகள். ரொம்ப பிடிச்சிருக்கு சத்ரியன்//

    நன்றிங்க தமிழ்.

    ReplyDelete
  19. //கண்ணழகரே....நான் ஒண்ணும் ஊமையாப் போகல.இந்த "ம்" ல எவ்வளவோ அர்த்தம் இருக்கு.சத்திரியருக்கு இதுவும் தெரில.எதுக்கும் கலா வரட்டும்.சொல்லுவாங்க !//

    அப்படியா ஹேமா..?

    அப்ப கலாவே வந்து சொல்லட்டும்.

    ReplyDelete
  20. //எச்சில் பண்டமா ம்ம்ம்

    நடத்துங்க நண்பா

    விஜய்//

    நண்பா,

    நான் சொன்னது “அவள் இதழ்”களை. அவள் எத்தனைமுறை அதை எச்சில் படுத்தியிருப்பாள்...!

    ( விஜய், எதையாவது வில்லங்கமா யோசிச்சிடாதீங்க சாமீ)

    ReplyDelete
  21. ரொம்ப நல்லா இருக்கு..!

    வரிகள் அழகு..!

    ReplyDelete
  22. அண்ணா என் நூறாவது பதிவிது வந்து பாருங்க அண்ணா

    http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_3727.html

    ReplyDelete
  23. அழகான காட்சி.. மிக அழ்கான கவிதை.. கவிப்பிரியர்களுக்குக் கண்டிப்பாகப் பசியாறி இருக்கும்..

    ReplyDelete
  24. "...பெருந் தீ யின்
    முதல் பொறி .." ..
    "இருவது வருடப்
    பசியுடன் இருக்கிறேன்..."
    ஏக்கம் தரும் இனிய வரிகள்

    ReplyDelete
  25. அந்தப் படத்தை மட்டும் நான் எடுத்துக் கொள்ளவா தங்கள் அனுமதியுடன் சத்ரியன்?

    ReplyDelete
  26. //ரொம்ப நல்லா இருக்கு..!

    வரிகள் அழகு..!//

    நன்றிங்க குமார்.

    ReplyDelete
  27. //அழகான காட்சி.. மிக அழகான கவிதை.. கவிப்பிரியர்களுக்குக் கண்டிப்பாகப் பசியாறி இருக்கும்..//

    வணக்கம் ஆதிரா,

    ரசனைகளை மட்டும் பதிவாக்கி வருகிறேன். சிலருக்கு பிடிக்கும்.

    முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  28. "...பெருந் தீ யின்
    முதல் பொறி .." ..
    "இருவது வருடப்
    பசியுடன் இருக்கிறேன்..."
    ஏக்கம் தரும் இனிய வரிகள்..//

    வணக்கம் Dr.முருகானந்தம் சார்,

    உண்மையில் ஏக்க மிகுதிதான்.

    ReplyDelete
  29. //அந்தப் படத்தை மட்டும் நான் எடுத்துக் கொள்ளவா தங்கள் அனுமதியுடன் சத்ரியன்?//

    ஆதிரா,
    இந்தப் பெயரை முதல்முறையாகப் பார்க்கிறேன். அதனால், உங்கள் பெயர் விளக்கம் சொல்லி விட்டு அந்த படத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

    ( நானே அந்த படத்தை ‘கூகுள்’-இல் இருந்து தான் எடுத்தேன். குறிச்சொல் “கஜுரஹோ”)

    ReplyDelete
  30. விடுபட்ட அனைத்தையும் படித்தேன் சத்ரியா ..
    (இடைவிடாதா வேலை பளு ... தொடர்ந்து வர முடியவில்லை நண்பரே)
    அருகில் இருந்தால் உங்களை உச்சி முகர்வேன் நண்பா

    ReplyDelete
  31. சொல்ல மறந்து விட்டேன்.. ஆதிரை மணிமேகலை காப்பியக் கதைமாந்தர். கற்புக்கரசி. அதைச் சற்று மாற்றி ஆதிரா நான்.

    ReplyDelete
  32. அன்புள்ள சத்ரியன்,
    ஆதிராவின் பொருள் சூரியன்,நிலவு, ஆதிரை வின்மீன்(நட்சத்திரம்), தாய், அன்பு என்று பல உள்ளன.
    இப்போது படத்தை எடுத்துக் கொள்ளவா?

    இதைக் கூறியே ஆக வேண்டும். நான் அன்றே தங்கள் வலைப்பூவில் உள்ள ஒவ்வொரு பூவையும் படித்தேன். என்னுடைய வலைவேகம் சற்று குறைவாக இருந்தது. அதுவும் நல்லது. பொறுமையாக எல்லா பூவையும் பார்த்துக்கொண்டே வந்தேன். அத்தனையும் கொள்ளை அழகு.

    நீண்ட கருத்துரையை மிகப் பொறுமையாகத் தட்டச்சு செய்து பதிந்தால் அஞ்சல் அனுப்பவே முடியவில்லை.

    இதே கதை நேற்றும்.. தட்டச்சு செய்து கமெண்ட பகுதியே திறக்க முடியவில்லை. சரி இன்று மூன்றாவது முயற்சி..

    தள்ள ஒரு கவிதையும் இன்றி.. அத்தனையும் கொள்ள மனதில் இடமின்றி..
    அன்புடன்,
    ஆதிரா.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.