Jan 1, 2011

இது போதும்...



கிளை,
இலைக்காம்பு
இதற்கிடையில்
வெளி நீட்டும்
தளிரின் தாய்மையுடன்

உனதன்பு.....


நீரில்
விழுந்து 
நீண்டு நெளியும் 
நிலவின் ஒளியாய்


உனது காதல்...



மாம்பழக் கூடையை
நாளெல்லாம் சுற்றும்
ஈ போன்று
எனைச் சுற்றும் 
உனதிரு கண்கள்....

இது போதும் இன்றெனக்கு....!


25 comments:

  1. கவிதையுடன், அழகான படங்கள்!புத்தாண்டு அழகாக ஆரம்பம்!

    ReplyDelete
  2. அசத்தலான காதல் கவிதையோடு ஆரம்பிக்கிறீங்க சத்ரியன்

    வாழ்த்துக்கள்

    இந்த வருடம் மேலும் சிறப்பான கவிதைகளோடு உங்களை எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  3. புத்தாண்டின் ஆரம்பத்தில் தளிரும் அன்பு அருமை.

    புத்தாண்டு வாழ்த்துக்கள் சத்ரியன்.

    ReplyDelete
  4. பொருத்தமான படங்களுடன் இதமான வரிகள்.புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பா.

    ReplyDelete
  7. வரிகள் அழகு படத்திற்கேற்ப...

    ReplyDelete
  8. //மாம்பழக் கூடையை
    நாளெல்லாம் சுற்றும்
    ஈ போன்று
    எனைச் சுற்றும்
    உனதிரு கண்கள்//
    அருமையாக உவமைப் படுத்தி இருக்கிறீர்கள்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. இன்று மட்டும் போதுமா ?

    வாழ்நாள் முழுவதும் வேண்டாமா !!!!

    புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  10. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
    இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
    மகிழ்வான முத்தாண்டாய்
    மனங்களின் ஒத்தாண்டாய்
    வளங்களின் சத்தாண்டாய்
    வாய்மையில் சுத்தாண்டாய்
    மொத்தத்தில்
    வெத்தாண்டாய் இல்லாமல்
    வெற்றிக்கு வித்தாண்டாய்
    விளங்கட்டும் புத்தாண்டு.

    ReplyDelete
  11. கவிதையும் படமும் கலக்கல்.

    ReplyDelete
  12. கவிதை அழகு அண்ணா தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. இது போதும் இன்றெனக்கும்!

    (தமிழ் மணத்தில் ஓட்டு போட முடியல மாப்ள.. ஏன்னு தெரியல..அஞ்சா நெஞ்சன் இங்கிட்டு வந்துட்டு போனாரா?) :-)

    சரலின்பா நலம்தானே மாப்ள?

    ReplyDelete
  14. சத்ரியா...அழகாக ஆரம்பித்திருக்கிறது 2011.என்றும் தொடரட்டும் இதே காதல் !

    ReplyDelete
  15. அண்ணே அசத்தலான கவி வரிகள் ... .
    மிகவும் ரசித்து ரசித்து படித்தேன் .... //நீரில்
    விழுந்து
    நீண்டு நெளியும்
    நிலவின் ஒளியாய்


    உனது காதல்...//


    அற்புதம் அண்ணே .. அழகான உணர்வு ...

    ReplyDelete
  16. எல்லாம் மனசுல தாங்க இருக்கு இல்லை
    மனசுல தங்கி இருக்கு நண்பா..


    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. இது போதும் இன்றெனக்கு....!//

    அப்ப நாளைக்கு வேற தேடுவியா???

    ReplyDelete
  18. //இது போதும் இன்றெனக்கு....!//

    அட சும்மா வச்சிக்குங்க... என்னாப்பெருந்தன்மை.. க்க்கூம்..

    என்னமோ... புத்தாண்டு வாழ்த்துக்கள்..கொண்டாடுங்க..

    ReplyDelete
  19. மாம்பழக் கூடையை
    நாளெல்லாம் சுற்றும்
    ஈ போன்று
    எனைச் சுற்றும்
    உனதிரு கண்கள்//

    அட அருமை கோபால்..:))

    ReplyDelete
  20. \\\இது போதும் இன்றெனக்கு///.

    இன்னும் வேண்டும் எமக்கு.

    ReplyDelete
  21. naanpaa vaalthukkal

    ReplyDelete
  22. அண்ணா பொங்கலே வந்திருச்சு இன்னும் என்ன பண்றீங்க......

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  23. அழகாக இருக்கிறது கவிதை..


    ஒரு சின்ன கேள்வி

    பொதுவாக உனதன்பு என்பதை உச்சரிப்பில் பயன்படுத்தலாம். எழுத்தில் பயன்படுத்துவார்களா? ஏன் என்றால் "உனது" என்பதில் உள்ள உயிர்மெய் எழுத்தின் முடிவில் "அன்பு" என்ற உயிரெழுத்து இணையுமா? (தவறாக இருந்தால் மன்னிக்கவும்)

    ReplyDelete
  24. உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.