Sep 7, 2011

பாஞ்சாலி சபதம்
துச்சாதனன்-களுக்கு
வேலையில்லை.

கண்ணனோ
தேவையே இல்லை.

திரௌபதிகள்
திறந்தமேனியுடனே
திருவீதி உலா வருகிறார்கள்.

***

”வலைச்சரம்” - ஆசிரியர் அவதாரத்தில் சத்ரியன்:-45 comments:

 1. இப்பிடியே எழுதினா பொண்ணூங்களுக்கு எப்பிடி நூல் விடரது?

  --- itha naan sollalai

  oruthar chatla sonnar

  :P

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா ஹா எனாச்சுய்யா திடீர்னு....?

  ReplyDelete
 3. திரௌபதிகள்
  திறந்தமேனியுடனே
  திருவீதி உலா வருகிறார்கள்

  தற்போதைய நிலை இது
  ஆனால்..
  எதிர் வருநாளில் எது..?
  இரண்டாவது வரியின்
  முதல் எழுத்து(தகர இகரம் பகர
  இகரமாக)மாறினும் ஆச்சிரியப்பட
  இயலாது.
  நன்றி! சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 4. நச் என்று ஒரு கவிதை

  நாகரீகம் வளர்கிறது
  ஆடையின் அளவு குறைகிறது
  திரௌபதிகளின் மேனியில்

  நாளை ஐயா சொன்னதும் நடக்கலாம்
  மீண்டும் சொல்கிறேன் கவிதை நச்

  ReplyDelete
 5. துச்சாதனன்-களுக்கு
  வேலையில்லை.\\\\\\\\
  ஆமா நாங்க விபரமானவங்க
  வில்லனுங்களுகாக விவேகமுடன்
  நடந்துகுறோம்  கண்ணனோ
  தேவையே இல்லை.\\\\\
  அவர்களைய,இவர்கொடுக்க...
  இதெல்லாம் எதற்கென்றுதான்,
  இந்த வேலையில்லாத் திண்டாடத்தில்
  இவர்களுக்கெல்லாம் வேலை கொடுக்க
  முடியாதப்பா

  ReplyDelete
 6. வாங்க ஜமால் மாப்பி,

  உங்கள் ஆசிர்வாதம்.

  //இப்பிடியே எழுதினா பொண்ணூங்களுக்கு எப்பிடி நூல் விடறது?//

  யாருய்யா அந்த புண்ணியவான்?
  (சத்ரியன் தான் -னு சொல்லி சமாளிக்காதீங்க)

  ReplyDelete
 7. ஒன்னும் பெரிசா ஆயிடலீங்க நாஞ்சில்.

  சூப்பர் ஃபிகர் ஒன்னு. ஆடைய ரொம்ப கொறைச்சி போட்டுக்கிட்டு போச்சி.
  (ஒன்னு மட்டுந்தான் அப்படி போச்சான்னு எதிர் கேள்வி கேக்கப்பிடாது)

  ஒரு பதிவு தேத்தலாம்-னு!
  (வரலாறு முக்கியம் பாருங்க.)

  ReplyDelete
 8. //இரண்டாவது வரியின்
  முதல் எழுத்து(தகர இகரம் பகர
  இகரமாக)மாறினும் ஆச்சிரியப்பட
  இயலாது.//

  வணக்கம் புலவர் ஐயா,

  முதலில் “பகர இகர” எழுத்தை தான் எழுதினேன். பல சகோதரிகளும் வந்து படிக்கிறார்கள்.

  அவர்களுக்காக “தகர இகர” எழுத்தாக மாற்றி விட்டேன்.

  நன்றிங்க ஐயா.

  ReplyDelete
 9. அந்தக் கண்ணன் உலகையே
  தன் வாய்குள் காண்பித்தான்

  இந்தக் கண்ணன்
  மாகாபரதத்தையே வலைக்குள்
  அடக்க ......
  ம்ம்ம்.....நல்லசிந்தனைச் செதுக்கல்

  அந்தப்படத்துக்கு நீங்கள் சேலைகொடுக்கவில்லையா?
  பாதிகளைந்து விட்டிருக்கிறீர்களே!
  அப்படியென்றால்!நீங்கள் துச்சாதனனா?கண்ணணா?

  ReplyDelete
 10. வணக்கம் செய்தாலி,

  //நாகரீகம் வளர்கிறது
  ஆடையின் அளவு குறைகிறது.
  நாளை ஐயா சொன்னதும் நடக்கலாம் //

  மனித மூளை மீண்டும் கற்காலத்தை நோக்கிச் சிந்திக்கிறது.

  ReplyDelete
 11. வருகைக்கு நன்றிங்க தென்றல்.

  ReplyDelete
 12. //அவர்களைய,
  இவர்கொடுக்க...
  இதெல்லாம் எதற்கென்றுதான் //

  அருமை கலா.

  (இப்படிச் சொல்லியே ஆண்களை சோம்பேறியாக்கிடுங்க...)

  ReplyDelete
 13. //அந்தக் கண்ணன் உலகையே
  தன் வாய்குள் காண்பித்தான்

  இந்தக் கண்ணன்
  மாகாபரதத்தையே வலைக்குள்
  அடக்க ......
  ம்ம்ம்.....நல்லசிந்தனைச் செதுக்கல்//

  தாங்க் யூ கலா!

  //அந்தப்படத்துக்கு நீங்கள் சேலைகொடுக்கவில்லையா?
  பாதிகளைந்து விட்டிருக்கிறீர்களே!
  அப்படியென்றால்!நீங்கள் துச்சாதனனா?கண்ணணா?//

  இதென்னடா வம்பா போச்சி! இருந்ததையே கழட்டி விட்டுட்டு உக்காந்திருக்காக.

  நான் கண்ணனும் இல்ல, துச்சாதனும் இல்ல.

  ஜஸ்ட் பார்வையாளன்..!
  ஐ மீன் - ரசிக்கும் சீமான்.

  ReplyDelete
 14. சத்ரியன்.... முத்திரையோ...

  ReplyDelete
 15. பட்டய கெளப்பி ட்டீங்களே !

  ReplyDelete
 16. ஜஸ்ட் பார்வையாளன்..! \\\\

  ஆமா.. பாவையாள{ழ}ன்
  அதனால்தான் பா வை இந்தளவுக்கு
  அளந்து போட்டதோ!
  ஐ மீன் - ரசிக்கும் சீமான்\\\\\\\\
  சீ.. மான் தானே அதுபாட்டுக்கு
  போகட்டுமென்று எண்ணாமல்....
  மீன்,மான் எல்லாம் ரசித்துக்
  கண்உண்டால் அப்புறம் அந்தக்கண்ணு
  உறங்குமா?
  அப்புறம் நண்டூருது...நரிஊருது என்கிறது

  ReplyDelete
 17. உலா வருவதை விழாவாக கவிதையில் சொல்லி விலா எலும்பை நிமிர்த்தி கவிதை இன்னொரு முறை படிக்க வைத்து விட்டீர்கள்...

  ReplyDelete
 18. அட..அட... செம...

  நம்ம கண்ணுக்குதான் ஒண்ணும் தெரியல போலருக்கு...

  ReplyDelete
 19. இங்க புடியுங்கோ சகோ பூங்கொத்த.
  அருமையாச் சொன்னீங்க .இதுனாலதா
  நாட்டில மழை குறஞ்சுகொண்டே போகுது போல!...மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .என் ஆக்கங்கள் உங்கள் வரவுக்காய் காத்திருக்கின்றன.

  ReplyDelete
 20. நச் என்பது இதுதான்.

  ReplyDelete
 21. குறைந்த வரிகள் என்றாகும் சொல்லவந்த கருத்து இமாலாய அளவு.

  மனம் சுருங்கியது போல் ஆடையும் சுருங்கிவிட்டது .

  புலவர் சொன்னது போல் வந்தால் இன்னும் கொடுமை .

  ஆண்டவனிடம் சொல்லலாம் ஒரு அறிவை திரும்ப எடுத்துக்கொள் என்று

  ReplyDelete
 22. அட சத்ரியன்....

  சரியா தான் சொல்லி இருக்கீங்க....

  நாகரீகம் வளர வளர உடைகளின் அளவும் குறைய குறைய அப்புறம் பார்ப்போருக்கெல்லாம் விருந்தாகி துச்சாதனன் செய்ய வேண்டியதை இவங்களே செய்துவிடுவதால் கண்ணனுக்கும் வேலை கொடுப்பதில்லை...

  நச் நு அடிச்சிட்டீங்க போங்க....

  பெண்கள் உடுத்தும் உடையை வைத்து தான் அவர்கள் மேல் மரியாதை பெருகுவதும் குறைவதும்....

  பெண்கள் குறைவாக பேசி அதிகம் உடலை போர்த்தி நடந்தால் மஹாலக்‌ஷ்மி என்று கை எடுத்து கும்பிடத்தோன்றும்...

  அதுவே பெண்கள் அதிகமாக பேசி உடைகளை குறைக்கும்போது தோ பொண்ணு போறா பாருடா ஷோக்கா... அப்டின்னு கிண்டலும் வக்கிரமான வர்ணனையும் அதில் தான் தொடங்கும்....

  ஆண்கள் பெண்களை வக்கிரப்பார்வை பார்க்க பெண்களே இடம் கொடுக்கும் செயலை தான் மிக நாசுக்காக நீங்க கவிதை வரியில் நச்னு பதிச்சது....

  இன்றைய பெண்களின் உடை அலங்காரத்தை கண்டும் காணாம இருக்கமுடியாதபடி அவர்களின் இந்த ட்ரஸ் சென்சேஷன் எங்க கொண்டு போய் விடுமோ...

  பெண்கள் உடுத்தும் உடையை வைத்து தான் முகத்தை பார்த்து பேசமுடியுமா இல்லை உடலில் பார்வை ஓடுவதை தடுக்கமுடியுமா என்று தெரியும்...

  சத்ரியன் குட்டியூண்டு கவிதையில் சிந்திக்க வெச்சுட்டீங்க...

  ஏழு வரிகளில் சிறு துளியில் ஒரு நச் கவிதை.....

  அசத்தல் கவிதைக்கு அன்பு வாழ்த்துகள் சத்ரியன்....

  ReplyDelete
 23. வேதனையில் விளைந்த கவிதை
  என நினைக்கிறேன்
  எனினும் வித்தியாசமாக ரசிக்கும் படியாக உள்ளது
  (படத்தைச் சொல்லவில்லை)
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. வாங்க சூர்யஜீவா,

  நீங்க சொன்னா சரிதான்.

  ReplyDelete
 25. வாங்க சண்முகம் அண்ணே,

  அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்கண்ணே!

  ReplyDelete
 26. நன்றிங்க ரெவெரி.

  ReplyDelete
 27. //அட..அட... செம...

  நம்ம கண்ணுக்குதான் ஒண்ணும் தெரியல போலருக்கு..//

  பாலாசி,

  ரூமை விட்டு ரோடு பக்கம் வந்து நிக்கனும்....!

  ReplyDelete
 28. பூங்கொத்தை எடுத்துக்கிட்டேன் அம்பாள்.

  நன்றி.

  ReplyDelete
 29. //நச் என்பது இதுதான்..//

  ஜோதிஜியண்ணா,

  பெரியவங்கா சொன்னா சரியாத்தான் இருக்கும்!

  ReplyDelete
 30. வாங்க M.R. அண்ணே,

  முதல் வருகைக்கும், கருத்து பகிர்விற்கும் நன்றி.

  ReplyDelete
 31. வணக்கம் மஞ்சு,

  சின்னதா ஒரு கவிதையில அவ்வளவு விசயமா வெச்சிருக்கேன்...?

  பெண்ணான உங்களுக்கே அவ்வளவு ஆதங்கம் இருக்கே!

  ReplyDelete
 32. //வேதனையில் விளைந்த கவிதை
  என நினைக்கிறேன். எனினும் வித்தியாசமாக ரசிக்கும் படியாக உள்ளது
  (படத்தைச் சொல்லவில்லை)//

  வாங்க ரமணி ஐயா,

  அதுவும் உண்மை.

  படத்துக்கு என்ன குறைச்சல்?, கண் இருக்கு, ரசித்து விட்டு போவோம்.

  ReplyDelete
 33. துகிலுரியும் துச்சாதனர்களும்
  விழிவிரிய வியக்கும்
  கருவிழிமாதர் உடையழகை
  கட்டம் கட்டி அடக்கிவிட்டீர்கள்
  நண்பரே.
  என் தளம் வந்து வாழ்த்தி கருத்திட்டமைக்கு
  என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
  இன்றுமுதல் உங்களை பின்தொடரும்
  உள்ளங்களில் நானும் ஒருவன்.

  ReplyDelete
 34. ஹா...ஹா... துச்சாதனுக்கு வேலை இல்லையா? ரொம்ப ஓவருங்க...

  ReplyDelete
 35. சத்ரியன்,
  நச் என்று சொல்லி இருக்கின்றீர்கள்.

  ”தீதும் நன்றும் பிறர் தர வாரா”
  தாங்களே தங்களைத் துகில் உரிந்து கொள்ளும் (கொல்லும்) திரெளபதிகளாக வலம் வரும் நவ யுக யுவதிகள் பற்றி சரியாகச் சொன்னீர்கள். ஒரு வாசகம். இது திருவாசகம்
  மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 36. விசனப்பட ஏதுமில்லை. 'மஙகளகரம்','மஹாலக்ஷ்மி' ,'கண்ணண்', "துச்சாதானன்" போன்ற வசனங்கள் யாவும்‍, பெண்களை போகப் பொருளாகவும், ஆண்களுக்கு ஒரு படி கீழ் நிரந்தரமாக வைத்திருக்க செய்யும் சாகஙகள். கோயில் சிற்பஙளை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதில் இல்லாததா? வருங்காலத்தில் இவற்றை எதார்த்தமாக எடுத்துக் கொள்ள பழகி விடுவார்கள். இதற்கு பல மேற்கத்திய நாடுகளே உதாரணம்.

  ReplyDelete
 37. வணக்கம்,

  முதல் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றிங்க மகேந்திரன்.

  தொடர்ந்தும் வந்து தங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

  ReplyDelete
 38. வாங்க பிரகாஷ்,

  உண்மைய தானேங்க சொன்னேன்!

  ReplyDelete
 39. வாங்க ஆதிரா,

  சொல்லனும்னு தோனுச்சி, எழுதிட்டேன்.

  (என்னமோ போங்க, உங்களோட உரிமைகள வேண்டி ஆண்கள் தான் கவலைப் படறாங்க)

  ReplyDelete
 40. வாங்க பலராமன் அண்ணே.

  வணக்கம் தங்களோட முதல் வருகைக்கும், மேலான கருத்து பகிர்விற்கும் நன்றிங்க.

  எதற்கெடுத்தாலும் மேலை நாடுகளை மேற்கோள் காட்டும் நம் மனோபாவம் மாற வேண்டும்ணே.

  நம்மைப் பார்த்து மேலை நாடுகள் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கண்ணே.

  1).முப்பதாண்டுகளுக்கு முன்பே பெண்ணுக்கான முழு சுதந்திரத்தை முன்னெடுத்து விட்டோம்.

  பெண்களுக்கு சுதந்திரம், விடுதலை, சமஉரிமைகள் என பீற்றிக் கொண்ட அவர்களால், ஏன் இன்றுவரை ஒரு பெண்ணின் தலைமையில் நாட்டை ஒப்படைக்க மனம் வரவில்லை?

  ஒருவேளை மேலை நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு நாட்டை ஆளும் திறமை இருக்காதோ?

  பெண்கள் உடைகளைக் கலைந்து விட்டு அலைவதில் தான் அவர்களின் உரிமைகள் நிலை நாட்டப்படும், சுதந்திரம் பேணப்படும்,விடுதலை கிடைக்கும்... எனில் உள்ளாடை கூட அணியாமல் தாராளமாக உலா வரட்டும்.!

  கல்லூரி விரிவுரையாளர் திருமதி.ஆதிரா அவர்களின் வலைப்பக்கத்திற்குச் சென்று இந்த (http://tamilnimidangal.blogspot.com/2011/08/blog-post_14.html) இணைப்பில் உள்ள விவரங்களைப் படியுங்கள்.

  ReplyDelete
 41. //
  திரௌபதிகள்
  திறந்தமேனியுடனே
  திருவீதி உலா வருகிறார்கள்./

  அருமையான வரிகள்

  ReplyDelete
 42. (என்னமோ போங்க, உங்களோட உரிமைகள வேண்டி ஆண்கள் தான் கவலைப் படறாங்க)

  உரிமைகள் கெடக்குது. அதை சரியா பயன்படுத்த தெரிய வேண்டாமா சத்ரியன்?

  சித்திரமாக காட்சி அளிக்கவேண்டிய பெண்கள் பாக்கரவங்க எல்லாரையும் இப்படி சித்திர வதை செய்வது!!!!

  சரி அதனாலும் ஒரு பயன் உண்டு. பல கவிதைகள் தமிழுக்குக் கிடைக்கின்றன.

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.