Sep 2, 2011

’தோச’ பக்தி


செவ்வாய் தோசமுள்ளவன்
செவ்வாய் தோசமுள்ள
பெண்ணை தான்
மணமுடிக்க வேண்டுமாமே!

ஜோதிடவாதிகளே,

காதல் தோசமுள்ள
பெண்னொருத்தியைக்
கண்டு சொல்லுங்களேன்.
எனக்கு!

***

இறைவனை
இரைஞ்சும் கவிதைகளால்
உலகக் கவிஞனாகி விட்டான்
உமர்கயாம்.

உன்னை
இரைஞ்சும் கவிதைகள் எழுதும்
என்னை
என்ன செய்வாய்
காதலே!
28 comments:

 1. //காதல் தோசமுள்ள//

  தோசம் என்றால் ஆகாது / கெடுதல் என்ற பொருளில் தான் சொல்லுவார்கள்.

  ReplyDelete
 2. //காதல் தோசமுள்ள
  பெண்னொருத்தியைக்
  கண்டு சொல்லுங்களேன்.
  எனக்கு!//

  இருங்க அண்ணிக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்.

  ReplyDelete
 3. நான் ஜோதிடத்தையும் நம்புவதில்லை ஜோதிடம் பார்ப்பவரையும் நம்புவதில்லை. நாடு எவ்வளவோ வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கிறது, இந்த வேளையில் எங்கள் ஊர் ஜோதிடர் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் உங்க பையனை ஐடிஐ(ITI) படிக்க வையுங்கள் A1 ஆக வருவான்னு சொல்லிகிட்டு இருக்கார். என்னத்த சொல்ல.

  ReplyDelete
 4. ////காதல் தோசமுள்ள//

  தோசம் என்றால் ஆகாது / கெடுதல் என்ற பொருளில் தான் சொல்லுவார்கள்.//

  கோவி.க. அண்ணே,

  ஆகவிடாம பண்றீங்களே அண்ணே!

  ReplyDelete
 5. ////காதல் தோசமுள்ள
  பெண்னொருத்தியைக்
  கண்டு சொல்லுங்களேன்.
  எனக்கு!//

  இருங்க அண்ணிக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்.//

  காந்தி,

  அங்கே பெண் கேட்பவர் கவிஞர்.

  என்னை ஏம்ப்பா வம்புல மாட்டிவிடப் பாக்கறீங்க?

  ReplyDelete
 6. //எங்கள் ஊர் ஜோதிடர் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் உங்க பையனை ஐடிஐ(ITI) படிக்க வையுங்கள் A1 ஆக வருவான்னு சொல்லிகிட்டு இருக்கார். என்னத்த சொல்ல.//

  ஒருவேளை ஐடி (IT)-யைச் சொன்னாரோ என்னவோ!

  நான் மட்டும் என்னத்தைச் சொல்ல?

  ReplyDelete
 7. யூத்துங்கெல்லாம் அப்பிடித்தான் , விடு........ங்ங்ங்ங்க மாணவண்.

  ReplyDelete
 8. யூத்/கவிஞர் அப்படின்னு தப்பிக்க பாக்குறீங்க...இன்னும் கலான்னு ஒருத்தர் உங்கள காச்ச வருவாங்களே வரலியா?
  அனுபவிங்க!!!

  ReplyDelete
 9. காதல் திருமணத்துக்கு ஜோதிடம் பார்க்கத்தேவையில்லை என்கிறது சாஸ்திரம்.உங்கள் வரிகள் நன்று

  ReplyDelete
 10. இன்றய தேசபக்தி தான்
  தமிழனுக்கு
  தோசபக்தி யாக உள்ளது

  அதனால்தான் செங்கொடி
  எரிந்து போனாள் நண்பரே!
  கருத்தும் கவிதையும்
  நன்று!
  தொலைபேசி எண்
  கொடுத்திருந்தேனே பார்த்தீரா..

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. 100 சதவிகிதம் செவ்வாய் தோஷம் என்றால் நெகடிவ் ப்ளட் குருப்பாக இருக்கும். ஆனால் அடிப்படை தெரியாத ஜோதிடர்களால் ஜோதிடம் பொய்த்து போகிறது நண்பா.

  காதல் தோசை sorry தோஷமுள்ள பொண்ணு வேணுமா ?

  விஜய்

  ReplyDelete
 12. காதல் கவிதை... கலக்கலாய்...

  ReplyDelete
 13. செவ்வாய் தோஷத்தை ஜாதகம் சொல்வதுபோல்
  காதல் தோஷத்தை கவிதை மிக அழகாகச் சொல்லிப்போகிறது
  இரண்டு கவிதைகளிலும் மிக அழகாக
  ரசிக்கத்தக்க கேள்வியை எழுப்பிப் போகிறீர்கள் மனம் கவர்ந்த படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. இருங்க அண்ணிக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்.//

  காந்தி,

  அங்கே பெண் கேட்பவர் கவிஞர்.

  என்னை ஏம்ப்பா வம்புல மாட்டிவிடப் பாக்கறீங்க?
  //

  அந்த கவிஞர் தாங்கள் தானே அண்ணே .. எப்புடி

  ReplyDelete
 15. இரண்டுமே கலக்கல் ...
  ஏதோ சிங்கைல நடக்குது ..
  மர்மமா இருக்குது ..

  ReplyDelete
 16. காதல் தோசமுள்ள
  பெண்னொருத்தியைக்
  கண்டு சொல்லுங்களேன்.
  எனக்கு!\\\\\\\\\\
  அடா..சாமி....
  இன்னொன்று கட்டிக நான் தயார்
  யாராவது காதலில் தோற்றவர்கள்
  என்னுடன் தொடர்புகொள்ளலாம்
  என்னும் விளம்பரத்தை{காசு,பணம்}இல்லாமல்
  ஐயா எவ்வளவு
  புத்திசாலித்தனமாக்க கேட்கிறார்!
  நானும்,ஹேமாவும் நல்ல,வல்ல...
  ஜாதகத்துடன்தான் இருக்கின்றோம் ஆதலால்....
  இந்த ஜம்பம் எல்லாம் பலிக்காது காதல்இளவரசரே!

  ReplyDelete
 17. யோவ்...என்ன விளையாட்டா!!!.. கவிதை எழுதச் சொன்னா!!!... பார்த்துப்பூ....

  ReplyDelete
 18. உன்னை
  இரைஞ்சும் கவிதைகள் எழுதும்
  என்னை
  என்ன செய்வாய்
  காதலே!\\\\\\
  தூணிலும் இருப்பாய்,துரும்பிலும் இருப்பாய்...
  என்பதுபோல்..
  உங்கள் கண் பார்ப்பதெல்லாம் காதலென்று
  கவிதை வந்தால்!பாவம் காதல் ரொம்ப அவஸ்தைப்படுகிறது
  உங்களிடம் மாட்டிக்கொண்டு

  காதலிடம்போய்..
  செய் வாய் என்றால்!
  யோவ்....என்ன நினைச்சுகிட்டு இப்படியெல்லாம்
  கேட்கிறாய்...தொலைச்சுப்போடுவன் என்று..
  எதையாவது கையில தூக்கல்லையா?ராசா!

  இரைஞ்சி,இரைஞ்சி நீங்க்கேட்க...
  அது
  இரைந்து,இரைந்து கத்துவதால்,!
  பக்கத்துவீட்டுக்காரங்க உங்களைத்
  துரத்தாமல் இருந்தால் சரிதான்!!

  கவனம் காதல்காதலென்று மனம்
  திரைந்து,திரைந்து போகாமல்
  {அப்புறம் மத்துத்தேடி.அலைந்து
  அதெல்லாம் ரொம்பத்தொல்லை}
  அன்{பு} பால் மாதிரியே இருக்கட்டும்!

  ReplyDelete
 19. நல்ல எள்ளல் சுவை கூடிய கவிதை

  அருமை கவிஞரே.

  ReplyDelete
 20. தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

  http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

  நன்றி.

  ReplyDelete
 21. மாப்ள கலக்கல் கவிதை!

  ReplyDelete
 22. உங்கள் வலைத்தளத்துக்கு முதல்முறை வருகிறேன்!!

  கவிதை நல்லா எழுதுறிங்க பாஸ்!!

  ReplyDelete
 23. காதலித்து பார்
  செவ்வாய் தொஷமாவது
  வெங்காய தொசயாவது...

  முதல் வரி உபயம் வைரமுத்து

  ReplyDelete
 24. உன்னை
  இரைஞ்சும் கவிதைகள் எழுதும்
  என்னை
  என்ன செய்வாய்
  காதலே!

  ஒன்றுமே செய்யமுடியாது சகோ
  வேணுமென்றால் ஒருகட்டி ஐஸ்
  தலையில் வைக்கலாம். அதை
  நீங்கள் என் தளத்திற்கு விரைந்து
  சென்றால் பெற்றுக்கொள்ளலாம் .
  அங்கு என்னை ஆட்டிப் படைக்கும்
  குட்டிச் சாத்தான் வந்துள்ளது பாருங்களேன் .
  நன்றி சகோ பகிர்வுக்கு ....

  ReplyDelete
 25. //காதல் தோசமுள்ள
  பெண்னொருத்தியைக்
  கண்டு சொல்லுங்களேன்.
  எனக்கு!//

  புது அப்ளிகேஷன். நல்லா இருக்கு சத்ரியன். ஆனா....

  ReplyDelete
 26. அருமையான தோசக் கவிதை. நல்ல சிந்தனை வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 27. அருமையான தோசக் கவிதை. நல்ல சிந்தனை வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.