Sep 22, 2011

இல்லாளின் பிறந்தநாள்!
எனக்கே
எனக்கென
பிறப்பெடுத்த
பெருமகளே!

சூரியனால் நிலா
ஒளி பெறுவது
விஞ்ஞானம்!
நிலவே உன்னால்
ஒளி பெறும்
சூரியன் நான்.

இது
எஞ்ஞானம்
எனத் தெரியவில்லை.

உன்னை
மகளாய் பெற்றதில் - உன்
பெற்றோருக்குப் பெருமை.
மருமகளாய் பெற்றதில் - என்
பெற்றோருக்கு பெரும்பெருமை!

மனைவியாய் பெற்றதில்
எனக்கு பேருவகை!

இன்று
பிறந்த நாள் காணும்
இல்லாளும் என்
காதலியே

பூரணச்சுகங்களுடன் வாழ
உன்னவனின்
உள்ளத்து வாழ்த்துக்கள்!

26 comments:

 1. உங்கள் மனவிழிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)

  ReplyDelete
 2. விழியின் கனவுகளோடு வெகு நாட்கள் வாழ்ந்திட வாழ்த்துக்கிறோம்..

  ReplyDelete
 3. உங்கள் துணையாளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வாழியப் பெண்மகளே!
  வாகையாய் எனதருமை
  நண்பரின் கரம்பிடித்த
  பார்வென்ற காரிகையே!!
  பல்லாண்டு வாழியவே!!

  ReplyDelete
 5. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. அழகிய கவிதை. தங்களின் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. சூரியனால் நிலா
  ஒளி பெறுவது
  விஞ்ஞானம்!
  நிலவே உன்னால்
  ஒளி பெறும்
  சூரியன் நான்.//


  நெஞ்சை தொட்டவரிகள்.....!!!

  ReplyDelete
 8. உம்முடைய கவிதை போல அவர்கள் வாழ வாழ்த்துகிறேன்....

  ReplyDelete
 9. தமிழ்மணம் ஏழு டண்டணக்கா குத்தியாச்சு...

  ReplyDelete
 10. வணக்கம் அண்ணே ..
  மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணே

  ReplyDelete
 11. இன்றுபோல் என்றும் இன்பமுற்று வாழ
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  த.ம 8

  ReplyDelete
 12. அன்பு மகனே! உன் இல்லாளுக்கு,
  என் மருமகளுக்கு பிறந்த நாள்
  மனம் கனிந்த வாழ்த்துக்கள்

  இல்லாள் அகத்திருக்க
  இல்லா தொன்றில்லை
  வாழ்க வளமுடன்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  மருமகள் சாரலின்பா என்ன செய்கிறாள்

  ReplyDelete
 14. இன்று
  பிறந்த நாள் காணும்
  இல்லாளும் என்
  காதலியே//இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. இதை விட வேறென்னவேண்டும்....

  போதும் என்று சொல்லமுடியாத ஒரே விஷயம் கணவனின் அன்பு....

  வேண்டும் வேண்டும் திகட்டாத தித்திப்பு கணவனின் அன்பு....

  நகைக்கு ஆசைப்படவில்லை, பொருளுக்கும் ஆசைப்படவில்லை...

  ஆனால் வாங்கி தலையில் சூடும் ஒரு முழம் மல்லிகைப்பூ கணவனின் கையால் மட்டுமே என மனம் ஏங்கும்....

  மல்லிகைப்பூவுக்காகவா இத்தனையும்??
  கண்டிப்பா இல்லை அந்த மல்லிப்பூ மட்டுமே சாட்சி....கணவனின் மனம் முழுக்க அன்பு மனைவி மட்டுமே நிறைந்திருக்கிறாள் என்று சொல்ல இந்த மல்லிகைப்பூ தான் சாட்சி....

  இப்படி மனைவியை பெருமையாக வரிகளால் உயர்வு படுத்திய சத்ரியனை நான் வியக்கிறேன்...

  அதிர்ஷ்டசாலி தங்கை....
  நல்ல மனதுடன் உயர்ந்த சிந்தனையுடன் மனைவிக்கும் உயர்ந்த அந்தஸ்தை கொடுத்து இருவரும் ஒன்றே என்று சொல்லவைத்து நீ பெரிதா நான் பெரிதா இல்லை வாழ்க்கை இருவரும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்ற உண்மையை உணரவைத்த அழகிய வரிகள்....

  இதே அன்புடன் இறையின் கருணையுடன் மூத்தோர் ஆசியுடன் நல்ல சிந்தனையுடன் என்றும் வாழ்வாங்கு இன்புற்று நலமுடன் நீண்ட ஆயுளுடன் தேக ஆரோக்கியத்துடன் சௌக்கியமாக வாழ அன்பு பிறந்தநாள் நல் வாழ்த்துகள் திருமதி சத்ரியனுக்கு...

  வரிகளில் அன்பை ஒருசேர படைத்தவிதத்தில் தெரிகிறது...
  அன்பான இணையால் மட்டுமே இது சாத்தியம் என்று.. அன்பு வாழ்த்துகள்.. என்றும் இதே அன்புடன் இருவரும் ஒற்றுமையுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்..

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. மனம் நிறைந்த அன்பு கணவனிடம் இருந்து கிடைந்தால்லு அப்பெண்ணுக்கு என்றுமே பிறந்தநாள்த்தான். உங்கள் மனைவி நாள்தோறும் உங்கள் அன்பில் மூழ்கி ஆனந்தங் காண இன்றைய நாளில் மனதார வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 18. உங்கள் இல்லாள் என்றும் வாட்டம் இல்லாளாய், என்றென்றும் மகிழ்வுடனும் மனநிறைவுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 19. என்னங்க!பிறந்தநாளுக்கு பரிசுப்பொருள் வாங்கிக்கொடுப்பதர்க்கு பதில் இப்படி ஒரு பதிவைப்போட்டு செலவில்லாமல் முடிச்சிட்டிங்களா?
  ஐ!மாட்னிங்களா?ஹிஹி!சும்மா!!!

  தங்கத்தமிழில் ஒரு கவிதையை விடவா சிறப்பு தங்கத்திற்கு.
  பைந்தமிழில் ஒரு பாராட்டை விடவா சிறந்தது பட்டுப்புடவை!
  எனது வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 20. கவிதையில் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 21. நல்ல கவிதையில் கொண்டாடியிருக்கிறீர்கள்,சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. சகோதரிக்கு!

  காதலின் கண்ணணை,
  கண்ணணை செய்யும் ராதைப்
  பெண்ணிணை.....
  எண்ணிக்கை இல்லாமல்
  வாழ்வும் வளமும் சேர்ந்து
  சாரலுடன்.... இன் பா வடித்த
  மன்னனுடனும்....
  வாழ்க!வாழ்க!! என்றும்.

  ReplyDelete
 23. இனிய பிறந்த நாள் காணும் தோழிக்கு எனதன்பினையும் வாழ்த்தினையும் தெரிவித்து விடுங்கள்.அழகான கவிதை வாழ்த்து உங்கள் மனையாளுக்கு அளித்து பெருமை கொண்டீர்!

  ReplyDelete
 24. வணக்கம்.

  வந்திருந்து வாழ்த்துக்களை வழங்கி ஆசீர்வதித்த அன்பு உறவுகளுக்கு எங்கள் குடும்பத்தினர்களின் மனமார்ந்த நன்றி.

  குறிப்பு: வழக்கமாக அனைவருக்கும் தனித்தனியே நன்றி சொல்வேன். இப்பொழுது இரண்டு நாட்களாக அலுவலகத்தில் “ஆணியை” அதிகப்படுத்தி விட்டார்கள். அதுதான்!

  ReplyDelete
 25. அன்பிச் சகோதரிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. உங்கள் துணைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.