Oct 30, 2011

மரணம்



மரணம்
உயிரின்
இடப்பெயர்வு.

அப்பா மரணித்தபோதும்
தம்பி மரணித்தபோதும்

இருமுறை
நானும்
மரணித்திருக்கிறேன்.

நீங்களும் கூட
அதை அனுபவித்திருக்கக் கூடும்.
உயிருக்கு நெருக்கமானவரின்
மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!


மரணம்
உயிர் கொண்டாடும்
திருவிழா.

இல்லையென்றால்
எல்லா உயிர்களும்
மரணத்தை விரும்பும் மர்மம்
என்னவாக இருக்க முடியும்?



42 comments:

  1. அண்ணே, மரணம் கூட விரும்புமா மரணத்தை?

    ReplyDelete
  2. அப்பா மரணித்தபோதும்
    தம்பி மரணித்தபோதும்

    இருமுறை
    நானும்
    மரணித்திருக்கிறேன்.//

    ஓ கண்களில் கண்ணீர், நானும் பலமுறை மரணத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. அருமை என்ற ஒற்றை இலக்க வார்த்தை தவிர, மற்றவை மரணித்து விட்டன உங்கள் கவி வரிகளில்

    ReplyDelete
  4. வரிகள்
    சற்றென்று நனைத்தது
    விழிகளை


    உண்மைதான் கவிஞரே
    நானும் உணர்ந்திருக்கிறேன்

    ReplyDelete
  5. கனத்த வரிகள்!

    பல முறை மரணிக்கிறோம் ஒரு முறை மரணிக்க!

    ReplyDelete
  6. //மரணம்
    உயிர் கொண்டாடும்
    திருவிழா.//

    வித்யாசமான சிந்தனை.
    சில சமயம் எனக்கு கூட தோன்றும், நாம் எல்லோருமோ மரணத்தை நோக்கித்தான் பயணப்படுகிறோம் என்று.

    அருமையான கவிதை.

    ReplyDelete
  7. //நீங்களும் கூட
    அதை அனுபவித்திருக்கக் கூடும்.
    உயிருக்கு நெருக்கமானவரின்
    மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!//

    உண்மை...மரணத்தை நோக்கிச்செல்லுகிற வாழ்க்கையில் பலமுறை மரணிக்கிறோம்.

    ReplyDelete
  8. எதிர்பார்ப்புடன் வந்தேன். தெளிவாயிருக்கு.

    ReplyDelete
  9. ஆனால் எந்த மரணமும் எந்த மனிதர்களின் குணாதிசியங்களையும் மாற்றுவதில்லையே? அதைப் பற்றி எழுதுங்க.

    ReplyDelete
  10. மரணம் எல்லோருக்கும் வருமென்றாலும் பிரியமானவர்களின் பிரிவு நம்மையும் வாழும் போதே மரணிக்க செய்கிறது!!!

    ReplyDelete
  11. உயிருக்கு நெருக்கமானவரின்
    மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!//

    கண்டிப்பாக சத்ரியன்

    ReplyDelete
  12. ஆழச் சிந்தித்த கவிதை வரிகள்.தவிர்க்கவே முடியாத ஒன்று !

    ReplyDelete
  13. ஜனனத்தில் இருந்து
    ஒரு நீண்ட பயணம்
    மரணத்தை நோக்கி ....

    ReplyDelete
  14. அது புரியாமல்தானே
    இத்தனை துன்பங்களும் போராட்டங்களும்
    அருமையான அசத்தலான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 4

    ReplyDelete
  15. //நீங்களும் கூட
    அதை அனுபவித்திருக்கக் கூடும்.
    உயிருக்கு நெருக்கமானவரின்
    மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!//

    உண்மை.

    ReplyDelete
  16. என் தந்தையின் மரணம் 5 வருடம் ஆகியும்
    அந்த மரணத்தின் வாசனை என்னை விட்டு
    இன்றும் அகலவில்லை.

    ReplyDelete
  17. //நீங்களும் கூட
    அதை அனுபவித்திருக்கக் கூடும்.
    உயிருக்கு நெருக்கமானவரின்
    மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!//

    உண்மை தான் சத்ரியன் நீங்க சொன்ன மாதிரி எல்லாரும் மரணத்தை அனுபவித்தவர்கள் தான ஆவோம்..

    //மரணம்
    உயிர் கொண்டாடும்
    திருவிழா.// தத்துவமா ஒரு வரி எக்சிலண்ட்..

    ReplyDelete
  18. ////மரணம்
    உயிரின்
    இடப்பெயர்வு./////

    என்ன ஓரு அழகான வரி.....அற்புதமான கவிதை

    ReplyDelete
  19. நானும் மரணித்திருக்கிறேன் பல முறை.
    உயிரின் இடப்பெயர்வு மரணம்
    அருமை நண்பா .

    ReplyDelete
  20. //மரணம்
    உயிர் கொண்டாடும்
    திருவிழா.//

    மரணத்தைப்பற்றி இப்படிகூட சொல்ல முடியுமா?

    ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்கண்ணே அருமை....

    உங்கள் வரிகளை படிக்கும்போது தத்துவஞானி சாக்ரடீஸ் சொன்ன....

    "மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை, அது என்னவென்று உனக்கு தெரியாது அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை”

    இந்த வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.

    ReplyDelete
  21. இல்லையென்றால்
    எல்லா உயிர்களும்
    மரணத்தை விரும்பும் மர்மம்
    என்னவாக இருக்க முடியும்?// அட என்னவொரு தேர்ந்த வரிகள்., அசத்தல் நண்பா..

    ReplyDelete
  22. ஏன் இப்படி பீதியை கிளப்புகிறீர்கள் மாப்பு!

    ReplyDelete
  23. ஆழ்மன உயிர்த்தேடல் அருமை..

    ReplyDelete
  24. பிறப்பும், இறப்பும்..
    விழிப்பதும், தூங்குவதும் போல இயல்பானது என்பர் வள்ளுவர்..

    பிறப்பைப் போல இறப்புக்கும் மதிப்பு உண்டு..

    அதனை அழகாகச் சொன்னீர்கள் கவிஞரே..

    ReplyDelete
  25. உயிரின் இடப்பெர்யர்வு ...
    நம்மை நசுக்கி கசக்கும் பெரும்துயரம் ..
    நல்ல வரிகளில் இயல்பான கவிதைக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் அண்ணே

    ReplyDelete
  26. இதோ இந்த உயிரின் கதறலையும் கேளுங்க
    நண்பா...

    http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post_21.html

    ReplyDelete
  27. >>நீங்களும் கூட
    அதை அனுபவித்திருக்கக் கூடும்.
    உயிருக்கு நெருக்கமானவரின்
    மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!

    குட் ஒன்

    ReplyDelete
  28. எல்லா உயிர்களும்
    மரணத்தை விரும்பும் மர்மம்
    என்னவாக இருக்க முடியும்?\\\\\\\\\\

    அநியாயம்,அட்டூழியம்,கொலைவெறி,இனவெறி
    நடக்கும் நாடுகளில்,,,...
    விரும்பாமலே உயிர்களெல்லாம் மடியவைக்கப்பட்டன,
    படுகின்றன பூக்களும்,பிஞ்சுகளும்.

    பல,பல,பல...முறைகள் உயிர் போயும்.....
    வாழ்ந்துகொண்டிருக்கும், அந்தப்பறவைபோல் நானும்...

    தென்றலில் பின்னோட்டமும் வாழ்க்கைமுறையில்
    அடங்கும் சிலருக்கு...

    ReplyDelete
  29. மனம் தொட்ட வரிகள்

    த.ம 11

    ReplyDelete
  30. மரணம் சிலருக்கு மகா ரணம்.. அன்பு.
    சிலருக்கு மாந்தோரணம்..( பிடிக்காதவருக்கு) ஆத்திரம்.

    மொத்தத்தில் மரணம் உடலுக்கு ஆத்மாவுக்கு?

    ReplyDelete
  31. மரணம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடும் மாக்கள்... அன்பானவர்களின் பிரிவால் மனம் அடிக்கடி மரணிக்கிறது வலியுடன்.

    ReplyDelete
  32. ம ரணம் சோகம்தான் இன்னிக்கு நினைவு நாளா கோபால்..

    ReplyDelete
  33. நல்ல தத்துவங்கள்.

    ReplyDelete
  34. 'மரணம்
    தனியே வந்தால் அழகு
    மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
    சுத்தமாய் மரியாதையில்லை'

    வைரமுத்துவின் வரிகள் இவை. மரணம் தனியே வந்தாலும் படையாய் வந்தாலும் இழப்பின் பாரமென்னவோ என்றும் இருப்பவர்களுக்குத்தான். மனம் கொண்ட ரணம் அறிந்து நெகிழ்ந்தேன் இக்கவிதை மூலம்.

    ReplyDelete
  35. மரணம்
    உயிர் கொண்டாடும்
    திருவிழா.

    இல்லையென்றால்
    எல்லா உயிர்களும்
    மரணத்தை விரும்பும் மர்மம்
    என்னவாக இருக்க முடியும்?

    அடடா இதனால்த்தான் சந்தோசமான இந்த விசயத்தைவிரும்பிக் கேட்பவர்க்கு இறைவன் கொடுக்க மறுக்கின்றாரோ!...
    (அட எனக்குத்தான் சகோ ஹி...ஹி ..ஹ...)அருமையான
    சிந்தனை ஊற்று .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

    ReplyDelete
  36. மரணம்
    உயிர் கொண்டாடும்
    திருவிழா.


    கனமான பகிர்வு..

    ReplyDelete
  37. அப்பாவின் மரணத்தின்போது நானும் மரணித்திருக்கிறேன்

    ReplyDelete
  38. //மாற்றத்தை ஏற்காவிட்டால்
    மடையர்களாகிடுவோம்.
    ஆகையால்
    அனைத்தையும் பொத்திக்கொண்டு
    அறிவாளிகளாவோம்.!

    //

    நக்கல் சார் உங்களுக்கு

    ReplyDelete
  39. கவிதையிலே கலாய்க்கிரிங்க

    ReplyDelete
  40. ''..மரணம்
    உயிரின்
    இடப்பெயர்வு.''
    நானும் 4 தடவை மரணித்துள்ளேன்.
    ஒவ்வொருவர் கவிதையிலும் நாம் எத்தனையைப் படிக்கிறோம்.
    வாழ்த்துகள்
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.