Jan 4, 2012

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -03




முற்றா இளம்புல்
அவளது எழுத்துக்கள்.

மீண்டும் மீண்டும்
தூண்டுகிறது படிக்கும் ஆவலை.

அடங்கா பசி கொண்ட கிழப்பசு
முற்றா இளம்புல்லை சப்பி மேயும் 
காட்சியைக் குறிக்கும்
குறுந்தொகைப் பாடலொன்று
நினைவில் நிழலாடுகிறது.

ம்ம்!
என்னாவாயிருக்கும்...?


21 comments:

  1. சப்பி மேயும்-வார்த்தைப்பிரயோகம் கவர்கிறது.

    ReplyDelete
  2. எனக்கோ
    படிக்கப் படிக்க
    பசியடங்குவதாய் தெரியவில்லை.
    ம்ம்..

    ஈரோட்டு சூரியன்

    ReplyDelete
  3. //ம்ம்!
    என்னாவாயிருக்கும்...?//

    என்னாவாயிருக்குமா பல்செட் கட்ட வேண்டி இருக்கும் உமக்கும்...வர வர இந்த பக்கம் வரவே பயமா இருக்கு சாமி...

    ReplyDelete
  4. சப்பி சாப்பிடுதா ஏன் அதுக்கு பல் இல்லையாக்கும், யோவ் என்ன கவிதை ஒரு மாதிரியா போயிட்டு இருக்கு, சீக்கிரமா வீடு போயி புல்லை மேயுங்க...

    ReplyDelete
  5. //ம்ம்!
    என்னாவாயிருக்கும்...?//

    ம்..ம்...இங்கும் விடுகதையா? எனக்கு நேரமில்லையப்பா இதற்கு மெனக்கெட...வாழ்த்துகள் சத்ரியன்...
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  6. மிகவும் நேர்த்தியான வினா கேட்டு இருக்கிறீர்கள் தமிழர்களின் ஒட்டு மொத்த சிறந்த வாழ்வுக்கும் தீர்வளிக்கும் இந்த விதமான விடுகதைகள் உண்மையில் தேவை போற்றுதல்கள் சிறப்புகள் ....

    ReplyDelete
  7. முற்றா இளம்புல்
    அவள் எழுத்துக்கள்

    அருமை அருமை

    ReplyDelete
  8. சத்ரியன் தம்பி... அந்தக் குறுந்தொகைப் பாடல் எது? சொன்னீங்கன்னா... புண்ணியமாப் போவும். நான் ரசித்த வரிகள் மேலே சசிகலா மேடம் சொல்லியிருப்பவைதான். நன்று.

    ReplyDelete
  9. அந்தக் குறுந்தொகையையும் நினைவுபடுத்தி சீக்கிரமே பதிவாக்கிடுங்க கண்ணழகரே.இல்லன்னா தமிழ் பல்செட் பதிவுத்தபால்ல அனுப்பிடுவாங்க !

    பாவம் நீங்க.கவிதை எழுதிட்டு வாங்கிக்கட்டுறதும் ஒரு கவிதையா இருக்கு !

    ReplyDelete
  10. வர வர இந்த அண்ணனின் கவிதைகள் உள்ளத்தை உருக்குது ...
    ஆனா எனக்குத்தான் புரியல ...
    எம்மாடி எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு ...

    ReplyDelete
  11. கவிஞரே...

    இதுதானே அது..

    love love,
    they say.
    love
    is no disease,
    no evil goddess.

    Come to think of it,
    dear man
    with those great shoulders,
    love is very much like an old bull,

    enjoys a good lick
    of the young grass
    on the slope
    of an old backyard:

    a fantasy feast,
    that’s what love is.

    இந்தப் பாடலை எங்கோ பார்த்தது போல கேட்டதுபோல இருக்கிறதா..?
    ஆம் நம் குறுந்தொகைப் பாடல் தான் இது..

    காமம் காமம் என்ப காமம்
    அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
    முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்
    மூதா தைவந்தாங்கு
    விருந்தெ காமம் – பெருந்தோளோயே!

    மிளைப்பெருங்கந்தன்
    குறுந்தொகை – 204

    பாடலின் விளக்கம் பெற ..

    http://gunathamizh.blogspot.com/2011/05/blog-post_06.html

    என்னும் இணைப்புக்கு தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

    ReplyDelete
  12. முற்றா இளம்புல்
    அவள் எழுத்துக்கள்///

    நல்லா இருக்கு...

    ReplyDelete
  13. சங்க கால உவமை இன்றும் அழகாய்ப் பொருந்துகிறதே அவள் எழுத்துக்களுக்கு. பிரமாதம். பாராட்டுகள்.

    ReplyDelete
  14. எனக்கில்ல எனக்கில்ல

    அத்தனை பொற்காசுகளும் யாரோ ...

    எனக்கில்ல எனக்கில்ல ...

    ReplyDelete
  15. அருமையான உவமை!
    நன்றே! நன்றி!
    இராமாநுசம்

    ReplyDelete
  16. நல்லாருக்கு.

    ReplyDelete
  17. நான் புல்லின் மன நிலையை யோசித்துப்பார்த்தேன்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. நல்லா இருக்கு மாப்ள!

    ReplyDelete
  19. ஆக தங்களுக்கு, தமிழில் தோன்றிய ஐயப்பாடு நீங்கியிருக்கும் நம்ம தமிழய்யா தந்த விளக்கத்திலிருந்து!!!

    ReplyDelete
  20. 'முற்றாஇளம் புல் அவள் எழுத்துக்கள்"
    இளம் புல்லை பச்சை பசேல் என்பார்களே...

    நன்றாக இருக்கிறது.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.