குடை கொண்டு போக
மறந்து விட்டேன்
‘தானே’ தயவால்
தொடர் தூரல்
நனைந்தபடியே
வீட்டிற்குச் சென்றேன்.
ஈரக்கூந்தலுடன் எதிரே
வாசமாய் நிற்கிறாள் ‘அவள்’.
மழையென்றும் பாராமல்
பற்றியெரியப் போகிறது
எங்கள் குடிசை!
*தானே’ : 29/12/2011 & 30/12/2011 ஆகிய இரு நாட்களில் தமிழகத்தைப் பதம் பார்த்த ‘புயல்’.
***
நூல் ஆர்வலர்களுக்கு :
நமது நண்பர் திரு.வேடியப்பன் அவர்களின்,
DISCOVERY BOOK PALACE -ம்
சென்னை புத்தக கண்காட்சி - யில் இடம்பெறுகிறது
கடை எண்: 334,
நாள் : 05/12/2012 முதல் 17/01/12 வரை
தொடர்புக்கு : 9940446650
அண்ணே வணக்கம் ..
ReplyDeleteகவிதை கலக்கல் ..
வாழ்த்துக்கள் ...
இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம் ..
சின்ன பையனுக்கு என்ன வேலை இங்க ..
நான் வரேன் ..
ஆக ”தானே” யால் நன்மையும் இருக்கு!!!!
ReplyDeleteகுளிர் கொஞ்சம் அதிகம் தான்...
ReplyDeleteதானேவோட டீல் ஆந்திரா தமிழ் நாடு பாண்டி..சிங்கப்பூரில் இருந்துக்கிட்டு யார் கிட்ட கதை.. நாங்க எல்லாத்தையும் துப்பு துலக்கிட்டு தான் வந்திருக்கோம்...
ReplyDeleteமழையாம் குடையாம் குடிசை எரியுதாமாம்.... இப்ப எல்லாம் உம்ம போக்கே சரியில்லை சொல்லிட்டேன்...
எட்றா சண்முகபாண்டி அந்த அருவாளை, காமத்தீ பற்றுறதுக்குள்ளே போட்டு தள்ளிருவோம் ஓடிவா சீக்கிரம்...!
ReplyDeleteசிங்கப்பூர் வெளங்குமா இனி....?
ReplyDeleteஈரத்துடன் ஈரம் கலக்கும்
ReplyDeleteஉலராத உறவு...
அருமை நண்பரே.
இதுவல்லவோ கவிதை!
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
தலைப்பும் கவிதையும் மிக அழகாகப்
ReplyDeleteபொருந்திப் போகிறது
நம்ம ஊர் பக்கம் எங்கும் எரிமலை இல்லை
எல்லாம் எரி மழைதான்
சொல்விளையாட்டில் சொக்கிப் போனேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தொடர வாழ்த்துக்கள் த.ம 4
பற்றட்டும் தீ. மழையை ரசிப்பவனாகிய நான் தம்பியின் இக் கவிதையையும் மிக ரசித்தேன். நன்று. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteம்..பற்றி எரியுதா..கொழுந்து விட்டாச்சா?
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள்..
நண்பா... தானேல குடிசை தூக்கிருச்சுன்னா ஊரே பத்திக்குமே...!
ReplyDeleteஎப்பிடித்தான் முக்கி முக்கி எழுதினாலும் இப்பிடி ஒரு வடிவான கவிதை வரமாட்டுதாம்.
ReplyDeleteஎப்பிடியெண்டு சொல்லித் தாங்கோ சத்ரியன்.காதலிச்சா வருமோ !
(கண்ணழகர்,கருப்பழகர் எண்டா வேற ஆட்கள் கோவிக்கினம்.இன்னும் எவ்வளவு பட்டமெல்லாம் இருக்கு.
கலா சொன்னவ வச்ச பட்டத்தை மறக்காம சொல்லிக்கொண்டே இருக்கவேணுமாம்.
சொல்லவிடுகினமில்ல.ச்ச..!)
உண்மையாவே *தானே* எண்டால் என்னெண்டு தெரியேல்ல !
தமிழ்மணத்தில் ஏழாவதை போட்டு எல்லோரும் இதை படிக்க வச்சாச்சு.
ReplyDeleteமழையென்றும் பாராமல்
ReplyDeleteபற்றியெரியப் போகிறது
எங்கள் குடிசை!//
மிகசிறந்த சிந்தனை. காதலில் எப்படி எல்லாமா சிந்திக்க வேண்டியிருக்கிறது காதலியை கவர . ஆனால் எந்த மீன் விழுமோ கொக்காக காத்திருக்கும் இளைய கூட்டம் ...
புத்தாண்டு "தானே" உடன் களைகட்டத் தொடங்கிவிட்டது. எப்படி எல்லாம் மனவிழியில் காதல் சொட்டுகின்றது ஆகா!.
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பற்றி எரியப்போகிற குடிசையில் உள் கொண்டிருக்கிற உள் உணர்வுகளே கவிதையாய் விரிந்திக்கிற தன்மை நன்றாக உள்ளது ,.வாழ்த்துக்கள்.2012
ReplyDeleteகவிதைகேற்ற நல்ல படம்.இதை எங்கேயிருந்து எடுக்கிறீர்கள்,கொஞ்சம் சொல்லலாமா?
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
//‘தானே’ தயவால்
தொடர் தூரல்//
தூரல் என்ன! பலத்த மழையானாலும் குடிசை பற்றி எரிந்துதான் இருக்கும்!
புலவர் சா இராமாநுசம்
உண்மை சொல்ல வேண்டுமென்றால் கவிதை சிறு தீப்பொறிதான். திகுதிகுவெனப் பற்றி எரிவதென்னவோ வாசகர் மனங்கள்(வயிறுகள்?)தாம். பாராட்டுகள் சத்ரியன்.
ReplyDeleteஅடடடா கவிதை செம கலக்கல்
ReplyDeleteகண்கள் படித்ததும் உதடுகள் சிரித்தது.
வாழ்த்துகள்..
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசே. இதுவல்லவோ கவிதை
ReplyDeleteஅணைச்சாச்சா -- தீயை ?
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தாமததிருக்கு மன்னிக்கவும் கலக்கல் கவி அருமை
ReplyDelete