உப்புச்சொல்
தேவைக்கும் அதிகமாய்
கை தவறி விழுந்து
விருந்துச் சமையலில்
சுவை கெடுக்கும்
உப்புக்கல் போல,
சீர்மிகு உறவுதனை
சிதைத்துவிட முனைகிறது
பொருந்தாத நேரத்தில்
நா தவறி
செப்புஞ்சொல்!
***
வீடமைக்கும் சிலந்தியின்
வாய் வழியும்
எச்சில் இழை போல,
தொடர்பு அறாமல்
நினைவில் நீள்கிறது
பிழைபொருள் தந்த
அப் பெருஞ்சொல்!
அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சாம்.
ReplyDeleteஅமிர்தமே அப்படி என்றால்..
நாவன்மை அடக்காத வார்த்தைகள்
வாழ்நிலையையே புரட்டிப் போட்டுவிடும்.
அருமையான கவிதை நண்பரே.
உப்புச்சொல் சுவைத்தது..
ReplyDeleteஎதுவும் அளவோடு இருக்கையில்
ReplyDeleteஏல்லாமே ருசிதான் என்பதை
இதைவிட ருசியாகவும் சுருக்கமாகவும்
சொல்வது கடினமே
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
த.ம3
// வீடமைக்கும் சிலந்தியின்
ReplyDeleteவாய் வழியும்
எச்சில் இழை போல,//
எடுத்துச் சொல்லியுள்ள இவ் உவமை இதுவரை எவரும் சொல்லாத
ஒன்று!
மிகவும் நன்று!
புலவர் சா இராமாநுசம்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ]]
ReplyDeleteஇதற்கு ஒரு விளக்கவுரைப்போல் இருக்கின்றது உங்கள் வரிகள் மாம்ஸே!
சில தவறிய சொற்களின் காய வடுக்கள் மறையாது ...
ReplyDeleteஅதை உணர்த்தும் இந்த கவிதையும் என் நினைவில் இருந்து அழியாது ...
உயர்தர படைப்புக்கு அன்பு வாழ்த்துக்கள் ...அண்ணே
சின்னச்சொல்தான் எத்தனை பெரிய கல்லையும் ஆடவைக்கும்.சின்ன உப்புக்கல் கூடினாலும் உணவைத் தள்ளிவைக்கும்.சிந்தனை அற்புதம் கண்ணழகரே !
ReplyDeleteஉப்பில்லா பண்டம் குப்பையிலே என வரட்டுத்தனமா கூறப்பட்டாலும் உப்பு என்னவோ நோயைதரக் கூடியது சிறந்த ஆக்கம் பாராட்டுகள்
ReplyDeleteதேவையற்ற சொற்களால் எழும் துன்பங்கள் வேதனைதான்
ReplyDeleteகவிதை அருமை
உப்புச் சொல்... இனித்தது! சற்று உப்பு கூடினாலும் சுவை போய்விடும் தானே... அருமையாகச் சொல்லியிருக்கீங்க பிரதர்! (ஹேமா மேடம் கொடுத்திருக்கற கண்ணழகர் பட்டம்கூட நலலாவே இருக்கே!)
ReplyDeleteஒரு சொல் வெல்லும்;ஒரு சொல் கொல்லும்!
ReplyDelete’வாயடக்கம்’இருந்தால் மன நலமும் உடல் நலமும் கெடாது...
கவிதை அருமை!
மடியிலிருந்து பொருட்களைக்கொட்டினால் அள்ளிவிடலாம் ஆனால் வாயிலிருந்து வார்த்தையை கொட்டிவிட்டால் அள்ள முடியாது,அதனால் பேசும்போது யோசித்து பேச வேண்டும் என் என்னுடைய அம்மா சொல்லுவார்.அதற்கு ஏற்றார்போல தங்களின் பதிவு.அருமை.
ReplyDeleteஉப்பு என்ற சொல்லின் மூலம் கவிதை தந்து நாக்கையும் காக்கனும் என்ற உணர்வு சொல்லும் கருத்து சிறப்பு!
ReplyDeleteஅழகாகச் சொன்னீங்க கவிஞரே..
ReplyDeleteஅளவு மீறினால் வரும் இன்னலை உப்போடு சுட்டி காட்டிய விதம் அழகு சத்ரியன் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னங்க சத்ரியன் உப்பு மொளகாய் பொடின்னிட்டு அதனால் என்னங்க உரிமையும் உறவும் இருக்கும் இடத்தில் தானே நா பிழன்று இருக்கும் அம்மா அடிச்சாங்கன்னு பிள்ளைங்க அம்மாவை வெறுக்கவா செய்யறாங்க...
ReplyDeleteசரி யாரை என்னா சொல்லிட்டீங்க எங்கிட்ட மட்டும் ரகசியமா சொல்லுங்க நான் யாராண்டையும் சொல்லமாட்டேன்...
ஹேமா சத்ரியன் கண்ணழகரா சொல்லவேயில்லை நான் கல்ழகர்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
ReplyDeleteஉதாரணப பின்னல் அருமை! வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
சத்ரியன் இன்னும் சொல்லவேயில்லை யாரண்டை நல்லா வாங்கி கட்டிக்கிட்டு வந்தீங்க... வாழ்க அந்த நல்ல மனம்..
ReplyDelete"வீடமைக்கும் சிலந்தியின்
ReplyDeleteவாய் வழியும்
எச்சில் இழை போல"
அழகான உவமை
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு