Dec 20, 2011

முரண்


விதை ஒன்று போட்டால்
சுரை ஒன்றா முளைக்கும்?
எனும் கேள்வி
மடத்தனமாய் தெரிகிறது.

விழிகளை என்
விழிகளுக்குள் விதைத்துச் சென்றாள்.


இங்கே,
முளைத்ததென்னவோ 
காதல்!

***

யார் மூலமாவது
தெரியப்படுத்தியே தீரவேண்டுமென
தீர்மானித்து விட்டது மனது.

நேரிடையாய்
அவளிடமே சொல்லி விட்டால் என்ன?

22 comments:

  1. ச்த்ரியன் முதல் கவிதைரியலி பெண்டாஸ்டிக்..

    ரெண்டாவது கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க ஏற்கனவே கண்ணாலம் கட்டி சாரல்லுன்னு ஒரு செல்லகுட்டி மகளா இருக்கா!! பிச்சிடுவோம் பிச்சி..சொல்லிபுட்டேன்..

    ReplyDelete
  2. முரண்

    மாம்ஸு

    ரண் ரண் -‍ ஊருக்கு

    ReplyDelete
  3. விழிகளை என்
    விழிக்குள் விதைத்துச் சென்றாள்.


    இங்கே,
    முளைத்ததென்னவோ
    காதல்!//

    முரண்களின் முரண் ஹா ஹா ஹா ஹா அழகு...!!!

    ReplyDelete
  4. //விழிகளை என்
    விழிக்குள் //

    அருமை.

    ReplyDelete
  5. கருப்பழகரே....நீங்க இந்தப் கருத்தைப் பிச்சுப் பிடுங்கி அறுத்து உங்க காதலுக்குச் சமனாக்கிப் முரண்டு பண்ணிப் பாப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா அந்தப் பெரியவர் எழுதியே இருக்கமாட்டார்.பாவம் அவர்.இங்க வந்து பார்ப்பாரா !

    உங்க காதல் ஊருக்கே தெரியும்.அவங்களுக்குத்தான் தெரியாதாக்கும் !

    கலாவுக்கு இப்பவே மெயில்ல போகுது உங்க சங்கதி !

    ReplyDelete
  6. முரண் -காதல் கவிதை அருமை...உங்கள் மனைவி நிச்சயம் ரசித்திருப்பார்கள்!

    ReplyDelete
  7. ஹேமா கருப்பரே வரை சரி அப்பறம் அழகரே ஏன்?

    ReplyDelete
  8. மூடுபனி முரண்கள்...
    காணக் கிடைக்காது...

    அருமையான கவிதை நண்பரே.

    ReplyDelete
  9. முளைச்சி மூணு இலை விடல. (படத்தில ரெண்டு இலைதான் இருக்கு) அதற்குள் காதலா என்றும்தான் சொல்வார்கள். காதல் என்று வந்துவிட்டபின் அதையெல்லாம் பொருட்படுத்த முடியுமா?

    முரண் என்றாலும் ரசிக்கவைக்கிறது சத்ரியன்..

    ReplyDelete
  10. ***தமிழரசி said...

    ஹேமா கருப்பரே வரை சரி அப்பறம் அழகரே ஏன் ?***

    தமிழ்....என்ன சொல்ல வாறீங்க.கருப்பர் அழகரா இல்லை கருப்பழகா ?

    தமிழ்...கண்ணுக்குள் முளைச்ச காதலைப்பத்தி ஒண்ணும்
    சொல்லலியே !

    ReplyDelete
  11. அண்ணே வணக்கம் ,...
    கவிதையின் தாக்கம் நெஞ்சுக்குள்
    வருடும் தென்றலாய் .. சிலிர்க்க வைக்கின்றது ..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அண்ணே வர வர உங்க போக்கே சரி இல்லையே ..
    ஊருக்கு தந்தி அடிச்சி செய்தி சொல்லவா ... ?

    ReplyDelete
  13. ஹேமா அக்கா இவர் கருப்பரா ? அழகரா என்று கூற தெரியவில்லை ?!
    ஆனால் ஒன்று நிச்சயம் அண்ணன் நல்ல கவிஞர்...

    ReplyDelete
  14. அண்ணே, எப்படியாவது காதல் வரிகள் வந்துருதே.... ஊருக்கு வறீங்க கொஞ்சம் கவனமா இருங்க



    வாசிக்க:
    ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...

    ReplyDelete
  15. சொல்லாமதானே இந்த காதல் வளருது .. T .R பாட்டு கேட்டீங்க இல்ல .. சொம்மா கண்ணினை கண்நோக்கொக்கின் ... வள்ளுவம் போல சொல்லிடுங்க ... பாவம் உங்க காதலி

    ReplyDelete
  16. சொல்லாமதானே இந்த காதல் வளருது .. T .R பாட்டு கேட்டீங்க இல்ல .. சொம்மா கண்ணினை கண்நோக்கொக்கின் ... வள்ளுவம் போல சொல்லிடுங்க ... பாவம் உங்க காதலி

    ReplyDelete
  17. // ஹேமா said...
    ***தமிழரசி said...

    ஹேமா கருப்பரே வரை சரி அப்பறம் அழகரே ஏன் ?***

    தமிழ்....என்ன சொல்ல வாறீங்க.கருப்பர் அழகரா இல்லை கருப்பழகா ?

    தமிழ்...கண்ணுக்குள் முளைச்ச காதலைப்பத்தி ஒண்ணும்
    சொல்லலியே !//


    ஹேமா இவர் கருப்பு தான் அழகர் இல்லை.

    அம்மாம் பெரிய கண்ணு இருந்தால் காதல் மட்டுமா முளைக்கும்..க்க்கும் மரமும் செடியுமில்ல முளைக்கும்..

    ReplyDelete
  18. விழிகளை என்
    விழிகளுக்குள் விதைத்துச் சென்றாள்\\\\\\\\\\\\



    நேரிடையாய்
    அவளிடமே சொல்லி விட்டால் என்ன\\\\\\\\

    ஐய்யய்யோ.....ஹேமா,தமிழ் ஏன் இப்படி
    ஆளையாள் மாற்றிமாற்றி கேட்டுகிறீர்கள்!

    நன்றாகக் இவ்வரிகளைப் படித்துப்பாருங்கள்
    இப்போது அடிக்கடிஇவர் நேருக்குநேர் சந்திக்கும்
    பெண்ணைப்பற்றிய ஏக்கம்தான் இது...
    ஹேமாவையும்,தமிழையும் நேருக்குநேர் சந்திக்க
    வாய்ப்பில்லை ,என்னைத்தான் அடிக்கடி சந்திக்கும்
    வாய்ப்பு வருகிறது ஆதலால்........!!

    இது பாவமில்ல...கண்ணழகர் கந்தசுவாமியாகமாற...
    இதுக்கு நான் உடன்படவேமாட்டேன்
    ஹேமா,உங்க கறுப்புக்கண்ணழகரின்
    காதல் பரிதாபமானதுதான் ,என்னை மறந்துவிடச்சொல்தோழி!
    அவர் நேரிடையாகச் சொல்லும் முன்பே!!

    ReplyDelete
  19. மனவிழியில் காதல் கவிதைகள் அலை பாய்கின்றன.

    ReplyDelete
  20. யார் மூலமாவது
    தெரியப்படுத்தியே தீரவேண்டுமென
    தீர்மானித்து விட்டது மனது.

    நேரிடையாய்
    அவளிடமே சொல்லி விட்டால் என்ன?

    அருமை நன்றி .

    ReplyDelete
  21. முரண் - அருமை.

    சொல்லி விடலாம் என்று நினைத்தேன் - என் காதலை
    அனால் அதற்குள் அவளே சொல்லி விட்டாள் - எனக்கு கல்யாணம் என்று.

    http://jayarajanpr.blogspot.com/2011/12/33.html

    http://sattaparvai.blogspot.com/2011/12/blog-post_15.html

    ReplyDelete
  22. மனவிழி, முரண், காதல் தொடருங்கள் பார்ப்போம் காதல் எதுவரை போகும் என்று..வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.