இதழ் மீது
மிதக்கும்
பனித்துளிகளை
சூரியன் களவாடி விடுவதால்,
எனக்கான
தேன் துளிகளை
இதழ் இடுக்குகளில்
பதுக்கி வைத்து பரிமாறுபவள்- அவள்.
நோக்கு வர்மத்தால்
நெடுந்தொலைவிலிருந்தே
நோய்* தந்தாள்.
அருகினில் நெருங்கி
அளவளாவும் போது தான் தெரிந்தது
பேச்சு வர்மத்திலும்
பெருங் கைக்காரி அவளென.!
* நோய் - காதல்
***
தேன் துளிகள் பதுக்கும் இடம்... நல்ல கண்டுபிடிப்பு...
ReplyDeleteவாசிக்க:
நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி
அடுத்து முத்த வர்மம், அதன் பின் "மொத்த" வர்மம்
ReplyDeleteசரியா மாம்ஸு
////நோக்கு வர்மத்தால்
ReplyDeleteநெடுந்தொலைவிலிருந்தே
நோய்* தந்தாள்.
அருகினில் நெருங்கி
அளவளாவும் போது தான் தெரிந்தது
பேச்சு வர்மத்திலும்
பெருங் கைக்காரி அவளென.!
////
ஹா.ஹா.ஹா.ஹா.அருமை
போதி தர்மன் வந்ததுதான் வந்தான், எல்லாமே வர்மக்கலையா இருக்கு ஹி ஹி...
ReplyDeleteஆஹா தேன் துளிகளை பதுக்கி வைத்திருக்கும் இடத்தையும் கண்டு பிடிச்சாச்சா அவ்வ்வ்வ்...
ReplyDeleteதேன் துளிகளை பதுக்கி வைத்துப் பரிமாறுபவள்! மொத்தமாப் பருகியாச்சா... இன்னும் மிச்சம் இருக்கா? ரசனையான கவிதை சத்ரியன். ரசித் தேன்!
ReplyDeleteஇறுதி வரிகள் பிரமாதம் தோழர்..வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇதழ்களில் கசியும் காதல் வரிகள் நன்று.
ReplyDeleteஇதழில் தொடங்குதம்மா......
ReplyDeleteஇதெல்லாம் நல்லதுக்கு இல்லை சொல்லிபுட்டோம் ஆமாம்.. நோக்கு வர்மமாம் இதழ் இடுக்கில் தேன் துளியாம் ஏன் சாமி ஏன்?
ReplyDeleteரெண்டும் பனிக்கால கவிதைகள் நன்னா நனைஞ்சிருக்கு காதலில்....
சூழலுக்கேற்ற கவி வரிகள் ரொம்ப நல்லாருக்குண்ணே! :-)
ReplyDeleteதலைப்பு அசத்தல்....
சத்ரியா...ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்.பொண்ணுங்க நாங்க இந்தப்பக்கம் வரணுமா வேணாமா !
ReplyDeletenokku varmam... nice word..... www.rishvan.com
ReplyDeleteNice.
ReplyDeleteTM 8.
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது சிங்கையில ...
ReplyDeleteஅண்ணே வணக்கம் ..
தேனை கொஞ்சம் பருகினாலும் திகட்ட ஆரம்பித்துவிடும் ..
உங்களின் தேன் வரிகளை எத்தனை முறை படித்தாலும் திகட்டாத சுவைத்தேன் ..நான் சுவைத்தேன்
மாறுபட்ட அழகான சிந்தனை
ReplyDeleteசொல்லிச் சென்றவிதமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 9
இல்லாத காதலுக்கு புதிய பரிமாணத்தில் காதல் கவிதை சிறப்புதான் எல்லோருக்குமே இப்படி ஒரு காதலன் , காதலி உள்ளத்திளுண்டு என்றலும் உங்களின் காதல் வேறுபட்டது பாராட்டுகள் வெல்க ...
ReplyDelete//பொண்ணுங்க நாங்க இந்தப்பக்கம் வரணுமா வேணாமா !// அதானே!
ReplyDeleteரசனையிலும் ரசனை. அருமை..
சத்ரியா...ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்.பொண்ணுங்க நாங்க இந்தப்பக்கம் வரணுமா வேணாமா !\\\\\\\\\
ReplyDeleteஹேமா ,பெண்மேல் பாசம்வைத்து
ஆ....பாசம் என்று வாய்பிளக்கும் அளவுக்கு
புள்ள அருமையாகக் கவிதை எழுதி இருக்கிறான்{ர்}
அதைப்போய் ! ,இதில் எங்குள்ளது ஆபாசம்?
இந்த அருமையான கவிதையை
பொண்ணுங்க நாமதான் கண்டிப்பாய் ரசிக்கவேண்டும்
தலைப்பே மயங்கவைக்கிறதல்லவா?
கண்ணா, மிகவும் அருமை ரொம்பவும் ரசித்தேன்
ReplyDeleteநேரமிருக்குபோது இதுபற்றிப் பேசுகிறேன்....
////நோக்கு வர்மத்தால்
ReplyDeleteநெடுந்தொலைவிலிருந்தே
நோய்* தந்தாள்.////
நல்ல காலம் கிட்டப் போகல...
அருமையான வரிகள் சகோ...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
நடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்
////நோக்கு வர்மத்தால்
ReplyDeleteநெடுந்தொலைவிலிருந்தே
நோய்* தந்தாள்.
அருமை.
ரசனை.
ஆகா .... எப்படி எல்லாம் படுத்துகிறாள்.:)