( வீட்டுத்தோட்டத்தில்...)
பறிக்காமல்
செடியுடன் காம்பை பிடித்து,
கொடுப்பது போல்
நான் பாவனை செய்ய,
பெறுவது போல்
நீ பாவனை செய்ய
நிறைவேறியது
நம்
காதலர் தின
பரிசு பரிமாற்றம்!
பறிக்கப்படாத
அந்த வண்ண ரோஜா
பகிர்ந்த வண்ணமிருக்கிறது
தோட்டத்துப் பூக்களிடம்.
நம்மையும்,
நம் காதலையும்!
**************************************
* காதலை போற்றும் அனைவருக்கும் எங்கள் அன்பு வாழ்த்துக்கள்.
தெரிந்த உணர்வுகளை
ReplyDeleteதெரியாத வார்த்தைகளால்
யாருக்கும் தெரியாமல்
தெரியப் படுத்தி
தெரிந்தே செய்யும்
உணர்ச்சி மிகு
உணர்வு....
அருமையான கவிதை நண்பரே.
செடிக்கும் ரோஜாவுக்கும் உள்ள காதலை முறிக்காமல் ஒரு அன்புப்பரிமாற்றம்.அடடா......
ReplyDeleteபூவியாபாரிகள் சண்டைக்கு வந்திடப்போறாங்க.
எல்லாம் தெளிவாத்தான் இருக்கீங்க உங்க வீட்டு ரோஜா உள்பட..கருமிங்க போல ரெண்டும் ஒரு பூவை பறிச்சி கொடுக்காமல் எல்லாமே பாவனையாமே...சரி சரி வந்துட்டேன் வாழ்த்திட்டு போறேன். நல்லா இருங்கோ!!!
ReplyDeleteகவிதை வரிகள் உணர்த்தும் உண்மை அறிந்தோம் அண்ணே காயப்படுதாமல் காதலிக்க கற்றுக்கொள்வோர் எத்துனைப்பேர் இன்று ....
ReplyDeleteஅட அட ம்ம்ம்... அருமை
ReplyDeleteஉங்கள் காதல் பரிமாற்றம்
வணக்கம் தோழர்.ரொம்ப நாள் கழித்து வந்து காதல் பரிசு கொடுக்கிறீர்கள்.. சிறப்பாயிருந்தது.வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமைக்கவிதை வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக அழகான பரிசு பரிமாற்றம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க அண்ணே வாங்க ,,,
ReplyDeleteஊரிலே இருந்து மீண்டும் சிங்கை சென்று விட்டிர்களா?
காதல் பரிசு அட்டகாசமா இருக்குங்க அண்ணே ..
வாழ்த்துக்கள்
வித்தியாசமான சிந்தனை
ReplyDeleteஅருமையான காதலர் தின சிறப்புக் கவிதை
மனம் கவர்ந்ததது பதிவு.வாழ்த்துக்கள்
காதலைப் பகிரும் தோட்டத்து ரோஜா அழகு.
ReplyDeleteபூ கொடுத்தவருக்கும் பூ வாங்கியவருக்கும் அன்புக் காதல் வாழ்த்துகள்.உண்மையான அன்புக்கு இன்று மட்டும் ஒரு நாள் தேவையில்லை.அன்பும் காதலும் ஒவ்வொரு நாளும்தான் !
ReplyDeleteபறிக்கப்படாத ரோஜாவின் வாழ்த்தே இனிய காதல் தின வாழ்த்தாக இருக்கும். வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்திய அன்புக்குப் பாராட்டுகள் சத்ரியன்.
ReplyDeleteபறிக்கப்படாத ரோஜாவின் வாழ்த்தே இனிய காதல் தின வாழ்த்தாக இருக்கும். வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்திய அன்புக்குப் பாராட்டுகள் சத்ரியன்.
ReplyDeleteவிருது ஒன்று உங்களோடு பகிர்ந்துள்ளேன் .. நேரம் இருப்பின் வருகைதாருங்கள் .. நன்றி
ReplyDeletehttp://karaiseraaalai.blogspot.in/2012/02/blog-post_16.html
மென்மையான உண்மையான காதலைச் சொல்லும் வரிகள்.நன்று
ReplyDelete''..பறிக்கப்படாத
ReplyDeleteஅந்த வண்ண ரோஜா
பகிர்ந்த வண்ணமிருக்கிறது
தோட்டத்துப் பூக்களிடம்.
நம்மையும்,
நம் காதலையும்!...''
ஆகா அருமையாக மூடி மறைச்சு சொல்லுறதிலே நீங்க கிங் தான். அருமை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
செடியிலிருந்து பறிக்கப் படாத பூக்களில் ஜீவனும், காதலும் வாழ்கிறது. மலர்ச்சியான சிந்தனை! காதலாகி வந்த பகிர்வு அருமை பிரதர்!
ReplyDeleteரோஜாவை அதன் செடியில் வைத்து ரசிப்பதுதான் காதல்..! இது எங்கோ படித்தது,,, அதை தூக்கி சாப்பிட்டு விட்டது இந்த கவிதை...!அருமை அருமை...! ம்ம் கவிஞர்கள் பிறக்கின்றார்கள்..!
ReplyDeleteஅழகான இந்த காதல் வாழ்க!
ReplyDelete