Feb 20, 2012

திமிருக்கு திமிர் அழகு



தான்
அழகென்ற திமிர் அவளுக்கு.

‘என்னிடம்
எது அழகு சொல்?’,  என
நிமிடத்திற்கு 
எண்பது தடவை
கேட்டு வைக்கிறாள்.

உங்களிடம்
சொல்வதற்கென்ன?

திமிர் தான் அழகு
அவளக்கு!


****

33 comments:

  1. ம்ம்ம் ...
    கலக்கல் கவிதை கவிஞரே

    ReplyDelete
  2. தன் அழகை உணர்ந்தவள்தானே
    திமிராய் இருக்கமுடியும்
    இருந்துவிட்டுப் போகட்டும்
    வித்யா கர்வம் போல
    இதுவும் அனுமதிக்கப் பட்டதுதானே
    மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அழகான கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  4. திமிரும் ஓர் அழகு தான் அதை சொன்ன விதத்தில் இந்த கவிதையும் நன்று தான் சத்ரியன்

    ReplyDelete
  5. திமிரானவள்! அழகுக் கவிதையால் அகமகிழ்ந்தேன் பிரதர்...

    ReplyDelete
  6. மனதை குளிரச்செய்கிறது அண்ணே கவிதை ..
    வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் ..

    சின்ன சந்தேகம் இதை அவங்களிடம் கூறி
    அவங்க கொடுத்த அடி எத்தனை இருக்குமென்று ...

    ReplyDelete
  7. எது அழகு சொல்?’, என
    நிமிடத்திற்கு
    எண்பது தடவை
    கேட்டு வைக்கிறாள்.\\\\\\\\\\\\

    என்னிடம்
    எது அழகு சொல்?’, \\\\\\\\

    எது அழகென்றுதானே! “உங்களிடம்” கேட்டாங்க...
    நான் அழகா! எனக் கேட்கவில்லையே?
    அதற்குப் போய் திமிரென்று முத்திரை குத்தலாமா?

    ReplyDelete
  8. ஹேமா, இரண்டு கன்னத்திலும் கை வைத்துகொண்டு
    உங்களைப் பற்றித்தான் யோசிக்கிறார் போலும்,,...{முகப்பில்}
    ...அதாவது...அதாவது ........
    வந்து..வந்து..... இவ்வளவு திறமையாக எல்லாம் கவிதையெழுத
    இந்தக் ஹேமா எங்கு கற்றுகிட்டார் என்றுதான்!
    சேச்சே.... எவ்வளவு ஏக்கம் கூடாதப்பு

    ReplyDelete
  9. திமிர் தான் அழகு
    அவளக்கு!\\\\\\

    ஐய்யா,
    பெண்களுக்கு இது “அளவுடன்”
    அதிகப்படாமல் கட்டாயம்
    இருக்க வேண்டும். இல்லாவிட்டால்...
    சிலரிடமிருந்து தப்பிக்கவேமுடியாது.
    இது {சிலசந்தர்பங்களில் உதவும்}
    ஒரு ஆயுதம்தான் பெண்களுக்கு!

    ReplyDelete
  10. ம்..எப்படி சரியா சொன்னீங்க..

    ReplyDelete
  11. பாவம் கண்ணழகர்....இவ்ளோ கவலையா...!

    ReplyDelete
  12. கலா....என்ன என்னோட பெயரெல்லாம் அடிபடுது.அவர் அவரோட கவலையைச் சொல்றார்.நீங்க என்னடான்னா...சாரலம்மா என்னமோ சொல்லிட்டாங்கபோல.
    இப்பத்தானே ஊரில இருந்து வந்திருக்கார்.இன்னும் ஊ...ட...ல் !

    ReplyDelete
  13. ம் ..திமிர் கூட அழகுதான். நல்ல கவிதை.

    ReplyDelete
  14. நன்றிங்க செய்யது.

    ReplyDelete
  15. //தன் அழகை உணர்ந்தவள்தானே
    திமிராய் இருக்கமுடியும்
    இருந்துவிட்டுப் போகட்டும்//

    வாங்க ரமனி ஐயா,

    அவளின் திமிரில் தான் சாய்ந்து போனான் சத்ரியன்.

    ReplyDelete
  16. வாங்க தனசேகரன். நன்றி.

    ReplyDelete
  17. R.V.சரா,

    அவளது திமிரை அவளிடம் சொல்லவேயில்லை. சொல்லப்போவதுமில்லை.

    ReplyDelete
  18. கணேஷ் அண்ணா,

    அவள் திமிரானவள். வேண்டாம் சத்ரியா-ன்னு எவ்வளவோ சொல்லி பாத்தேன்.

    ம்ம்ஹூம்!

    சொன்னாலும் கேக்கவில்லை இந்த மனசு!

    ReplyDelete
  19. அரசன்,

    //சின்ன சந்தேகம் இதை அவங்களிடம் கூறி அவங்க கொடுத்த அடி எத்தனை இருக்குமென்று ...//

    விடுங்க விடுங்க. இதெல்லாமா வெளியில சொல்லிட்டிருக்க முடியும்?

    காதலில் இதெல்லாம் சகஜமப்பா!

    ReplyDelete
  20. //ஹேமா, இரண்டு கன்னத்திலும் கை வைத்துகொண்டு உங்களைப் பற்றித்தான் யோசிக்கிறார் போலும்,,...//

    ஏன் தாயி இந்த கொலவெறி.?

    சத்ரியனை சின்னாபின்னமாக்கம ஓயமாட்டீங்க போல இருக்கே!

    பாவம்! பச்சபுள்ளைங்க சத்ரியன்.

    ReplyDelete
  21. கலா,
    பெண்களுக்கு திமிர் ஆயுதமா?

    இது தெரியாம போச்சே! அந்த ஆயுத்தத்தை வெச்சி சத்ரியனையே சாய்ச்சிட்டாளே சண்டாளி!

    ReplyDelete
  22. வாங்க மது,

    நீங்களும் திமிர் அழகை உணர்ந்திருக்கீங்க போல!

    ReplyDelete
  23. //ஹேமா said...
    பாவம் கண்ணழகர்....இவ்ளோ கவலையா...!//

    அம்மாடி ஹேமா,

    கலா தான் கலாய்ச்சிட்டு போயிருக்காங்க-ன்னா, நீங்களும் ‘கவலையா?’-ன்னு கேட்டா என்னத்த சொல்ல நான்?

    ReplyDelete
  24. //கலா....என்ன என்னோட பெயரெல்லாம் அடிபடுது.//

    அடிபடலைங்க. கொடியே ஏத்தி வெச்சிருக்காங்க.

    //இப்பத்தானே ஊரில இருந்து வந்திருக்கார்.இன்னும் ஊ...ட...ல் !//

    இருக்காதா பின்ன?

    ReplyDelete
  25. நன்றிங்க ரமாரவி.

    ReplyDelete
  26. ஊட்டுக்காரம்மா பெருமை அதிகமா போச்சி வர வர..ஆனாலும் மனசுல ஓரமா டவுட்டு பட்சி சொல்லுது இவரு சரியில்லைன்னு..

    ஹேமா, கலா உங்களுக்கும் எனி டவுட்டு..போட்டோ போட்டு சீனு போடறாரு இவருக்கும் திமிர் இருக்குன்னு...

    # இறைவனுக்கே வெளிச்சம்.

    ReplyDelete
  27. தமிழ்...எப்பூடி....நாங்க நினைச்சதை அப்பிடியே சொல்லிட்டீங்க.உங்களுக்கு இப்பத்தான் பட்சி சொல்லிச்சா.சரியான சரி.நோ டவுட்.வேணுமின்னா கலாவையும் வந்து பட்சி சொன்னது சரின்னு பதிவில சொல்லி வைக்கச் சொல்றேன்.இதுக்கெதுக்கு இறைவன்கள் எல்லாம் !

    ReplyDelete
  28. மழைத்துளிபட்ட அழகிய ரோஜாபோல அழகுடன் திமிரும் சேர்ந்து கூடிய அழகைத்தருகின்றதே.

    ReplyDelete
  29. என்னிடம் இதுதான் அழகு என்று சொல்லாமல்

    உங்களிடம் கேட்கிறாளே அந்த அடக்கம் உங்களுக்கு திமிராக தெரிகிறதா ?????????/

    உங்களுக்கு தான் திமிர் என்று நினைகிறேன் ........

    எது எப்படியோ உங்கள் ரசனை மிகு காதலியால் வந்த இந்த கவிதை அழகுதான் !!!!!!!!

    ReplyDelete
  30. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  31. அப்படி ஒரு திமிறான கவிதை. நல்லா ரசித்திருக்கிறீர்கள் அந்தத் திமிறை. அசத்தல்....

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.