அவளுக்கு “அமுதென்றும்” பேர் -05
பெருந்தீயின்
நுனி ஜ்வாலை
அறுந்து அறுந்து காற்றில்
கரைந்து விடுவது போல
என்
ஜீவ செல்கள்
ஒவ்வொன்றாய்
அவளில்
கரைந்துபோக
சாபமிடுங்கள்..!
***
வழிப்பயணிக்கென
விளைந்து நிற்கும்
காட்டு கனிமரங்கள் போல
என்
வழியெங்கும்
வியாபித்திருக்கும்
விநோதா
அவள்.
***
காட்டுத்தீயின் வேகத்தைக்
ReplyDeleteகட்டுக்குள் வைத்துக்
காத்துக்கிடந்தவள் அவள்!
தீயில் கரைவதும் சுகம்!
தீயெனக் கரைவதும் இதம்.
பசித்த வயிறது
பக்கம்வரும்நாள்நோக்கி,
காட்டுமரங்களின் கனியெனக்
கனிந்துகிடந்தவள் அவள்!
கனியும் பதம், கனிவும் இதம்.
அவளுக்கும் அமுதென்று பேராம்.
கவிபொழியும் காதல்மழைக்குப் பாராட்டுகள் சத்ரியன்.
உள்ளத்தில் ஊன்றி வளர்ந்த
ReplyDeleteகாட்டுமரத்தின் இனிக்கும் கனியென
இனிக்கிறது கவிதை..
வாழ்த்துக்கள் நண்பரே.
அண்ணே எப்படி அண்ணே ...
ReplyDeleteமிகவும் ரசித்தேன் கவிதை வரிகளை...
//பெருந்தீயின்
ReplyDeleteநுனி ஜ்வாலை
அறுந்து அறுந்து காற்றில்
கரைந்து விடுவது போல//
ஆரம்ப வரிகள் பிரமாதம்.
மிக சிறப்பான கவிதை.
ம்ம்ம்ம் .. என்னமோ ஏதோ...?
ReplyDeleteஇரண்டுமே படித்து முடித்ததும் பனித்துளியில் நீராடிய அனுபவம் வருகிறது அண்ணே ..வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமைக்கவிதை வாழ்த்துகள்.
ReplyDeleteஎன்
ReplyDeleteஜீவ செல்கள்
ஒவ்வொன்றாய்
அவளில்
கரைந்துபோக
சாபமிடுங்கள்\\\\\\\\
குழந்தாய்!நீ கேட்டது கிடைக்கத்
தந்தேன் வரம்.
என்
ReplyDeleteவழியெங்கும்
வியாபித்திருக்கும்
விநோதா???
அவள்\\\\\\
ஹேமா,முன்னாடிச்சொல்லிருந்தேன்
உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறாரென.....
பயத்தில் நினைத்துகொண்டிருக்கும் “அவர்” பெயரைச்
சொல்லிவிட்டார் பாத்தாயா?
இதைத்தான் போட்டு வாங்கிறதென்பது!
இதற்குத்தான்,
இப்படியான ஒரு புத்திசாலிப் புள்ள வேணுமெங்கிறது
கவி, அமுதுதான்.
ReplyDeleteகன்னி இல்லாத்தீவுல..இருந்துகிட்டு
எங்கையா!கண்ணி வைச்சி இந்தக் கனியெல்லாம் கொய்வது?
இளமை ஊஞ்சலாடுது (கவிதையில்)
ReplyDeleteமுதுமை முறுவலிக்குது(நெஞ்சில்)
நலமா!
புலவர் சா இராமாநுசம்
பெருந்தீயை வாலில் கட்டிக்கொளுத்தும் வானராமாய் இல்லாமலிருந்தால் சரி !
ReplyDeleteகலா...காயாவது க(ன்)னியாவது வெறும் கடல் தண்ணிதான்.பாவம் கண்ணழகர் !
கலா அவரு விநோதான்னு பேரை போட்டது சும்மா திசை திருப்ப...இது வேற ஏதோ சமாச்சாரம் போல இருக்கு..இருங்க ஆளைவச்சி புடிக்கலாம்.
ReplyDelete// கன்னி இல்லாத்தீவுல..இருந்துகிட்டு// செம கேள்வி. இப்படி இருக்கும் போது இவரு கவிதையில் வுடற ரீலு ஆத்தாடி முடியலை.. நெருப்பு அறுந்து போதாம் கனி கனிஞ்சி போதாம்..முடியலை சாமி..
//பெருந்தீயின்
ReplyDeleteநுனி ஜ்வாலை
அறுந்து அறுந்து காற்றில்
கரைந்து விடுவது போல//
அழகிய நோக்கு...
விநோதாவும் கனியை மாதிரியே சுவையாய் நல்லா இருக்கு சத்ரியன்..
விநோதாவோடு இருக்க சாபமிட்டாச்சி மாம்ஸே ...
ReplyDeleteஜமால் அங்கன ஊரில் என்ற உன்ற சகோதரி மனவிழியை பத்தி யோசிக்காமல் என்ன நீரு வாய்த்திட்டு போறிரு..
ReplyDeleteதமிழ் மேடம் ...
ReplyDeleteஇவர கட்டிகிட்டதால என்ற தங்கச்சி தான் விநோதா, விளங்கிச்சா :P
ஒஹ் இந்த அழகருக்கு ஒருத்தி கிடைச்சதே விநோதம் தான் அதான் அவள் விநோதாவா அப்ப ஜரிங்க ஜமால்.
ReplyDeleteஎதுக்கும் ஒரு கண்ணு வையுங்க இவரு மேல. நம்ம தங்கச்சி வாய்க்கை..
கலா...காயாவது க(ன்)னியாவது வெறும் கடல் தண்ணிதான்.பாவம்
ReplyDeleteகண்ணழகர் !.....ஹேமா,நீ இப்படிச்சொல்லிச் சொல்லி உசுப்பேத்தத்தான்....அந்தக் கண்ணு ரொம்பத்தேடுது "கண்ணுங்களை"
தமிழ்,சம்சாரம் இருக்குபோது!சமாசாரம் இருக்குமா?
ReplyDeleteஆழ....{த்தில்}வைத்திருக்கிறாரோ...?
ஆதனால்..மின்சாரம் போல் தாக்கும்போது,பெண்சாரமாய் விழுகிறது கவி
// தமிழ்,சம்சாரம் இருக்குபோது!சமாசாரம் இருக்குமா?//
ReplyDeleteசம்சாரம் இந்தியாவில். சமாச்சாரம் சிங்கையில் இருக்கலாமோன்னு ஒரு சந்தேகம் அதான் சபையிலேயே சொல்லிவச்சேன்..
வாவ்....என்னமா ஒரு விநோத அலசல்.தமிழ்,கலா வாழ்க வளர்க நீங்க ரெண்டு பேரும் !
ReplyDeleteஜமால் இன்னும் பாவம்.வேற என்ன சொல்ல !
வாவ் கவிதைல கலக்கிடிங்க..
ReplyDeleteNice.super.. saamiiii.
ReplyDelete### காட்டு கனிமரங்கள் போல
==> காட்டுமரக் கனிகள் போல
edhu Sari???!!!!
மிக இனிமையான அருமைக் கவிதை. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com