Mar 5, 2012

துணை

ஆளரவமற்ற மதியவேளை
ஏரிக்கரை.

சலனமற்ற நீர் பரப்பில்
தலைக்கீழாய் தவமிருக்கிறது
தரை பிம்பங்களுடன்
என் பிம்பமும்.

நீரமைதியில்
லயித்திருந்தேன் நான்

எலந்தைக் கிளையிலிருந்து
ஏதோ விழுந்தது நீரில்.
கண் திறவாத
அணில் குட்டி அது.

நீருக்குள்
நெடுமரமாய் இறங்கி
மீட்டு விட்டேன்
குட்டி அணிலை.

கூட்டில்
விட்டுச்செல்ல மனமில்லை.
என்
கூடவேயிருந்து மாளட்டும்.


14 comments:

  1. துணையின்
    கூர்மை தனிமையை
    கீறும்

    ReplyDelete
  2. அணிலின் மீதான பாசக்கவிதை அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது கவிதையில்.ஆனால் கவிதையின் கரு பிடிச்சிருக்கு.அனுபவம் வேறயா.கலா வரட்டும் சொல்லுவா !

    ReplyDelete
  4. கூட்டில்
    விட்டுச்செல்ல மனமில்லை.
    என்
    கூடவேயிருந்து மாளட்டும்

    அது வாழும் வரை வாழட்டும்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  5. ஹேமா கருத்தோடு ஒத்து போகிறேன் நானும். கவிதையில் எலக்கியம் தெரியுது. கவிதை நயம் அழகு. மனசை கொள்ளையடிக்குது..

    ஹேமா, கலா எதாச்சும் பஞ்சாயத்துன்னா எனக்கும் ஒரு குரல் கொடுங்க. ஓடியாறேன்..

    சத்ரியன் கவிதையிலிருந்து ஒரு மாறுப்பட்ட கவிதை..வாழ்த்துக்கள். விநோதாவை கேட்டதா சொல்லவும்..

    ReplyDelete
  6. // நீருக்குள்
    நெடுமரமாய் இறங்கி// அழகிய சொல்லாடல்

    // என்
    கூடவேயிருந்து மாளட்டும்.// அதீத அன்பின் குரூரம் அழகு.

    ReplyDelete
  7. ஆளரவமற்ற மதியவேளை
    ஏரிக்கரை.\\\\\\\
    இந்த இடமாப்பார்த்து தெரிவுசெய்து...
    எதுக்கு?என்னசெய்யப்போனீக...?

    சலனமற்ற நீர் பரப்பில்
    தலைக்கீழாய் தவமிருக்கிறது
    தரை பிம்பங்களுடன்
    என் பிம்பமும்\\\\\\
    எதுக்காக இந்த வெளவ்வால் சத்தியாக்கிரகம்?
    ஏதாவது எடக்குமுடக்கா ராசா கேட்டீகளோ!
    அவக தரமுடியாதென்றுருப்பாக....
    வளைச்சிப்போட இதொருவழியோ...?

    நீரமைதியில்
    லயித்திருந்தேன் நான்\\\\\\
    நீர் அமைதியில்....!
    அவக அமைதியை எம்புட்டுநேரம் ரசிச்சீக..?
    அவ்வளவு அதிர்ச்சியான அமைதிவர
    என்னதான்! ...என்னதான்!! என்னதான்!!!.......

    எலந்தைக் கிளையிலிருந்து
    ஏதோ விழுந்தது நீரில்.
    கண் திறவாத
    அணில் குட்டி அது.\\\\

    இதற்குத்தான் ஒருவருக்குப் “பிடிக்காததெல்லாம்
    செய்யக்கூடாதென்பது
    பாத்தீகளா!வேறு வழிதெரியாமக் குதிச்சிடிச்சு
    பாவம் அந்தப் பெண்குட்டி



    கூட்டில்
    விட்டுச்செல்ல மனமில்லை.
    என்
    கூடவேயிருந்து மாளட்டும்.\\\\\
    எப்ப கொண்டுவந்து சேத்தீக சிங்கையில..?
    கண்ணுல காட்டவே இல்ல....
    சாரல்குட்டி...............அப்பாவுக்கு.......
    உஷ் .... நான் தனியாகப் பேசிக்கிறேன் அப்புறம்சாரலுடன்.....

    ReplyDelete
  8. அண்ணே நீங்கள் தேர்ந்தெடுத்த சொற்கள் அவ்வளவு கச்சிதம் ..
    கவிதையும் அப்படியே அதன் காரத்தோடு உள்ளது ..
    வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  9. அருமையான கவிதை
    கூடவே இருந்து அதுவும் சிறப்பாக வாழட்டும் என
    முடித்திருக்கலாமோ

    ReplyDelete
  10. ''..கூட்டில்
    விட்டுச்செல்ல மனமில்லை.
    என்
    கூடவேயிருந்து மாளட்டும்...''

    என்னோட இருந்து தொலைஞ்சு போகட்டும் என்பது போல...உள்ளது.
    வார்த்தைகள் மிக வித்தியாசமாகவே உள்ளது. நன்றாக உள்ளது வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. கூடவே இருந்து மகிழ்வாய் வாழ்ந்துமுடித்து மாளட்டும், தனிமையின் துயரிலிருந்து மனம் இனியேனும் மீளட்டும்.

    மனம் கொள்ளை கொண்ட கவிதை. பாராட்டுகள் சத்ரியன்.

    ReplyDelete
  12. மாப்பு!, வீட்டுல மனைவிய, குழந்தைய விட்டுட்டு, ஏரிக்கரையில வந்து யாருக்காகவோ என்னமா பீல் பண்றீங்க!

    ReplyDelete
  13. தவமிருந்ததால் கிடைத்தது அன்பான அணில்குட்டி.

    வாழட்டும் மகிழ்வுடன்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.