Mar 12, 2012

அவளுக்கு அமுதென்றும் பேர் - 06பேசிப்பேசி
இமைகளின் மேல்
இமயக்கனவை
ஏற்றி விட்டு
நள்ளிரவு ஆகிப்போச்சு
“உறங்கு போடா” - என
இரக்கமற்ற சொல் உதிர்க்கும் அவளின்,
தீயில் 
ஊறிய 
பலாச்சுளைகளை
என் செய்வேனோ
தொலைதேசத்தில்
இருந்தபடி?


***


இரும்புக் கொல்லனின்
நெருப்பு உலையை எரிக்கும்
தோல் துருத்தியின் காற்றைப்போல

எரிக்கிறது
என் இரவுகளை
தொலைபேசியில்
துளைத்து வரும்
ஒருத்தியின்  ஏக்க மூச்சுக்காற்று .

***31 comments:

 1. என்றோ
  ஒரு தினம் அல்ல
  நித்தமும் அனுபவிக்கிறேன்
  இந்த வரி(லி)யை

  ஆழாமாய் தொட்ட கவிதை கவிஞரே

  ReplyDelete
 2. வாவ்...அருமை எங்கு கண்{ணி}வைத்துப் பிடித்தீர்கள இந்தக் கோவைப்பழத்தை?
  அப்புறமாஆய் கிறேன்...மீண்டும்........

  ReplyDelete
 3. தீயில் ஊறிய பலாச்சுளை
  வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்
  பிரமாதமான கவிதையாகத் தருகிறீர்கள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. தீயில்
  ஊறிய
  பலாச்சுளைகளை
  என் செய்வேனோ
  இங்கிருந்தபடி?\\\\\\

  தமிழ்! துப்புகிடைத்திருக்கிறது
  இது சிங்கையில் அல்ல...
  இரவிரவாய்த் தூங்காமல் ஸ்கைப்பில்
  நடக்கிறது பேச்சு...


  எரிக்கிறது
  என் இரவுகளை
  தொலைபேசியில்
  துளைத்து வரும்
  ஒருத்தியின் ஏக்க மூச்சுக்காற்று \\\\\

  அடா சாமி..ஒன்று பார்க்கிறது,மற்றொன்று
  கேட்கிறது இன்னும் ஏதாவது மிச்சம்?
  சும்மாவா? கண்ணண் அல்லவா?
  பாவம் செய்தாலி!இப்படிப் பண்ணலாமா?மனவிழியே?

  .

  ReplyDelete
 5. மிக அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுதுங்கள்

  ReplyDelete
 6. //இரும்புக் கொல்லனின்
  நெருப்பு உலையை எரிக்கும்
  தோல் துருத்தியின் காற்றைப்போல
  -----------------------

  எரிக்கிறது
  என் இரவுகளை
  தொலைபேசியில்
  துளைத்து வரும்
  ஒருத்தியின் ஏக்க மூச்சுக்காற்று//
  -----------------
  அடிக்கோடிட்டிள்ள இரண்டுமே
  ஒப்புமை அருமை! இரண்டுமே
  அனல் காற்று!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 7. காதலின் ஏக்கம் சுடச் சுட....வரிகள்கூடச் சுடுகிறதே.கண்ணழகரே இது பொல்லாத ”தீ” கவனமப்பு !

  கலா கவனிச்சீங்களோ லேபிளை.அனுபவமாம் சொல்றார் !

  ReplyDelete
 8. ’’ தீயில் ஊறிய பலாச்சுளை “

  இந்த அக்கிரமத்தை கேக்க யாருமே இல்லையா? அதுக்கு சிகப்பு கலர் வேற மாத்தி,,ஏங்க படிக்கிறங்க நிலைமையை கொஞ்சம் யோசிக்கனும்..உங்க ஃபீலிங்கு எங்களை தாக்கிடுது பாருங்க செய்தாலி சொன்ன மாதிரி..வாடா போடான்னு மருவாதி இல்லாமலா பேசறாங்க சாமி..

  ReplyDelete
 9. // எரிக்கிறது
  என் இரவுகளை
  தொலைபேசியில்
  துளைத்து வரும்
  ஒருத்தியின் ஏக்க மூச்சுக்காற்று .//

  பார்த்துங்கோ சாம்பலாயிடப்போறீங்க..

  ReplyDelete
 10. கவிதை ரெண்டும் காதலில் ஏக்கத்தையும் தேடலையும் தேவையையும் நல்லா தெளிவாவே சொல்லுங்க...ரெண்டும் சூடாத சூரியன்..

  ReplyDelete
 11. நயமாகச் சொன்னீர்கள் கவிஞரே

  ReplyDelete
 12. கலா எனக்கு தான் ஆரம்பத்திலே இருந்தே டவுட்..பொண்ணு சிங்கையும் இல்லை இந்தியாவும் இல்லை..தலைமுடி கலரை பார்த்தீங்களா..பய புள்ள வேற எங்கயோ எக்கச்சக்கமா சிக்கிடுச்சி போல...எரியுது புகையுதுன்னு ஒரே நெருப்பு மண்டலமா இருக்கு..வாங்க நம்ம ஓடிடலாம்..மனுசன் கண்ணுல நம்மையும் கோபத்தில எரிச்சிட போறார்.

  ReplyDelete
 13. பெருமூச்சிக்கும் ஒரு பெரு விளக்கம் அருமை அருமை .

  ReplyDelete
 14. வாங்க நம்ம ஓடிடலாம்..மனுசன் கண்ணுல நம்மையும் கோபத்தில எரிச்சிட போறார்.\\\\
  கோபமா?அவருக்கா? அதுவும் நம்மளைப்போல உளள சிட்டுகளிடமா?

  தமிழ்! நம் அழகுக்கு நம்மளைப் பார்த்தால் ....எரிக்கவா செய்வார்?
  அதனால..அவர் கண்ணுல சிக்காம ஓடி...மறைந்தே இருப்போம்
  என்ன ஹேமா சரியா?நீயும் வருகிறாயா?

  ReplyDelete
 15. அயல் நாட்டு வாசம்,
  உயிர்ப்பு இல்லாத சுவாசம்

  மாம்ஸு கிளப்புறிய போங்கள் ...

  ReplyDelete
 16. //என்றோ
  ஒரு தினம் அல்ல
  நித்தமும் அனுபவிக்கிறேன்
  இந்த வரி(லி)யை//

  வாங்க செய்யது,

  புரிகிறது.நிலை மாறும்.

  ReplyDelete
 17. //வாவ்...அருமை எங்கு கண்{ணி}வைத்துப் பிடித்தீர்கள இந்தக் கோவைப்பழத்தை?
  அப்புறமாஆய் கிறேன்...மீண்டும்........//

  பழத்தை கண்ணில் பிடித்ததோடு .... சரி. ஹூம்ம்ம்!

  ReplyDelete
 18. வணக்கம் ரமணி ஐயா.

  நன்றிங்க.

  ReplyDelete
 19. பெண் மனதிற்குள் வந்துவிட்டாலே

  இதயத்தை இமயத்திற்கு
  ஒப்புமை கூறுவார்கள் கவிஞர்கள்

  நீங்கள் ஒரு படி மேலே சென்று
  அவளின் மூச்சு காற்றில் எறிகிறீர்கள் .......

  அருமையான உவமையான
  உவகை தரும் வரிகள் .....

  படிக்கும் போதே
  பரவசபடுத்தும் வரிகள்

  உணர்ந்ததால் உதிர்த்தவை ....................

  ReplyDelete
 20. பய புள்ள.. இன்னும் வளச்சு,வளச்சு.. பொண்ணுங்கள பத்தியே எழுதி,எழுதி மாயுதே.. ஏய்..என்ன ஆச்சு???

  ReplyDelete
 21. கவிதை அழகு!

  http://priyamudan-prabu.blogspot.com/2011/07/blog-post_04.html

  same feeling...:)

  ReplyDelete
 22. பாராட்டுக்கள்
  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 23. அண்ணன் வலைப்பக்கம் வந்தாலே ஒரு அஞ்சு வயசு குறையும் என்பதில் சந்தேகம் இல்லை ..
  அப்படி ஒரு ஈர்ப்பு வரிகளில் ..
  என்ன பண்ணுவது சின்ன பையனா இருக்கறதுனால இந்த சமாசாரம் எதுவுமே விளங்கமாட்டேங்குது,,,
  நானும் ஒரு நாள் பெரியவனா ஆவேன் .. அன்னைக்கு பார்த்துக்கொள்கிறேன் ..

  அண்ணே கவிதையில் ஒரு ஈர்ப்பும் நெருக்கமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை ..

  ReplyDelete
 24. ஹா ஹா ஹா ஹா நான் இத வழியில் இருந்து தற்காலிகமா தப்பிச்சுட்டேன் ஹி ஹி நான் என் செல்லம கூட இந்தியாவில்தான் இறுகேன் டண்டடைங்.....[[அருமையான வரி[லி]கள்]]

  ReplyDelete
 25. ஏக்கத்தால் தாக்கிய ஏவுகணைக் கவிதை. உங்கள் துன்பத்தை நாங்கள் ரசிக்கிறோம் கவிதையாய். பாராட்டுகள்.

  ReplyDelete
 26. எரிக்கிறது
  என் இரவுகளை
  தொலைபேசியில்
  துளைத்து வரும்
  ஒருத்தியின் ஏக்க மூச்சுக்காற்று .//அருமையான வரிகள்

  ReplyDelete
 27. UUUhhh!...so...hot... love!
  congratz..
  Vetha. Elangathilakam.

  ReplyDelete
 28. எறிக்கிற இரவுகளை குளிர்விப்பதும் ஒரு கவிஞனின் கையில்தான் உள்ளது.நன்றி வணக்கம்.

  ReplyDelete
 29. காதல் சொட்டும் கவிதை.

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.