Nov 15, 2009

நத்தை


மழை ஓய்ந்த பின்னிரவு
அரை தூக்கத்தில் பிறை நிலா

யாருக்கு பயந்தோ
இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறது
கூட்டை முதுகில் சுமந்தபடி
நத்தை


அதை பின்தொடர்ந்து
போய்க்கொண்டிருக்கிறது
என் தூக்கத்தைச் சுமந்தபடி

உன்

நினைவு.!

46 comments:

  1. /அதை பின்தொடர்ந்து
    என் தூக்கத்தைச் சுமந்து
    போய்க்கொண்டிருக்கிறது
    உன்
    நினைவு./

    அழகான கற்பனை

    ReplyDelete
  2. எனக்கு ...

    நிறைய புரியுது நண்பா

    ReplyDelete
  3. //அதை பின்தொடர்ந்து
    என் தூக்கத்தைச் சுமந்து
    போய்க்கொண்டிருக்கிறது
    உன்
    நினைவு.//

    நண்பா!

    அசத்தல். வேறு என்ன சொல்ல.

    ReplyDelete
  4. மழை,மழை இந்த மழை வந்தால்.....
    ஐயோ!!!
    ஓ..நினைவு மூட்டையை சுமந்து
    திரியிறீர்களோ!கவனம் கீழே
    விழுந்து உடைந்தால் அப்புறம்???
    எல்லாம் அம்பலம்.
    அப்படியாவது உடைந்தால்....
    வராமலா போகும் ஒரு சந்தர்ப்பம்!!!

    அழகான வரிகள் சத்ரியா
    மனதில் ஊர்கின்றன.
    ஹேமா மழை வந்தாலும்,
    மழை நின்றாலும் பொழியுதே
    கவிதை நிறுத்தவே முடியாதா?

    ReplyDelete
  5. கர்ப்பனை தூள்ள்ள்ள்ள்

    ReplyDelete
  6. ம்ம்

    ஸ்ஸ்ஸ்ஸப்பா....

    எப்பிடிப்பா நானும் தலைய முட்டி முட்டி சுவர் உடைஞ்சதுதான் மிச்சம் கவிதை வரவே மாட்டேன்னுது...

    வாழ்கப்பா வாழ்க நின் கவித்திறமை...

    ReplyDelete
  7. அருமையான பார்வை மாப்ள.வெளிப்பாடும்!

    ReplyDelete
  8. கலா மழை பெஞ்சாலும் கவிதை.
    தூறினாலும் கவிதை.நின்னாலும் கவிதை.இது நிக்கணும்ன்னா சாரல் குட்டி ஒரு தளம் தொடங்கணும்.
    இருக்கட்டும் இருக்கட்டும்.எவ்ளோ நாளைக்குன்னு பாக்கலாம் இவரோட ...!

    சத்ரியன்,கவிதை அருமை.தன் வீட்டைத் தானே சுமக்கும் நத்தைபோலத் தன் காதலைத தானே சுமக்கும் அருமையான் காதலன் நீங்க.

    ReplyDelete
  9. //அரை தூக்கத்தில் பிறை நிலா//

    அருமையான வரிகள்.

    /கூட்டை முதுகில்
    சுமந்தபடி இடம்பெயர்ந்து
    கொண்டிருக்கிறது நத்தை

    அதை பின்தொடர்ந்து
    என் தூக்கத்தைச் சுமந்து
    போய்க்கொண்டிருக்கிறது
    உன்
    நினைவு./

    நத்தையிட்ட ஈரம்போல்
    கசிந்த நினைவுகள்..

    ReplyDelete
  10. இன்னம் கொஞ்சம் அழுத்தமும் , மறைமுகமாகவும் எழுதி இருந்தால் இது பன்முகத்தன்மையை வெளிக்கொணர்ந்திருக்கும் . அருமை மாம்ஸ்

    ReplyDelete
  11. அழகு சத்ரியா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. //அழகான கற்பனை..//

    நன்றி பாலா.

    ReplyDelete
  13. //அருமைங்கண்ணே..//

    நன்றி தங்க(ம்)ச்சி.

    ReplyDelete
  14. //எனக்கு ...//

    வர்ற ஆத்திரத்துக்கு என்னென்னமோ... திட்டனும் போல இருக்குதா ஜமால்?

    //நிறைய புரியுது நண்பா//

    அப்புறமென்ன... அழுதுட்டுப் போகவேண்டியது தானே..!

    ReplyDelete
  15. //அசத்தல். வேறு என்ன சொல்ல.//

    நவாஸ்,

    நன்றி.

    ReplyDelete
  16. //அழகான வரிகள் சத்ரியா.//

    நன்றி கலா,

    //
    ஹேமா மழை வந்தாலும்,
    மழை நின்றாலும் பொழியுதே
    கவிதை நிறுத்தவே முடியாதா?//

    அப்படி முடியும் என்ற நாளில் ... உலகில் காதல் அற்று போய் விடும். கலாவிற்கும் , ஹேமாவிற்கும் சம்மதமா?

    ReplyDelete
  17. //கற்பனை தூள்ள்ள்ள்ள்..//

    நன்றி, ஞானம்..!

    ReplyDelete
  18. //ம்ம்

    ஸ்ஸ்ஸ்ஸப்பா....

    எப்பிடிப்பா நானும் தலைய முட்டி முட்டி சுவர் உடைஞ்சதுதான் மிச்சம் கவிதை வரவே மாட்டேன்னுது...

    வாழ்கப்பா வாழ்க நின் கவித்திறமை...//

    வசந்த்,

    நான் என்னிக்காவது "வசந்த்" மாதிரி எழுத முடியலியேன்னு எதையாவது உடைச்சிருக்கிறேனா...?

    ஆனாலும் நீங்க உடைச்சிருக்கிறீங்க...

    முயற்சி திருவினையாக்கும்..!

    (பின் குறிப்பு:‍ கவிதை என்பது யாதெனில்..."உன்னருகே நானிருந்தால்" 'ன்னு ஒரு படம்.அதில், நடிகர் பார்த்திபன் சொல்வார். என்னவென்று கேட்டுக் கொள்ளவும்.)

    ReplyDelete
  19. //அருமையான பார்வை மாப்ள.வெளிப்பாடும்!//

    பா.ரா,

    இருட்டுல நத்தைய மிதிக்காம பாத்தேனே அந்த பார்வைய சொல்றீங்களா சம்மந்தி...?

    நன்றி.

    ReplyDelete
  20. //கலா மழை பெஞ்சாலும் கவிதை.
    தூறினாலும் கவிதை.நின்னாலும் கவிதை.இது நிக்கணும்ன்னா சாரல் குட்டி ஒரு தளம் தொடங்கணும்.
    இருக்கட்டும் இருக்கட்டும்.எவ்ளோ நாளைக்குன்னு பாக்கலாம் இவரோட ...!//

    ஹேமா,

    சத்ரியன் இறக்கும் வரை... படிக்கலாம்.

    //சத்ரியன்,கவிதை அருமை.தன் வீட்டைத் தானே சுமக்கும் நத்தைபோலத் தன் காதலைத தானே சுமக்கும் அருமையான் காதலன் நீங்க.//

    ...அவளும் சுமக்கக் கூடும்...!

    ReplyDelete
  21. //நத்தையிட்ட ஈரம்போல்
    கசிந்த நினைவுகள்..//

    ச.சங்கர்,

    இந்தக் கவிதை அழகா இருக்கே..!

    ReplyDelete
  22. //இன்னம் கொஞ்சம் அழுத்தமும் , மறைமுகமாகவும் எழுதி இருந்தால் இது பன்முகத்தன்மையை வெளிக்கொணர்ந்திருக்கும் . அருமை மாம்ஸ்//

    பாலா மாப்ள,

    என் தியேட்டருக்கு வர்றவங்க " C " க்ளாஸ் ஆடியன்ஸ் அதிகம். அதனால, "A,B,C " எல்லா தரப்பினருக்கும் புரியட்டுமேன்னுதான்.

    நன்றி.

    ReplyDelete
  23. //அழகு சத்ரியா வாழ்த்துக்கள்.//

    நன்றிங்க, வேல்கண்ணன்.

    ReplyDelete
  24. நல்லக் கவிதை சத்ரியன்.

    //...அவளும் சுமக்கக் கூடும்...!//

    பார்ர்ர்ரா..

    ReplyDelete
  25. நல்லக் கவிதை சத்ரியன்.

    //...அவளும் சுமக்கக் கூடும்...!
    பார்ர்ர்ரா..//

    வாங்க அரங்கபெருமாள்,

    உங்களின் மீள்வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  26. வாங்க மணாளன் ,
    முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க

    அந்த குறியீடுதான் என்னவென்று எனக்கு புரியவில்லை.

    ReplyDelete
  27. அட ! மூஞ்சிய சிரிச்சா மாதிரி வேச்சுக்கிறதா அர்த்தம் தலைவா !

    ReplyDelete
  28. //அட ! மூஞ்சிய சிரிச்சா மாதிரி வேச்சுக்கிறதா அர்த்தம் தலைவா !//

    மன்னிச்சிக்குங்க மணாளா,

    இந்த மண்டையனுக்கு இது புரியாம போச்சி.

    ReplyDelete
  29. எனது முதல் வருகையிலேயே அசந்து போக வச்சுட்டீங்களே நண்பா

    ம்ம் நானெல்லாம் என்ன எழுதுறேன்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  30. யப்பா! கூடுக்குள் நத்​தையாக மனம் கவி​தைக்குள் சுருண்டு ​கொள்கிறது!!

    ReplyDelete
  31. நல்லாயிருக்கிறது சத்ரியன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. அதை பின்தொடர்ந்து
    போய்க்கொண்டிருக்கிறது
    என் தூக்கத்தைச் சுமந்தபடி

    உன்
    நினைவு.!




    supara irukuga anna

    ReplyDelete
  33. 'நத்தையைத் தொடரும் நினைவு ' மிக அருமையான கற்பனை.

    ReplyDelete
  34. அழகான கற்பனை

    ReplyDelete
  35. //எனது முதல் வருகையிலேயே அசந்து போக வச்சுட்டீங்களே நண்பா
    ம்ம் நானெல்லாம் என்ன எழுதுறேன்

    வாழ்த்துக்கள்
    விஜய்..////

    வாங்க விஜய்,

    உங்களிடம் " தன்னடக்கம் " மிகுதியாய் இருக்கிறது.
    அதற்காக உங்களுக்கு வாழ்த்துகள்.

    என்னையும் ஒருமுறை வந்து பார்த்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  36. //யப்பா! கூடுக்குள் நத்​தையாக மனம் கவி​தைக்குள் சுருண்டு ​கொள்கிறது!!//

    வாங்க ஜெகன்,

    நொம்ப நாளா நம்ம ஊரு பக்கம் பயணத்தையே காணோம். நல்லவேளை இப்பவாவது எங்களை ஞாபகம் வந்ததே.

    நன்றி மக்கா..!

    ReplyDelete
  37. //நல்லாயிருக்கிறது சத்ரியன்! வாழ்த்துக்கள்!

    வாங்க யாழினி,

    வேலை மிகுதி போல தெரிகிறது. நீ........ண்ட இடைவெளி...க்கப்புறம் வந்திருக்கீங்க.

    நன்றி சகோதரி.

    ReplyDelete
  38. //அதை பின்தொடர்ந்து
    போய்க்கொண்டிருக்கிறது
    என் தூக்கத்தைச் சுமந்தபடி

    உன்
    நினைவு.!
    சூப்பரா இருக்குங்க அன்ன//

    காயு,

    நன்றிம்மா.

    ஏன் ரொம்ப நாளா உங்க புலொக் புது இடுகைக்காக காத்துக்கிட்டிருக்கு

    ReplyDelete
  39. //'நத்தையைத் தொடரும் நினைவு ' மிக அருமையான கற்பனை.

    ஜெஸ்வந்தி,

    நன்றி.

    அது கற்பனை இல்லை. நிஜம். (யாருக்கும் சொல்லிடாதீங்க).
    உறக்கம் இல்லாத இரவுகள் ' நத்தை'யைப் போல்தான் நகருகிறது. ம்ம்ம்ம்...என்ன செய்ய?

    ReplyDelete
  40. //அழகான கற்பனை//

    நன்றி தியா.

    ReplyDelete
  41. எங்க?

    எங்க பக்கம்!!

    ஏங்க?

    ReplyDelete
  42. ஆகா...லேட்டா பார்த்துட்டேனே...நத்தைக்கூட ரொம்ப தூரம் போயிடுச்சு....

    கவிதை...ரசிக்கிறேன். நத்தை வேகத்தில்....

    ReplyDelete
  43. //எங்க?
    எங்க பக்கம்!!
    ஏங்க?//

    ச.சங்கர்,

    வந்துட்டேன்.

    ReplyDelete
  44. //ஆகா...லேட்டா பார்த்துட்டேனே...நத்தைக்கூட ரொம்ப தூரம் போயிடுச்சு....

    கவிதை...ரசிக்கிறேன். நத்தை வேகத்தில்....//

    பாலாசி,

    எப்ப வந்தாலும் என் வாசல் திறந்தே இருக்கிறது.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.